மனோஜின் தில்லாலங்கடி வேலையை அறிந்த முத்து, வீட்டில் வெடித்த கலவரம் - சிறகடிக்க ஆசை

By subhashini · 29/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் டாக்டர் பட்டத்தை நல்லது செய்துதான் வாங்க வேண்டும். பொய்யாக ஏமாற்றி வாங்க கூடாது என்றெல்லாம் அண்ணாமலை சொன்னார். ஆனால், விஜயா ஏற்றுக்கொள்ளவே இல்லை. வழக்கம்போல் மீனாவை தான் திட்டிக் கொண்டிருந்தார். பின் மனோஜ் தன்னுடைய நண்பர் சொன்னது போல ராணியின் வீட்டிற்கு சென்று தவறாக நடப்பது போல நடித்தார். உடனே ராணி, கத்தி அக்கம் பக்கத்தினர் எல்லோரும் வந்து மனோஜ் துடைப்பத்தாலே அடி வெளுத்து வாங்கினார்கள்.

மீனா, வீட்டில் உள்ள எல்லோருக்குமே சூப் செய்து தந்தார். அதை சாப்பிட்டு வீட்டில் உள்ள எல்லோருமே புகழ்ந்து பாராட்டினார்கள். ஆனால், விஜயா வழக்கம் போல கிண்டல் செய்தார். அப்போது ஸ்ருதி, என்னுடைய ஹோட்டலுக்கு நீங்க பார்டனராக சேர்ந்து விடுங்கள் என்றார். அதற்கு மீனா, நீங்கள் ரவியை சம்மதிக்க வைத்து, அவருடைய மனதில் என்ன இருப்பதையும் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொன்னார். அந்த சமயம் பார்த்து மனோஜ் வீட்டிற்கு வந்தார். மனோஜின் நிலைமை பார்த்து எல்லோருமே பதறிப் போனார்கள். விஜயாவிற்கு ரொம்ப பயமாக இருந்தது.

சிறகடிக்க ஆசை:

அப்போது மனோஜ், உண்மையை சொல்லாமல் ஒரு பெண்ணை தான் காப்பாற்றியதாக பொய் சொன்னார். ஆனால், அதை ரோகினி நம்பவே இல்லை. பின் ரூமில் ரோகினி, என்னானது என்றார். அதற்கு மனோஜ், எல்லா உண்மையும் சொல்ல ரோகினி திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் யோகா கிளாசில் பார்வதிக்கு பிறந்தநாள் என்பதால் அவரை காதலிக்கும் நபர் கேக் வாங்கி வந்து பரிசு கொடுத்தார். அப்போது மீனா, ப்ரூட் பொக்கே கொடுத்தார். மீனாவின் ஐடியாவை பார்த்து எல்லோரும் பாராட்டினார்கள். ஆனால், சிந்தாமணி, இதை வளர விடக்கூடாது என்று பொறாமைப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா, பார்வதியின் செயலை கண்டித்து திட்டுகிறார். அதற்கு பார்வதி, நான் நண்பராக தான் பழகுகிறேன். வேறு ஒன்றும் இல்லை என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் முத்து, மனோஜின் நண்பரை சவாரிக்கு அழைத்து வருகிறார். அப்போது மனோஜ், ராணியிடம் அடிவாங்கிய விஷயத்தை உளறி விடுகிறார். உண்மை அறிந்த முத்து, மனோஜின் தோழரை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். தன்னுடைய நண்பனை பார்த்தவுடன் மனோஜ் பதறுகிறார். பின் முத்து, மனோஜ்- ராணி இடம் தப்பாக நடந்து கொண்டதால் தான் அவர்கள் பணம் கேட்டு மிரட்டும் விஷயத்தை எல்லாம் சொல்கிறார். உடனே மனோஜ், நான் எந்த தவறும் செய்யவில்லை.

சீரியல் ட்ராக்:

அவர்கள் வேண்டும் என்று என் மீது பழி போடுகிறார்கள் என்கிறார்கள். பின் ராஜா, தன்னிடம் இருக்கும் ஆதாரத்தை காண்பிக்கிறார். இப்படி மாற்றி மாற்றி மனோஜின் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகள் எழுந்து கொண்டு இருக்கிறது. அதற்கு வீட்டில் எல்லோருமே மனோஜை திட்டுகிறார்கள். ஆனால், விஜயா மட்டும் நம்பவில்லை. உடனே முத்து, இதற்கு ஒரே வழி மனோஜ் -ராணியை கல்யாணம் செய்ய வேண்டும். ராணி இந்த வீட்டு மருமகளாக வேண்டும் என்று சொல்கிறார். இதை கேட்டு ராணி அதிர்ச்சியாகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full