சாமியாடி சொன்னதை கேட்டு ஆடிப்போன மீனா, பயத்தில் புலம்பும் ரோகினி - சிறகடிக்க ஆசை

By subhashini · 11/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கிரிஷ் பெரியப்பா, பெரியம்மா இருவருமே லக்ஷ்மிக்கு ஃபோன் செய்து கிரிஷை பார்க்க வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால் லட்சுமி முடியாது என்று போனை வைத்து விட்டார். இன்னொரு பக்கம் மொட்டை மாடியில் முத்து, மனோஜ், ரவி மூன்று பேருமே சரக்கு அடித்துக் கொண்டு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த அண்ணாமலை, குடும்பத்தை பற்றியும் மனைவியின் முக்கியத்துவத்தை பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார். கிரிஷை பார்ப்பதற்கு லட்சுமி ஒத்துக் கொள்வதால் கிரிஷ் பெரியப்பா, பெரியம்மா இருவருமே சந்தோஷப்பட்டார்கள்.

அதற்குப்பின் முத்து, சவாரிக்கு கிரிஷ் பெரியப்பா, பெரியம்மா இருவரையும் அழைத்துக் கொண்டு போனார். அப்போது அவர்கள், தாங்கள் செய்த பாவத்திற்கு தான் இப்படி குழந்தை இல்லாமல் கஷ்டப்படுகிறோம் என்றெல்லாம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். அதற்கு முத்து ஆறுதல் சொன்னார். பின் ஒரு கோயிலுக்கு போக சொல்வதால் முத்துவுமே அங்கு போனார். அந்த இடத்திற்கு லட்சுமியும் கிரிஷும் வந்திருந்தார்கள். அதைப் பார்த்து முத்துவிற்கு ஷாக்காக இருந்தது. முத்துவை பார்த்தவுடன் லட்சுமி அங்கிருந்து வேகவேகமாக கிரிஷை அழைத்துக் கொண்டு போனார். அப்போது கிரிஷ் பெரியப்பா, பெரியம்மா இருவருமே இவர் தான் என் தம்பி பையன்.

சிறகடிக்க ஆசை:

நாங்கள் இவருடைய மனைவியை தான் வீட்டை விட்டு துரத்தி விட்டோம் என்றார்கள். ஆனால், ரோகினி தான் என்பதை சொல்லவில்லை. பின் இதை பற்றி சொல்ல முத்து வீட்டிற்கு வந்தார். அப்போது ட்ரிப்பில் இருந்து ரோகினி, சுருதி எல்லோருமே வந்துவிட்டார்கள். அப்போது போனில் மீனாவிடம் கோவிலில் நடந்ததை எல்லாம் முத்து சொல்லிக் கொண்டிருந்தார். இதைக் கேட்டு ரோகினிக்கு பயங்கர கோபம் வந்தது. பின் தன் அம்மாவிற்கு ஃபோன் செய்து ரோகினி விசாரித்தார். அவர் அம்மா உண்மையை சொல்வதால் ரோகிணி திட்டிக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் லக்ஷ்மி, கிரிஷ்க்கு உறவினர்கள் யாரும் வேண்டாமா? அதற்காகத்தான் நான் போனேன் என்று தன் தரப்பு நியாயத்தை சொல்கிறார். இருந்தாலுமே கேட்காமல் ரோகினி வழக்கம்போல் திட்டி விட்டு நான் சொல்வதை மட்டும் நீ செய் என்று போனை வைத்து விடுகிறார்.
அதற்குப்பின் எல்லோருமே தீபாவளி பண்டிகைக்காக பாட்டி வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு பாட்டி எல்லோரையும் விசாரிக்கிறார். அதற்குப்பின் மீனா- முத்து இருவருமே ஒரு கோயிலுக்கு சென்று இருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது அங்கிருந்த சாமியாடி, மீனாவை பார்த்து எதற்காக இங்கு வந்தாய்? இங்கிருந்து கிளம்பி விடு. உனக்கு பெரிய பிரச்சனை இருக்கிறது. சீக்கிரம் கிளம்பு கிளம்பு என்று கத்துகிறார். இதைக் கேட்டு மீனாவிற்கு பயந்து விடுகிறார். முத்து, அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று அவருக்கு சமாதானம் செய்து அழைத்து வருகிறார். இருந்தும் மீனா, அந்த சாமியாடி சொன்னதை நினைத்து வருத்தப்படுகிறார். பின் விஜயா, தன் மாமியார் சொன்னதால் டான்ஸ் ஆடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full