மனம் மாறி சீதா-அருண் திருமணத்துக்கு சம்மதம் சொன்னாரா முத்து? அடுத்து என்ன - சிறகடிக்க ஆசை

By subhashini · 29/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து சீதாவிற்காக மாப்பிள்ளை பார்ப்பதற்காக முத்து ஒரு இடத்திற்கு சென்று இருந்தார். அருணின் ஜாதகத்தையும், சீதா ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் இந்த இருவருக்குமே பொருத்தம் நல்லா இருக்கிறது. அவர்களுடைய அம்மாவை அழைக்கிறேன் என்று அருணின் அம்மாவை கூப்பிட்டார். அதை பார்த்தவுடன் முத்துவிற்கு பயங்கர கோபம் வந்தது. இந்த சம்பந்தம் எங்களுக்கு வேண்டாம் என்று முத்து சொன்னார். இதை கேட்டு அருண் அம்மாவும் கோபப்பட்டார். இன்னொரு பக்கம் மீனாவிடம் சுருதி, நீங்கள் ரவியின் மனதில் என்ன இருக்கிறது என்று கேட்டு சொல்லுங்கள் என்றார். மீனாவும் ரவியிடம் பேச்சு கொடுத்து அவருக்கு பிடித்த விசயத்தை சொல்ல வைத்தார்.

ரோகினி, வித்யாவை சந்திக்கப் போனார். அப்போது வித்யா, யாரை கேட்டு நீ முருகனிடம் பணம் கேட்டாய்? அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் என்று கோபமாக பேசி இருந்தார். அதற்கு ரோகினி, எனக்கு ப்ரச்சனை. வேறு வழியில்லாமல் தான் அவரிடம் கேட்டேன் என்று சொன்னார். இதனால் கோபப்பட்டு வித்யா, நீ உன் குடும்பத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய். அதனால் பிரச்சனையில் மாட்டியிருக்கிறாய். நீ உண்மையாக இருந்தாலே உனக்கு எந்த பிரச்சனையுமே வராது. இந்த உலகத்தில் எல்லாருக்கும் தான் பிரச்சனை இருக்கிறது. அவர் அவர்கள் பிரச்சனையை அவர்கள் தான் பார்க்கிறார்கள் என்று ரொம்ப மோசமாக திட்ட, ரோகினி அங்கிருந்து கிளம்பி விட்டார்.

சிறகடிக்க ஆசை:

அதற்குப்பின் வீட்டுக்கு வந்த ரோகினி, வித்யா பணம் தரவில்லை. எனக்கும் அவளுக்கும் சண்டை வந்துவிட்டது. நீ பணம் கொடுத்து உதவி செய் என்று கேட்டார். உடனே மனோஜ், அம்மாவுக்கு தெரிந்தால் திட்டுவார்கள் என்று வழக்கம்போல ஜகா வாங்கி கொண்டார். கடைசியில் ரோகினி, ஸ்ருதியிடம் பண உதவி கேட்டார். அப்போது ஸ்ருதி, நான் ரெஸ்டாரண்டில் பணத்தை போட்டு விட்டேன் என்றார். உடனே ரோகினி, மீனா கேட்டிருந்தால் செய்திருப்பீர்கள் என்றார். அதற்கு சுருதி, மீனா பொய் சொல்லி ஏமாற்ற மாட்டார். அத்தையை காக்கா பிடிக்க மீனா எதுவும் வாங்கித் தர மாட்டார். மீனா உங்களைப் போல் கிடையாது என்று சொன்னார். இதனால் கோபப்பட்டு ரோகினி அங்கிருந்து கிளம்பி விட்டார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் முத்து, சீதாவை சந்தித்து எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்டார். அதற்கு சீதா, கவர்மெண்ட் வேலையில் இருக்க வேண்டும். வீட்டிற்கு ஒரே பயனாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னார். இதை கேட்டவுடன் முத்து, நீ கேட்டது போலவே நான் மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று சொன்னார். இன்னொரு பக்கம் ரோகினி, ஸ்ருதியின் அம்மா வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது ஸ்ருதி அம்மாவிடம் 2 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று ரோகினி கேட்டார். உடனே அவர், தன்னுடைய கணவரை தனியாக அழைத்து சென்று பணத்தைப்பற்றி பற்றி சொன்னார். அதற்கு ஸ்ருதி அப்பா, ரோகினியை வைத்து தான் ஸ்ருதியை நம் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும்.

சீரியல் ட்ராக்:

நீ அவர் கேட்கும் பணத்தை கொடு என்றார். அதற்குப்பின் ஸ்ருதியின் அம்மாவும் பணத்தை தருகிறேன் என்று சொன்னார். இன்னொரு பக்கம் முத்து வீட்டிற்கு வந்த முத்து, சீதா எப்படிப்பட்ட மாப்பிளை வேண்டும் என்று சொன்னதை சொன்னார். உடனே மீனா, அவள் அருணை மனதில் வைத்து தான் இதையெல்லாம் சொல்லி இருக்கிறார் என்றார். இதைக் கேட்ட முத்துவிற்கு பயங்கர கோபம் வந்தார். பின் மீனா- முத்து இருவருமே சீதாவை சந்திக்க போனார்கள். அப்போது சீதாவிடம் முத்து, நீ அருணை மனதில் வைத்து தான் மாப்பிள்ளை பார்க்க சொன்னாயா? என்று கேட்டார். அதற்கு சீதாவுமே ஆமாம் என்று உண்மையை ஒத்துக்கொண்டார். இதனால் மீனாவின் அம்மா, சீதாவை வெளுத்து வாங்கி இருந்தார். கோபத்தில் முத்து எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

https://www.youtube.com/watch?v=LHgVZf4RSp0

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் முத்து, ஹாஸ்பிடலில் காப்பாற்றிய பெண்ணிற்கு அவர் காதலித்த பையனை திருமணம் செய்து வைக்கிறார்கள். அந்த வீட்டிற்கு முத்து சென்று இருக்கிறார். அந்த ஜோடிகளை பார்க்கும்போது அருண்- சீதா போல் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் அருண்- சீதா திருமண கோலத்தில் இருப்பது போலவே முத்துவிற்கு தோன்றுகிறது. இதனால் முத்து மனம் மாறி சீதாவிடம், உனக்கு பிடித்த அருணையே கல்யாணம் செய்து கொள். அருண் வீட்டில் இருந்து பெண் பார்க்க வரச்சொல்லு என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் சீதா வீட்டில் எல்லோருமே ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full