சிந்தாமணி- விஜயா செய்த சூழ்ச்சியில் சிக்கிய மீனா தப்பிப்பாரா? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் விஜயா, உன் மாமியார் ரெஸ்டாரன்ட் வைத்து தருகிறார். யோசித்து முடிவெடு என்று சொன்னவுடன் ரவி, நான் சொந்தமாக சம்பாதித்து தான் ரெஸ்டாரன்ட் தொடங்குவேன். யாருடைய பணமும் தேவையில்லை என்று கோபப்பட்டார். உடனே சுருதி, என் அப்பா தந்தால் என்ன பிரச்சனை என்று கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது. அதற்குப்பின் முத்து, ரவி, மனோஜ் மூவரும் மாடியில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது முத்து, நீ எதுவாக இருந்தாலும் யோசித்து முடிவெடு. யார் பேச்சையும் கேட்காதே என்று சொன்னவுடன் மனோஜ், முத்துவுக்கு எதிராகவே பேசி இருந்தார்.
முத்து, என்னைக்குமே சுய கௌரவம் என்பது ரொம்ப முக்கியம். அவர்கள் ரெஸ்டாரன்ட் வைத்து கொடுப்பதற்கு ஒத்துக்காதே என்று சொன்னார். உடனே மனோஜ், அது எப்படி இருந்தாலும் உங்களுக்கு தானே வர போகிறது. அவன் நீ வளரக்கூடாது என்று நினைக்கிறான் என முத்துவை ஏளனமாக பேசி இருந்தார். அதற்கு ரவி, யாருடைய பணமும் தேவையில்லை என்று சுயமரியாதையுடன் இருந்தார். இன்னொரு பக்கம் மீனா, சுருதி, ரோகினி மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ரோகினி-மீனா இடையே வாக்குவாதம் வந்தது.
சிறகடிக்க ஆசை:
உடனே ஸ்ருதி, தன்னுடைய அப்பா பணத்தில் ரெஸ்டாரண்ட் வைப்பதில் தவறு இல்லை என்பது போலவே பேசி இருந்தார். மறுநாள் காலையில் மீனாவுக்கு புதிய ஆர்டர் கிடைத்தது. மீனா, அந்த மேனேஜர் சொல்லும் இடத்தில் கையெழுத்து போட்டு கிளம்பி இருந்தார். அதற்கு பின் வந்த சிந்தாமணி, நான் சொல்வது போல செய்து முடித்தாயா? இனிமேல் தான் மீனாவுக்கு இருக்கு ஆட்டம் என்று சிரித்தார். பின் வீட்டிற்கு வந்த மீனா, தனக்கு கிடைத்த புதிய ஆர்டர் பற்றி வீட்டில் எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்பட்டார். ஆனால், வழக்கம் போல் மனோஜ்,விஜயா இருவருமே மீனாவை கிண்டல் கேலி செய்தார்கள்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் அண்ணாமலை, மீனாவிற்கு புதிய ஆர்டர் கிடைத்ததற்கு பாராட்டி வாழ்த்து சொல்லி இருந்தார். பின் சிந்தாமணிக்கு போன் செய்த விஜயா, மீனாவிற்கு புது ஆர்டர் கிடைத்தது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று சொன்னார். உடனே சிந்தாமணி, இந்த ஆர்டரை கொடுத்ததே நான் தான். உங்கள் மருமகளுக்கு இது தான் கடைசி ஆர்டர். அதற்குப்பின் அவள் இந்த தொழிலுக்கே வர முடியாது. நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன் என்று சொல்ல, விஜயா என்ன திட்டம்? என்று கேட்டார். அதை பொறுத்திருந்து நீங்களே பாருங்கள். இப்போது சொன்னால் சுவாரசியம் இருக்காது என்று சிந்தாமணி சொன்னார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் வீட்டிற்கு அண்ணாமலையின் நண்பர் . அவர் பவானி திருமணத்திற்கான ஏற்பாடுகளை பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தார். அண்ணாமலையும் தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக சொன்னார். இதையெல்லாம் பார்த்து விஜயாவிற்கு பயங்கர கோபம் வந்தது. அதற்குப்பின் முத்துவிற்கு ஒரு பெரிய சவாரி கிடைக்கிறது. 7 நாட்கள் டூர், அதனால் பணமும் கொஞ்சம் அதிகமாக வரும் என்று ஒத்துக் கொண்டார். இதை வீட்டில் சொன்னவுடன் அண்ணாமலை ரொம்ப சந்தோஷப்பட்டார். வழக்கம்போல் விஜயா, முத்து-மீனாவை திட்டிக் கொண்டிருந்தார்.
https://www.youtube.com/watch?v=Onr0wNlCMlQ
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மீனா நல்லபடியாக புதிய ஆர்டரை முடித்து விடுகிறார். பின் அந்த மேனேஜரிடம் மீதி பணத்தை மீனா கேட்கிறார். ஆனால், அந்த மேனேஜர், நான் மொத்த பணத்தையும் அன்றே கொடுத்துவிட்டேன். அதற்கான பாண்டில் நீங்கள் கையெழுத்து போட்டு இருக்கிறீர்கள் என்று சொல்கிறார். உடனே மீனா, நீங்கள் எதுவும் தரவில்லை. ஏமாற்றாதீர்கள் என்று சொல்ல அந்த மேனேஜர் அங்கு இருக்கும் ஆட்களை வைத்து மீனாவை வெளியே தள்ளி விடுகிறார். இதை பார்த்த சிந்தாமணி, விஜயாவிற்கு போன் செய்து சொல்லி ரொம்ப சந்தோஷப்படுகிறார். விஜயாவுக்கும் மீனா தோற்றத்தை நினைத்து சந்தோஷப்படுகிறார்.