சிந்தாமணி சொன்ன டீலிங்க்கு ஒத்துக்கொள்வாரா மீனா? அதிர்ச்சியில் உறைந்த விஜயா - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், நான் எல்லாம் சொல்லிவிட்டேன். ஆனால், வீட்டில் யாரும் கேட்கவில்லை என்றார். அந்த சமயம் பார்த்து மனோஜின் வக்கீல் வந்து விட்டார். அவர் ரோகினி- மனோஜ் இருவரும் சேர்ந்து இருப்பதை பார்த்து கோபப்பட்டார். பின் இதைப் பற்றி வக்கீல் போன் செய்து விஜயாவிடம் சொன்னார். விஜயா ஷாக் ஆனார். அதற்குப்பின் முத்துவின் நண்பர் அதிகாரி, பைனான்சியர் வீட்டிற்கு போகலாம் என்று அழைத்தார். முத்துவும் தன்னுடைய தந்தையிடம் நடந்ததை எல்லாம் சொல்லி அங்கிருந்து சந்தோசமாக கிளம்பினார்.
முத்து- மீனா இருவரும் தன்னுடைய நண்பர் வருமான வரித்துறை அதிகாரியை அழைத்துக் கொண்டு பைனான்சியர் ஆபீஸ்க்கு போனார்கள். அங்கு அதிகாரி நண்பர், பைனான்சியரை சந்தித்து முத்துவின் வீட்டை அபகரித்த விஷயத்தை பற்றி விசாரித்தார். ஒரு கட்டத்தில் பைனான்ஸ் உண்மையை எல்லாம் சொல்லிவிட்டார். அப்போ அவர், நான் சிந்தாமணி சொல்லித்தான் செய்தேன். பத்திரம் அவரிடம் தான் இருக்கிறது. அவர்தான் வட்டி மேல் வட்டி அதிகமாக போட சொல்லி வீட்டிற்கு சீல் வைக்க சொன்னார் என்று எல்லாத்தையும் சொல்லி விட்டார். இதை கேட்டு முத்து-மீனா இருவரும் ஷாக் ஆனார்கள்.
சிறகடிக்க ஆசை:
பைனான்சியர், சிந்தாமணிக்கு போன் செய்து முத்துவின் வீட்டு பத்திரத்தை கொடுக்க சொல்லி கேட்டார். சிந்தாமணி, டாக்குமெண்ட் எல்லாம் கரெக்டா இருக்கிறது. என்னுடைய பணத்தை கொடுக்கும் வரை நான் வீட்டை தரமாட்டேன் என்று மிரட்டினார். இதை கேட்ட அதிகாரி, சட்டப்படி தான் கொண்டு செல்ல முடியும். தைரியமாக இருங்கள் என்றார். இன்னொரு பக்கம் விஜயா, எதற்காக ரோகினி கடைக்கு வந்தாள்? என்று கேட்டார். மனோஜ், கடையில் அதிகமாக எலி இருப்பதால் அதை பிடிக்க பூனை கொண்டு வந்தார் என்றார். இருந்தாலும் விஜயா, ரோகிணி கடைப்பக்கம் வரக்கூடாது. உனக்கு விவாகரத்து நடக்க வேண்டும் என்றார். ஜீவா, கடையில் cctv இருக்கிறது. நீங்கள் வீட்டில் இருந்தபடியே மனோஜ் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம் என்று ஐடியா கொடுத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சிந்தாமணியை ரோட்டில் சந்தித்து முத்து-மீனா இருவரும் பேசுகிறார்கள். அப்போது சிந்தாமணி, என்னுடைய பணத்தை கொடுத்து விட்டால் நான் பத்திரத்தை
கொடுக்கப் போகிறேன். தேவையில்லாமல் எதற்கு இந்த பேச்சு என்று கேட்கிறார். முத்து-மீனா இருவருமே சிந்தாமணியின் மீது அதிகமாக கோபப்படுகிறார்கள். அப்போது சிந்தாமணி, என்னுடைய தலைவர் பதவியை விட்டு தந்தால் உன்னுடைய பத்திரத்தை கொடுக்கிறேன் என்று டீலிங் பேசுகிறார். அதைக் கேட்டு மீனாவும் மனம் மாறுகிறார்.
சீரியல் ட்ராக்:
முத்து, அதெல்லாம் முடியாது என்று அங்கிருந்து மீனாவை அழைத்துக் கொண்டு செல்கிறார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த முத்து-மீனா இருவரும் சிந்தாமணி செய்த தில்லாலங்கடி வேலை எல்லாவற்றையுமே சொல்கிறார்கள். குறிப்பாக, இந்த நிலைமைக்கு காரணம் சிந்தாமணி தான் என்று உண்மையை சொல்கிறார்கள். இதைக் கேட்டு விஜயா ஷாக் ஆகிறார். அண்ணாமலை, விஜயாவை திட்டுகிறார்
அதற்குப்பின் மொட்டை மாடியில் மீனா, நான் தலைவர் பதவியில் இருந்து விலகப் போகிறேன். நம்முடைய வீட்டை மீட்க வேண்டும் என்கிறார். முத்து, உன்னை நம்பி ஓட்டு போட்டவர்களுக்கு உண்மையாக இரு. சிந்தாமணியை பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவுரை சொல்கிறார்