சீதாவிடம் அருணை திட்டி வாய்விட்டு மாட்டிக்கொண்ட முத்து - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கோயிலில் பூஜை போட்டுவிட்டு ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு போனார்கள் முத்து- மீனா. அப்போது அருண், ஸ்கூட்டியை பார்த்து நன்றாக இருக்கு என்று சொல்லி முத்துவின் சம்பளத்தையும் வேலையும் நக்கலாக பேசி இருந்தார். ஆனால், முத்து அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதற்குப்பின் சுருதி தன்னுடைய புது ரெஸ்டாரண்டை திறந்தார். அதற்கு வீட்டில் எல்லோருமே வந்து விட்டார்கள். நீத்து அந்த இடத்திற்கு வந்திருக்கிறார். அதை பார்த்து சுருதியின் அம்மா, அப்பா இருவருமே பயங்கர கோபப்பட்டார்கள்.
பின் செப் குமாரின் அத்தை, மாமா வந்தார்கள். அவர்கள் வேறு யாரும் இல்லை உயர் அதிகாரியும், கோகிலாவும் தான். மீனாவை பார்த்து கோகிலா, உங்கள் கணவர் முத்து ரொம்ப நல்லவர். உங்க அம்மாவின் கடை வருவதற்கு காரணம் முத்து தான். அருண், சிபாரிசு கடிதம் கொடுத்தார். ஆனால், என்னுடைய கணவர் ஒத்துக்கொள்ளவில்லை. பின் முத்து, அருண் செய்ததாக சொல்ல சொன்னார் என்றார். இதைக் கேட்ட சீதா, முத்துவிடம் கேள்வி கேட்டார். உடனே முத்து, யார் செய்தால் என்ன? அத்தை கடை வந்தால் போதும் என்று தன்னடக்கமாக பேசி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
சீதா உண்மை அறிந்து அருனிடம் கடைவந்த விஷயத்தை பற்றி கேட்டார். அதற்கு அருண், நான் லெட்டர் கொடுத்து தான் வந்தது என்று நினைத்தேன். அந்த டிரைவர் முத்து சொல்லி தான் நடந்ததா? இதற்கு என்ன இப்ப? என்று ரொம்ப தெனாவட்டாக பேசி இருந்தார். அதற்கு சீதா, எதற்காக என்னிடம் உண்மை மறைத்தீர்கள்? என்றார். அதற்கு அருண், ரொம்ப மோசமாக முத்துவையும், மீனாவையும் பேசி இருந்தார். இதனால் சீதாவிற்கு கோபம் வந்து கையில் கிடைத்த பொருளை தூக்கி போட்டு உடைத்தார்.
சீரியல் ட்ராக்:
உடனே அருண், எனக்கு பிடிக்காதவர்களுடன் நீ பேசக்கூடாது. எனக்கு அந்த முத்துவை பிடிக்காது என்று திட்டினார். இதனால் சீதா, கோபப்பட்டு வீட்டை விட்டு வந்து விட்டார். அதற்கு பின் வீட்டில் மீனா, அம்மா எல்லோரும் விசாரித்தார்கள். அதற்கு சீதா, நடந்ததை சொல்லி அருணே என்னை வந்து அழைத்து போகட்டும். நான் போகமாட்டேன் என்றார். இன்னொரு பக்கம் ஸ்ருதி அப்பா-அம்மா இருவரும் நீத்துவை பார்த்து ரொம்ப மோசமாக பேசி விடுவதால் நீத்து அழுதார். இதை பார்த்து ரவி விசாரிக்க, நீத்து உண்மையை சொல்லி விட்டார். பின் ரவி, ஸ்ருதி அப்பா-அம்மா மீது கோபப்பட்டார். அதற்கு பின் மீனா, சீதா வீட்டில் நடந்ததை முத்துவிடம் சொல்லி புலம்பினார்.
https://www.youtube.com/watch?v=imO77Y04NrA
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் சீதா, அருனுடன் சண்டை போட்டு கோபித்துக் கொண்டு தன்னுடைய அம்மாவிற்கு வந்து விடுகிறார். இதை அறிந்த முத்து, சமாதானம் செய்ய வருகிறார்கள். அப்போது முத்து, உன் புருஷனுக்கு திமிர், அரை மெண்டல் தான். இருந்தாலும் அதற்காக வீட்டை விட்டு வெளியே வந்து விடுவதா? என்றெல்லாம் சொல்கிறார். ஆனால், அருண் வீட்டில் இருப்பது முத்துவுக்கு தெரியாது. உடனே அருண், முத்து பேசுவதை கேட்டு வெளியே வருகிறார். முத்து, எதுவும் சொல்ல மாட்டாயா? என்று சீதாவிடம் கேட்கிறார்?