புது பிசினஸ் தொடங்கும் மீனா, அவமானப்படுத்தும் மனோஜ்-விஜயா - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து-மீனா இருவரும் கிரிஷ் பாட்டி வந்து சென்றதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதனால் மனோஜ், முத்துவை குறை சொன்னார். அதற்குப்பின் மனோஜ், கடையில் ராணி செய்த வேலையை பற்றி சொன்னார். ரவி- முத்து எல்லோருமே திட்டினார்கள். அதற்கு மனோஜ், என்னுடைய பிரச்சினை பார்த்துக் கொள்ள தெரியும் என்றார். அதற்கு பின் முத்து, தன் நண்பர்களிடம் பேசி கொண்டு இருந்தார். அப்போது முத்து நண்பர் அப்பா ஆன செய்தியை சொல்லி சந்தோசப்பட்டார்.
நேற்று எபிசோட்டில் முத்துவின் நண்பர்களும் , மீனாவின் நண்பர்களுமே குழந்தையை பெற்றுக் கொள்ளும் விஷயத்தைப் பற்றி பேசினார்கள். இதனால் அவர்களுக்குமே குழந்தையின் மீது ஆசை அதிகமாகின்றது. பின் ட்ரெண்டிங் வீடியோ எடுப்பதற்காக சுருதி, கணவன் மனைவி தலையில் பூ வைக்க வேண்டும் என்று சொன்னார். இதனால் வீட்டில் உள்ள ஒவ்வொரு ஜோடியுமே பூ வைக்க, அதை வீடியோவாக சுருதி எடுத்தார். ஆனால், முத்து மட்டும் வீட்டில் இல்லை. அதற்குப்பின் கிரிஷ் விஷயத்தை பற்றி அண்ணாமலை கேட்டார்.
சிறகடிக்க ஆசை:
அதற்கு மீனா, க்ரிஷ் பாட்டி வந்து சென்ற விஷயத்தை எல்லாம் சொன்னார். கடைசியில் முத்து, மீனாவிற்காக பூ வாங்கி தந்தார். அதை பார்த்த மீனா ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் அதை முத்து, மீனாவின் தலையில் வைத்தார். பின் இருவரும் ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மேலே சீக்கிரம் ரூம் கட்டிவிடலாம் என்று இருவருமே தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் சத்யா, கிரிஷுக்காக பேரிச்சம்பழம் வாங்கி வந்து முத்துவிடம் கொடுக்கிறார். முத்து-மீனா இருவருமே அதை எடுத்துக்கொண்டு கிரிஷை பார்க்க மகேஸ்வரி வீட்டிற்கு போகிறார்கள். அங்கிருந்த கிரிஸ் அம்மா, முத்து- மீனாவிடம் எதுவுமே பேசவில்லை. இருந்தாலுமே, கிரிஸ்யிடம் முத்து ஜாலியாக விளையாடுகிறார். அவர்களை வெளியே அனுப்புவதில் கிரிஷ் அம்மா குறியாக இருந்தார். இதை கவனித்த மீனா, முத்துவை அங்கிருந்து அழைத்து வந்து விடுகிறார். அதற்குப்பின் ரோகினி, நான் சொல்வதை போல செய். அவர்களை கிரிசிடம் பழக விடாதே என்று தன்னுடைய அம்மாவை மிரட்டி விட்டு செல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மீனா, விழாக்கள் நேரங்களில் பூவை கொடுத்து காசை வீணாக்குவதற்கு பதில் புது புதிதாக பழங்களைக் கொடுக்கலாம் என்று யோசிக்கிறார். பின் அந்த புது பிசினஸ் ஐடியாவை முத்து விடம் சொல்கிறார் மீனா. பின் வீட்டில் இதைப் பற்றி முத்து சொல்கிறார். வழக்கம்போல மனோஜ்- விஜயா இருவருமே ஏளனமாக மீனாவை பேசுகிறார்கள். ஆனால் அண்ணாமலை திட்டி மீனாவை ஆசீர்வாதம் செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது