ரோகினி பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டிய மீனா, கோபத்தில் முத்து சொன்ன வார்த்தை - சிறகடிக்க ஆசை

By subhashini · 22/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, கோவிலில் சாமியாடி சொன்ன வார்த்தையால் தான் மீனா இப்படி இருப்பாரோ? என்ற கேள்வி முத்துவுக்குள் எழுகிறது. இன்னொரு பக்கம் மனோஜ், தன்னுடைய புதிய கம்பெனிக்கு பிஏவை எடுக்க வேண்டும் என்று சில பேரை இன்டர்வியூ எடுத்தார். அப்போது ஜீவா என்று தன்னுடைய முன்னாள் காதலியின் பெயர் வைத்திருக்கும் பெண்ணை செலக்ட் செய்தார். பின் மனோஜ், நிறைய கனவுகளை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். ரோகினி, உள்ளுக்குள் மீனா உண்மை சொல்லிவிடுவாளா? என்று புலம்பி கொண்டிருந்தார்.

முத்து, மீனாவிற்கு என்ன நடந்தது என்று கண்டுபிடித்து விட்டேன் என்றார். இதைக் கேட்டு ரோகினி ரொம்பவே பதறினார். வீட்டில் உள்ள எல்லோருக்குமே ஒன்றும் பெரிய புரியவில்லை. அப்போது முத்து, சாமியாடி சொன்ன வார்த்தையை கேட்டு தான் மீனா இப்படி இருக்கிறார். நல்ல சாமியாரை பார்த்தால் சரியா போகும் என்றார். சுருதி, டாக்டரை போய் பாருங்கள் என்றார். வழக்கம்போல விஜயா கிண்டல் அடித்தார். அதற்குப்பின் முத்து, மீனாவை அழைத்துக் கொண்டு ஒரு சாமியாரை பார்க்க வந்தார். அப்போது முத்துவை வெளியே இருக்க சொல்லிவிட்டு மீனாவிடம் அந்த சாமியார் பேசி இருந்தார்.

சிறகடிக்க ஆசை:

சாமியார், நீ குற்ற உணர்ச்சியில் இருக்கிறாய். எதைப் பற்றியும் கவலைப்படாதே. இதை நான் வெளியில் சொல்லவில்லை என்றார். பின் முத்து, ஒன்றும் இல்லை என்று கையி கயிறு கட்டி விட்டார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி தன்னுடைய மகளுக்கு திருமணம் பற்றி பேசுவதற்காக சாமியாரை பார்க்க வந்தார். அதற்கு அந்த சாமியார், உன் மகளாகவே திருமணம் செய்து கொள்வாள். இதனால் நீ போலீஸ் ஸ்டேஷன் செல்ல கூட சந்தர்ப்பம் இருக்கிறது என்றார். கடைசியில் மீனா, ரோகிணியை பற்றிய எல்லா உண்மையும் சொல்லினார். இதைக் கேட்டு முத்து ஷாக் ஆனார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, ரோகினி பற்றிய உண்மை எல்லாம் வீட்டில் சொல்கிறார். இதை கேட்ட அண்ணாமலைக்கு நெஞ்சு வலி வருகிறது. அதோடு ஆத்திரம் தாங்க முடியாமல் முத்து, ரோகினி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து ரோகினி இறந்து விடுகிறார்.
பின் போலீஸ் முத்துவை கைது செய்கிறார்கள். ஆனால் இதெல்லாம் மீனாவின் கனவு. உண்மை சொன்னால் இதுதான் நடக்கும் என்று மீனா நினைத்து வருத்தப்பட்டு அழுகிறார். இதை பார்த்த ரோகினி, தயவுசெய்து மறந்துவிடுங்கள். வீட்டில் சொல்லாதீர்கள் என்றெல்லாம் நடிக்கிறார். கோபத்தில் மீனா, என்னால் உன்னை மாதிரி நடிக்க முடியாது. நான் என்னுடைய அம்மா வீட்டிற்கு போகிறேன் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் முருகன், வித்யா இடையே அனிமோன் பஞ்சாயத்து நடப்பதால் முத்து. தீர்த்து வைக்கிறார் பின் முருகன் நிறைய குடித்து இருந்தால் அந்த பாட்டிலை பிடிங்கி சரக்கை முத்து குடித்து விடுகிறார். பின் வீட்டுக்கு வந்த முத்து நடந்தது எல்லாம் சொல்கிறார். இதுதான் சந்தர்ப்பம் என்றும் மீனா, முத்துவிடம் சண்டை போடுகிறார். மீனா, முத்துவை குடிகாரன் என்றெல்லாம் சொல்லி இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகிறது. ஓரு கட்டத்தில் முத்து, குடிக்க போகிறேன் என்கிறார். குடித்தால் நான் வீட்டில் இருக்க மாட்டேன் என்று மீனா சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full