மீண்டும் பிரச்சனையில் சிக்கிய ரோகினி, உண்மையை கண்டுபிடிப்பாரா முத்து? - சிறகடிக்க ஆசை

By subhashini · 16/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சுருதி-ரவி இருவருமே கிரிஷுக்கு சப்போர்ட் செய்து பேசுவதால் மனோஜால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப்பின் முத்து-மீனா இருவருமே தங்களுக்கு தெரிந்த இடங்களுக்கு சென்று கிரிஷ் பாட்டியை பற்றி விசாரித்து கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் ஸ்கூல் வந்த ரோகினி, தலைமை ஆசிரியரிடம் கிரிஷை தன்னுடன் அழைத்துச் செல்வதால் டிசி கொடுக்க சொல்லி கேட்டார். அவர்களும் ஒத்து கொண்டு கிரிஷுக்கு டிசி கொடுத்து விட்டார்கள்.

இன்னொரு பக்கம் மீனா, கிரிஷ் பாட்டி கோயிலில் வேலை செய்து கொண்டு அன்னதானம் சாப்பிடும் விஷயத்தை தெரிந்து கொண்டார். பின் ரோகினி, கிரிஷை அழைத்துக் கொண்டு வித்யா வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது ரோகினி, கொஞ்ச நாட்களுக்கு கிரிஷ் இங்கேயே இருக்கட்டும். நான் ஏதாவது ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னார். ஆரம்பத்தில் வித்யா முடியாது என்று வருகிறார் பின் வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டார். அதோடு வித்யா, ஒரு வாரம் மட்டும் தான் கிரிஷ் இங்க இருக்க நான் ஒத்துக் கொள்வேன். அதற்குப்பின் கிரிஷை அழைத்துக் கொண்டு சென்று விடணும் என்று சொல்வதால் ரோகிணியும் சம்மதிக்கிறார்.

சிறகடிக்க ஆசை:

க்ரிஷ், வித்யாவுடன் இருக்க மாட்டேன் என்று அழுது கதறினார். ஆனால், ரோகினி கேட்கவில்லை. கிரிஷை வித்யா வீட்டிலேயே விட்டு வந்து விட்டார். இன்னொரு பக்கம் சோகமாக முத்து வீட்டிற்கு வந்தார். அண்ணாமலை, கிரிஷ் எங்கே? என்று கேட்கிறார். அதற்கு முத்து, கிரிஷ் அம்மா டிசி வாங்கிக்கொண்டு சென்று விட்டதாக சொன்னார். இதைக் கேட்டு மீனா ஷாக் ஆனார். மனோஜ் -விஜயா இருவருமே சந்தோஷப்பட்டார்கள். மீனா, எதுவுமே சொல்லாமல் துபாயில் இருந்து வந்து கிரிஷை அவர் அம்மா அழைத்து சென்றது சந்தேகமாக இருக்கிறது. கிரிஷுக்கு பின்னால் ஏதோ மர்மம் இருக்கிறது.

நேற்று எபிசோட்:

அதை தான் கண்டுபிடிக்கணும் என்று சொன்னார். முத்து, முதலில் கிரிஷ் அம்மாவை கண்டுபிடிக்கணும் என்றார். இதையெல்லாம் கேட்டு ரோகிணி அதிர்ச்சியில் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் கோயிலுக்கு சென்ற மீனா, தன் அம்மாவை பார்த்து கிரிஷ் பற்றி எல்லா விவரத்தையும் சொல்லி வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் விஜயா, பார்வதியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது யோகா வகுப்பு தொடங்க இருப்பதாக விஜயா சொன்னார். அந்த சமயம் வந்த சிந்தாமணி, விஜயாவின் ஐடியாவை பாராட்டினார். பின் மூவருமே யோகா கிளாஸ் தொடங்குவதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் யோகா கிளாஸ் தொடங்குவதற்கான ஐடியாக்களை எல்லாம் சிந்தாமணி கொடுக்கிறார். இதனால் விஜயாவுமே ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறார். அதன் பின் போஸ்டர் ஓட்டுவதற்க்கு விஜயா யோகா போஸ் கொடுத்து போட்டோ எடுக்கிறார். இன்னொரு பக்கம் முத்து, வேலை செய்யும் இடத்திற்கு மீனா தன்னுடைய நண்பரை அழைத்து வருகிறார். அப்போது மீனா, மனோஜ் கடையில் இவர்கள் இஎம்யில் பொருள் வாங்க பணம் கட்டி இருக்கிறார்கள். இவருடைய மகனுக்கு உடம்பு சரியில்லாதல் பணத்தை திருப்பி கேட்டால் அசிங்கப்படுத்தி அனுப்புகிறார்கள் என்கிறார். இதனால் கோபப்பட்ட முத்து, மனோஜ் கடைக்கு சென்று சண்டை போடுகிறார்.

சீரியல் ட்ராக்:

கோபத்தில் மனோஜ், 20 ஆயிரத்திற்காக இப்படி எல்லாம் பிரச்சனை செய்வதா? என்று பணத்தை எடுக்க லாக்கரை பார்க்கிறார். ஆனால், லாக்கரில் பணம் இல்லை. உடனே ரோகினி, ராஜா-ராணி தான் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் தான் பணத்தை திருடி இருப்பார்கள் என்று பழி போட்டு விடுகிறார். இதனால்
மனோஜ், ராஜா- ராணி இருவரையுமே அடித்து வெளியே அனுப்பி விடுகிறார். பின் தன்னுடைய அக்கவுண்டில் இருந்து மீனாவின் தோழிக்கு பணத்தை மனோஜ் அனுப்பி விடுகிறார். அப்போது முத்து, கணக்கு வழக்கை ஒழுங்காக பார்க்க வில்லை. அப்பாவிடம் இந்த பஞ்சாயத்தை வைக்கிறேன் என்று சொல்கிறார். இதனால் ரோகிணி ரொம்பவே பதறுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full