அருண் போட்ட கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்ட முத்து, நீத்துவால் கொந்தளித்த ரவி - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சிந்தாமணி, உன் மாமியார் மனோஜ்க்கு வேறொரு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். ஏதாவது செய்து மனோஜை உன் பக்கம் கொண்டுவர பார் என்றெல்லாம் ஏத்தி விட்டார். ரோகிணியும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் முத்து, அருனிடம் பேசுவதற்கு செல்வம் என்னை அழைக்கிறான். நான் போய் பார்த்து பேசுகிறேன் என்றார். மீனா, பிரச்சனை பெரிசாகும் வேண்டாம் என்றார். இருந்தாலும் முத்து கேட்கவில்லை. பின் இதைப்பற்றி மீனா, சீதாவிடம் சொன்னார். சீதா, பயமாக இருக்கிறது என்று தன் அக்காவிடம் புலம்பி கொண்டிருந்தார்.
மனோஜ், சிந்தாமணி, விஜயா மூவரும் பைனான்சியர் ஆபீசிக்கு சென்றிருந்தார்கள். அப்போது விஜயா பத்திரத்தை பினான்சியரிடம் கொடுத்து விட்டார். மனோஜ், அண்ணாமலை போலவே கையெழுத்தும் போட்டு விட்டார். இது எல்லாம் பார்த்து பைனான்சியர், விஜயா இருவரும் உள்ளுக்குள் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். பின் விஜயா, மனோஜ் பைனான்ஸ் ஆபீஸ் விட்டு வெளியே வருவதை மீனா பார்த்து விட்டார். இன்னொரு பக்கம் நீத்து, ரவிக்கு போன் செய்து வீட்டிற்கு வர சொல்லி டார்ச்சர் செய்தார். ரவி முடியாது என்று சொன்ன சொல்லியுமே நீத்து பிளாக்மெயில் செய்தார்.
சிறகடிக்க ஆசை:
வேறு வழி இல்லாமல் ரவி கிளம்பி நீத்துவின் வீட்டிற்கு போனார். அதற்குப்பின் அருண், முத்து உடைய இரு வக்கீல்களும் சமரசம் பேசிக் கொள்ளலாம் என முடிவெடுத்தார்கள். பின் செல்வம் தரப்பில், அருணின் அம்மா கவன குறைவால் தான் விபத்து நடந்தது என்று போலீஸ் சொன்னார் என்றார். அருணால் எதுவும் பேச முடியவில்லை. பணம் கொடுத்து பிரச்சனையை முடித்து கொள்ளலாம் என்று வக்கீல் சொல்கிறார். செல்வம் ஒரு லட்சம் தருகிறேன் என்றார். கோபப்பட்ட அருண், முத்துவின் அப்பா மீது கார் ஏத்தி விட்டு சமாதானம் பேசலாம் என்று சொல்வதால் சண்டை நடக்கிறது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வக்கீல், அருண்- முத்து இருவரையும் சமாதானம் செய்கிறார்கள். பின் அருண், 25 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார். முத்து, முடியாது என்று சொல்கிறார். 15 லட்சம் என்று அருண் சொல்கிறார். பின் முத்து, டிரைவர் வாழ்க்கையைப் பற்றி சொல்கிறார். இதனால் அருண், ஐந்து லட்சத்திற்கு கீழ் குறைத்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்வதால் முத்து ஒத்து கொள்கிறார்.
பின் அருண், அதை ஒரு மாதத்திற்குள் கட்ட வேண்டும் என்று சொல்கிறார். முத்துவும் அந்த கண்டிஷனை ஏற்றுக்கொள்கிறார். இன்னொரு பக்கம் நீத்துவின் வீட்டிற்கு சென்ற ரவி, எதற்காக இப்படி டார்ச்சல் செய்கிறீர்கள்? எனக்கு வேலை இருக்கிறது.
சீரியல் ட்ராக்:
இப்படி எல்லாம் பிளாக்மெயில் பண்ணாதீர்கள் என்று சொல்கிறார். நீத்து அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ரவியிடம் காதல் டார்ச்சல் செய்து கொண்டிருக்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த முத்து, மீனா இருவரும் செல்வம் விஷயத்தைப் பற்றி சொல்கிறார்கள். விஜயா, என்னிடம் பணம் கேட்காதீர்கள் என்கிறார். மீனா, அதெல்லாம் உங்களிடம் கேட்க மாட்டோம். நாங்க பைனான்சியரிடம் வாங்கிக் கொள்கிறோம் என்று சொல்கிறார். அண்ணாமலை, எப்படியாவது செல்வத்தை அந்த பிரச்சனையில் இருந்து வெளிக்கொண்டு வா என்கிறார். இன்னொரு பக்கம் கிரிஸ் உடல்நிலை ரொம்ப மோசமாக இருக்கிறது. பின் ரோகிணி டாக்டரிடம் போன் செய்து சொல்கிறார். அப்போது கிரிஷ், முத்து- மீனா பெயரை சொல்லிக் கொண்டிருப்பதால் ரோகிணிக்கு ஒன்றுமே புரியவில்லை.