முத்து வைத்த ஆப்பால் எரிமலையாய் கொந்தளித்த விஜயா, மனோஜ் செய்த கேவலமான வேலை - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, டாக்டர் பட்டத்திற்காக ரத்த தானம் கொடுப்பதை பற்றி வீட்டில் சொன்னார். வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆனார்கள். பின் விஜயா, வீட்டில் எல்லோரையும் ரத்த தானம் கொடுக்க பார்வதி வீட்டிற்கு வர சொன்னார். அதற்குப்பின் மீடியாவில் இருந்து வந்தவர்கள் விஜயா ஏற்பாடு செய்த ரத்த தானத்தை பேட்டி எடுத்தார்கள். விஜயா செய்யும் ஒவ்வொரு செயலும் வீட்டில் எல்லோருக்குமே அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ஆனது. தான் நல்லவன் போலவே விஜயா, பேட்டி கொடுத்தார்.
நேற்று எபிசோட்டில் விஜயா, தன்னுடைய குடும்பத்தை பற்றி ரொம்ப பெருமையாக பேசினார். இதைக் கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அந்த சமயம் பார்த்து டாக்டர் பட்டம் கொடுக்கும் நபருமே அந்த இடத்திற்கு வந்து விஜயாவின் செயல்களை எல்லாம் பாராட்டி பேசினார். அதற்குப்பின் பார்வதி, டாக்டர் பட்டத்திற்காக தான் விஜயா இப்படி எல்லாம் செய்கிறார் என்பதை சொன்னார். பின் இதைப்பற்றி முத்து-மீனா இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
அப்போது முத்து, ஏமாற்று வேலை செய்து டாக்டர் பட்டத்தை பெறக்கூடாது என்றார். அடுத்த நாள் விஜயா வாயிலேயே உண்மையை வரவைற்பதற்காக முத்து சில வேலைகளை செய்தார். விஜயாவுமே முத்து விரித்த வலையில் சிக்கி கொண்டார். அதற்குப்பின் மீனாவை, விஜயா பயங்கரமாக திட்டி வேலை வாங்குவது எல்லாம் முத்து வீடியோ எடுத்து வைத்தார். அதற்குப்பின் முத்து பிச்சைக்காரர் வேடம் போட்டு விஜயா பக்கத்தில் போய் நிற்க, விஜயா, பயங்கரமாக திட்டி அனுப்பினார். அதை மீனா வீடியோ எடுத்து வைத்துக் கொண்டார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பார்வதி வீட்டில் டாக்டர் பட்டம் கொடுப்பதற்காக சில டாக்குமெண்டில் விஜயாவிடம் கையெழுத்து வாங்க வருகிறார் கோகிலா. அந்த சமயம் வந்த முத்து, விஜயாவின் சுயரூப வீடியோவை போட்டு காண்பிக்கிறார். அதை பார்த்த கோகிலா, கொந்தளித்து விஜயாவை திட்டி விட்டு செல்கிறார். டாக்டர் பட்டம் விஜயாவிற்கு கிடைக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் முத்து-மீனா என்று விஜயா பயங்கரமாக கோபப்படுகிறார். அதற்குப்பின் வீட்டில் விஜயா, நடந்ததை எல்லோரிடமும் சொல்கிறார். மனோஜ் மட்டும் தான் விஜயாவிற்கு சப்போர்ட் செய்கிறார்.
சீரியல் ட்ராக்:
டாக்டர் பட்டத்தை நல்லது செய்துதான் வாங்க வேண்டும். பொய்யாக ஏமாற்றி வாங்க கூடாது என்றெல்லாம் அண்ணாமலை சொல்கிறார். ஆனால், விஜயா ஏற்றுக்கொள்ளவே இல்லை. வழக்கம்போல் மீனாவை தான் திட்டிக் கொண்டிருக்கிறார். பின் மனோஜ் தன்னுடைய நண்பர் சொன்னது போல ராணியின் வீட்டிற்கு சென்று தவறாக நடப்பது போல நடிக்கிறார். உடனே ராணி, கத்தி அக்கம் பக்கத்தினர் எல்லோரும் வந்து மனோஜ் துடைப்பத்தாலே அடி வெளுத்து வாங்குகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது