முத்துவிடம் வசமாக சிக்கிய கதிர், சிட்டி-ரோகினி போடும் புது திட்டம் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா வருத்தப்பட்டு கொண்டிருப்பதால் முத்து, மனோஜிக்கு தண்டனை தர வேண்டும் என்று சொன்னார். அப்போது மனோஜ், நான் செய்தது தவறு. நான் கோபத்தில் பேசி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று முட்டி போடுகிறான். இதை பார்த்து ரோகினி ஷாக் ஆனார். உடனே விஜயா, மனம் குளிர்ந்து மனோஜை மன்னித்து விட்டார். அதற்குப்பின் ரூமிற்கு சென்ற மனோஜ், தேவையில்லாமல் டிராமா செய்கிறார் என்று தன்னுடைய அம்மாவை திட்டிக் கொண்டிருந்தார். இதை பார்த்தவுடன் ரோகினிக்கு சந்தோஷமாக இருந்தது. இன்னொரு பக்கம் விஜயா நடன வகுப்பிற்கு சிந்தாமணி வந்தார்.
அப்போது அவர், என்னுடைய பணத்தை உங்கள் மகள் எடுத்துக் கொண்டு சென்று விட்டான் என்று சொல்கிறான். உடனே பார்வதி, அவனுடைய பணத்தை தான் எடுத்தான் என்று சொன்னார். கோபத்தில் விஜயா, ஆர்டரை தடுத்து நிறுத்த தான் சொன்னேன். அவள் கையை உடைக்க சொல்லவில்லை. தேவையில்லாமல் இனிமேல் அவளுக்கு பிரச்சனை செய்ய தேவை இல்லை. நீங்கள் வகுப்பிற்கும் வர வேண்டாம் என்று திட்டி விட்டார். சிந்தாமணியால் எதுவுமே பேச முடியவில்லை, அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் சிட்டி வெளியே வந்து விட்டார். முத்துவையும் சத்யாவையும் பழிவாங்க திட்டம் போட்டார். கோவிலில் மீனா தன்னுடைய தம்பி, தங்கை, அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் கோவிலில் மீனாவிடம் ஒருவர், உன் புருஷனுக்கு நேரம் சரியில்லை. கவனமாக பார்த்துக் கொள் என்று சொன்னார். இதனால் மீனா சாமி கும்பிட்டு மந்திரத்த கயிறு கொண்டு வந்து முத்துவிற்கு கட்டி விட்டார். அதற்கு முத்து, எனக்கு ஒன்னும் நடக்காது என்று சொல்லியும் மீனா பயப்பட்டார். பின் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது தலையனை வைத்து விளையாடி இருந்தார்கள். அப்போது தெரியாமல் விஜயா மீது தலையணை பட்டு விட்டது. இதனால் விஜயா பயங்கரமாக கோபப்பட்டு இருந்தார். பின் அண்ணாமலை அந்த பிரச்சனையை முடித்து வைத்தார்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் ரோகினி, தன்னுடைய தோழி வித்யா வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு வந்து வித்யாவின் காதலர் முருகன், ரோகினி இடம் பேசி இருந்தார். பின் ரோகினி, நல்லபடியாக உன் வாழ்க்கை அமையட்டும் என்று வித்யாவிடம் வாழ்த்து சொன்னார். அதன் பின் வந்த ரோகினி அம்மா, உனக்கு திருமணமாகி குழந்தை இருக்கும் விஷயத்தை முத்து, மீனாவிடம் சொல். வீட்டில் ஏதாவது பிரச்சனை என்றால் அவர்கள் தான் துணையாக இருப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், பயங்கரமாக கோபப்பட்டு தன் அம்மாவை திட்டி அனுப்பி விட்டார் ரோகினி.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினிக்கு போன் செய்த சிட்டி, முத்துவின் வண்டி சாவியை ஒரு 15 நிமிடத்திற்கு எனக்கு வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு தொந்தரவு செய்த மேனேஜர் என் பிடியில் தான் இருக்கிறார் என்று மிரட்டுகிறார். அதனால் வேறு வழியில்லாமல் ரோகினி சரி என்கிறார். இன்னொரு பக்கம் முருகன்- வித்யா இருவருமே தாங்கள் புதிதாக வாங்கும் பிளாட்டிற்கு பணம் கொடுக்க முத்து, மீனாவை அழைக்கிறார்கள். ஆனால், அந்த பிளாட்டை கதிர் தான் முருகனுக்கு விற்கிறார். அங்கு வந்த முத்து-மீனா இருவருமே கதிரையும் அவர் மனைவியும் பார்த்து ஷாக் ஆகி அவர்களை மிரட்டி கேட்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அவர்கள் பணத்தை ஏமாற்றி சென்ற விஷயத்தை ஒத்துக்கொண்டு பணமெல்லாம் செலவாகிவிட்டது என்றார்கள். பின்னர் மனோஜ், ரோகினிக்கு தகவல் சொல்லி வர வைத்தார்கள். அவர்கள் வந்து கதிரை அடித்து பணத்தை கேட்கிறார்கள். அதற்குப் பின் முத்து, போலீசுக்கு சொல்லிவிடுகிறார். போலீஸ் கதிர், அவர் மனைவி இருவரையும் கைது செய்கிறது. ரோகினி, முத்து மீது கோபப்படுகிறார். பின் வீட்டிற்கு வந்த நான்கு பேருமே கதிர் விஷயத்தை சொல்கிறார்கள். பணம் கிடைக்கவில்லையா? என்று விஜயா கேட்க, போலீஸ் விசாரித்து சொல்வார்கள் என்கிறார்கள். அதற்கு ரோகினி, எல்லாத்துக்கும் முத்து-மீனா தான் காரணம். போலீசுக்கு தகவல் சொல்லவில்லை என்றால் பணத்தை வாங்கி இருக்கலாம் என்று வழக்கம்போல குறை சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.