முத்துவிற்கு காத்திருக்கும் புது பிரச்சனை, மீனா சமாளிப்பாரா? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 7/5/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, மனோஜிற்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று தான் அந்த கயிறை எடுத்து வந்தேன் என்று பொய் சொன்னார். அதனால் முத்து, அண்ணாமலை எதுவும் பேசாமல் கயிறை கொடுத்து விட்டார்கள். அதற்குப்பின் விஜயா, மனோஜின் கையில் கயிறு கட்டி விட்டார். அதற்குப்பின் வந்த ரோகினியும் மனோஜ் கையில் கயிறை கட்டி இருந்தார். மனோஜால் எதுவும் பேசாமல் இரண்டு கைகளிலும் கயிறு கட்டிக் கொண்டார். மறுநாள் காலையில் மனோஜ் வேலைக்கு தயாராகும்போது அயன் பாக்ஸில் சூடு வைத்துக் கொண்டார். மனோஜ் கோபத்தில் ரோகினியை திட்டி இருந்தார்.

இதையெல்லாம் வெளியில் இருந்து பார்த்த விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் விஜயா, ரோகினியை திட்டி இருந்தார். உடனே மனோஜ், இது எங்கள் விஷயம். நீங்கள் தலையிட தேவையில்லை. வெளியே போங்கள் என்று திட்டி விட்டார். இதனால் விஜயா மனம் உடைந்து அழுதார். வீட்டில் உள்ள எல்லோருமே விஜயா அழுவதை பார்த்து கவலைப்பட்டார்கள். பின் அண்ணாமலை விசாரிக்க, மனோஜ் திட்டி விட்டான் என்று சொன்னார் விஜயா. இன்னொரு பக்கம் முத்து, முருகனும் புது பிளாட்டை பார்க்க சென்றார்கள். அங்கு வித்யா, மீனா இருவருமே வந்தார்கள். ஒருவரை ஒருவர் சந்தித்தவுடன் ஷாக் ஆனார்கள். சந்தோசமாக இருங்கள் என்று அவர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு வந்தார்கள் முத்து-மீனா.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் விஜயா வருத்தப்பட்டு கொண்டிருப்பதால் முத்து, மனோஜிக்கு தண்டனை தர வேண்டும் என்று சொன்னார். அப்போது மனோஜ், நான் செய்தது தவறு. நான் கோபத்தில் பேசி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று முட்டி போடுகிறான். இதை பார்த்து ரோகினி ஷாக் ஆனார். உடனே விஜயா, மனம் குளிர்ந்து மனோஜை மன்னித்து விட்டார். அதற்குப்பின் ரூமிற்கு சென்ற மனோஜ், தேவையில்லாமல் டிராமா செய்கிறார் என்று தன்னுடைய அம்மாவை திட்டிக் கொண்டிருந்தார். இதை பார்த்தவுடன் ரோகினிக்கு சந்தோஷமாக இருந்தது. இன்னொரு பக்கம் விஜயா நடன வகுப்பிற்கு சிந்தாமணி வந்தார்.

நேற்று எபிசோட்:

அப்போது அவர், என்னுடைய பணத்தை உங்கள் மகள் எடுத்துக் கொண்டு சென்று விட்டான் என்று சொல்கிறான். உடனே பார்வதி, அவனுடைய பணத்தை தான் எடுத்தான் என்று சொன்னார். கோபத்தில் விஜயா, ஆர்டரை தடுத்து நிறுத்த தான் சொன்னேன். அவள் கையை உடைக்க சொல்லவில்லை. தேவையில்லாமல் இனிமேல் அவளுக்கு பிரச்சனை செய்ய தேவை இல்லை. நீங்கள் வகுப்பிற்கும் வர வேண்டாம் என்று திட்டி விட்டார். சிந்தாமணியால் எதுவுமே பேச முடியவில்லை, அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் சிட்டி வெளியே வந்து விட்டார். முத்துவையும் சத்யாவையும் பழிவாங்க திட்டம் போட்டார். கோவிலில் மீனா தன்னுடைய தம்பி, தங்கை, அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் கோவிலில் மீனாவிடம் ஒருவர், உன் புருஷனுக்கு நேரம் சரியில்லை. கவனமாக பார்த்துக் கொள் என்று சொல்கிறார். இதனால் மீனா சாமி கும்பிட்டு மந்திரத்த கயிறு கொண்டு வந்து முத்துவிற்கு கட்டி விடுகிறார். அதற்கு முத்து, எனக்கு ஒன்னும் நடக்காது என்று சொல்லியும் மீனா பயப்படுகிறார். பின் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது தலையனை வைத்து விளையாடுகிறார்கள். அப்போது தெரியாமல் விஜயா மீது தலையணை பட்டு விடுகிறது. இதனால் விஜயா பயங்கரமாக கோபப்படுகிறார். பின் அண்ணாமலை அந்த பிரச்சனையை முடித்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் ரோகினி, தன்னுடைய தோழி வித்யா வீட்டுக்கு சென்று இருக்கிறார். அங்கு வந்து வித்யாவின் காதலர் முருகன், ரோகினி இடம் பேசுகிறார். பின் ரோகினி, நல்லபடியாக உன் வாழ்க்கை அமையட்டும் என்று வித்யாவிடம் வாழ்த்து சொல்கிறார். அதன் பின் வந்த ரோகினி அம்மா, உனக்கு திருமணமாகி குழந்தை இருக்கும் விஷயத்தை முத்து, மீனாவிடம் சொல். வீட்டில் ஏதாவது பிரச்சனை என்றால் அவர்கள் தான் துணையாக இருப்பார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், பயங்கரமாக கோபப்பட்டு தன் அம்மாவை திட்டி அனுப்பி விடுகிறார் ரோகினி. இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full