உண்மை அறிந்து மணமேடையில் இருந்து அருணை கீழே தள்ளிய முத்து, மீனா என்ன செய்ய போகிறார்? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினிக்கு போன் செய்த மேனேஜர், நீ பணத்தை ரெடி செய்யவில்லை என்றால் இப்பவே முத்துவிடம் எல்லா உண்மையும் சொல்லிவிடுவேன் என்று மிரட்டினார். உடனே ரோகினி, மீனா தங்கையின் திருமணத்திற்காக நகைகள் எல்லாம் வாங்கி இருக்கிறார்கள். வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சொல்கிறேன். நீ நகையை வந்து எடுத்துக் கொள் என்றார். மறுநாள் ஸ்ருதி- மீனா இருவருமே நகைக்கடைக்கு சென்று நகை எல்லாம் வாங்கி வந்து சாமி ரூமில் வைத்து விட்டு திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்க இருவரும் வெளியே கிளம்பி இருந்தார்கள்.
பின் ரோகினி, மேனேஜரை சந்தித்து நகையை எடுக்க வீட்டிற்கு வர சொன்னார்.
மேனேஜர் வீட்டில் யாரும் இல்லை என்று சாமி ரூமில் இருந்த நகைகளை எல்லாம் திருடி எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். அந்த சமயம் பார்த்து மனோஜ் வீட்டிற்கு வருவதால் திருடனை பிடித்து வீட்டிற்குள் தள்ளி அடிக்க, அந்த திருடன் மனோஜின் முகத்தில் முகமூடியை போட்டுவிட்டு தப்பிக்க பார்த்தார். அந்த சமயம் பார்த்து மீனா- சுருதி இருவரும் வீட்டிற்குள் வந்தார்கள். திருடர்கள் ரெண்டு பேர் என நினைத்து ரெண்டு வெளுத்து வாங்கினார்கள். அதில் மேனேஜர் எப்படியோ தப்பித்து ஓடி விட்டார். மீனா, நகையை வாங்கி வைத்துக் கொண்டார்.
சிறகடிக்க ஆசை:
மனோஜ் என்று தெரியாமல் சுருதி -மீனா இருவருமே பொளந்து கட்டினார்கள். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த விஜயாவும் திருடன் என நினைத்து பயங்கரமாக அடித்தார். மனோஜால் பேச கூட முடியவில்லை. அதற்கு பின் வீட்டிற்கு முத்து- அண்ணாமலை வந்தார்கள். முத்து, மனோஜின் கையை முறுக்கி அடித்தார். பின் மனோஜ் அலறல் சத்தத்தை கேட்டு தான் எல்லோருமே அடிப்பதை நிறுத்தினார்கள். அதற்கு பின் முகமூடியை திறந்து பார்த்து ஷாக் ஆனார்கள். நான் தான் அந்த திருடனை பார்த்தேன். அவன் என் முகத்தில் முகமூடியை போட்டு விட்டு சென்று விட்டான் என்று அழுதார். இன்னொரு பக்கம் மேனேஜர், சிட்டியிடம் அடி வாங்கியதை பற்றி சொல்லி புலம்பி இருந்தார்.
கடந்த வாரம் எபிசோட்:
பின் ரோகினிக்கு போன் செய்த மேனேஜர், என்னை அடி வாங்க வைக்க பிளான் செய்தாயா? நான் முத்துவிடம் உண்மை சொல்ல போகிறேன் என்று மிரட்ட, பயப்படாமல் சொல்லி கொள் என்றார் ரோகினி. இதனால் மேனேஜரால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப்பின் சீதா- அருண் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் முத்து- மீனா பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் மனோஜ் சாப்பாட்டில் வடை வைக்கவில்லை என்று ரகளை செய்து கொண்டிருந்தார். பெண் வீட்டாரே பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார் என்று மண்டபத்தில் இருப்பவர்கள் பேசி இருப்பதை கேட்ட முத்து, மனோஜிடம் பஞ்சாயத்து கேட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சீதா திருமணத்தை நினைத்து வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அப்போது அருண் நண்பர், தன்னுடைய மனைவியிடம் இது அருணிற்கு இரண்டாவது கல்யாணம் என்று சொல்கிறார். இது புரியாமல் அவருடைய மனைவி மண்டபத்தில் உள்ளவர்களிடம் சொல்லிவிடுகிறார். மண்டபத்தில் உள்ளவர்கள் எல்லோருமே தங்களுக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மண்டபம் முழுக்க இது அருணுக்கு இரண்டாவது கல்யாணம் என்ற பேச்சு தான் அதிகமாக சென்று கொண்டிருக்கின்றது. பின் இதைப்பற்றி மீனாவின் கேட்கிறார்கள். ஆனால், மீனா அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சமாளித்து விடுகிறார். பின் இந்த விஷயம் முத்துவின் காதிற்கு சென்று விடுகிறது.
சீரியல் ட்ராக்:
கொந்தளித்த முத்து மணமேடையில் இருந்து அருணை கீழே இழுத்து வந்து சண்டை போடுகிறார். மீனாவின் அம்மா, சீதா, சத்யா எல்லோருமே குழப்பத்தில் இருக்கிறார்கள். அப்போது முத்து, இது அருணிற்கு இரண்டாவது கல்யாணம். இவனை வேண்டாம் என்று சொன்னேன். சீதா வாழ்க்கை அழிக்க பார்க்கிறான் என்றெல்லாம் கொந்தளிக்கிறார். சீதா- மீனா இருவருமே உண்மையை பேச முடியாமல் தவிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அருண், ஆமாம் இது எனக்கு இரண்டாவது கல்யாணம் தான் என்று சொல்லி விடுகிறார். இதனால் பெண் வீட்டில் எல்லோருமே பேசுகிறார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று விஜயாவுமே ஏளனமாக சீதா குடும்பத்தையும் அருண் குடும்பத்தையும் பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது