மீனாவை அடிக்க போகும் முத்து, ரோகினி மீது சந்தேகப்படும் மனோஜ் - சிறகடிக்க ஆசை

By subhashini · 24/5/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சீதா, காதலிக்கும் விஷயத்தை தெரிந்தவுடன் முத்து கோபப்பட்டார். உடனே மீனா, சீதாவிற்கு ரொம்ப பிடித்திருக்கிறது. நாம் இருவரும் சந்திப்போம். அதற்குப் பிறகு முடிவெடுக்கலாம் என்று சொன்னார். அதனால் முத்துவும் அமைதியாகி விட்டார். இன்னொரு பக்கம் மனோஜ், தன்னுடைய அம்மாவிற்கு செயின் வாங்கித் தந்த விஷயம் பற்றி ரோகினி இடம் பேசி இருந்தார். ரோகினி, எனக்காக வீட்டில் பேசவே மாட்டாயா? எதற்காக இப்படி இருக்கிறாய்? என்றெல்லாம் கேட்டார். அதற்கு மனோஜ், என் அம்மா எனக்காக எவ்வளவோ செய்திருந்தார். நான் அம்மா பேச்சை மீறி எதுவும் செய்ய மாட்டேன். நான் சின்ன வயதில் இருந்தே அப்படித்தான் வளர்ந்தேன் என்று சொன்னார்.

ரோகிணி எவ்வளவு சொல்லியுமே மனோஜ் கேட்கவில்லை. இன்னொரு பக்கம் சுருதி சொந்தமாக restaurant திறப்பதை பற்றி ரவியிடம் பேசினார். ஆனால், அவர் கேட்கவே இல்லை. அதற்கு ரவி, என் சுயமரியாதையை விட்டு செய்ய முடியாது என்று சொன்னார். சுருதி எவ்வளவு எடுத்து சொல்லியுமே ரவி ஏற்றுக்கொள்ளவே இல்லை. மறுநாள் முத்து-மீனா இருவருமே சீதா காதலிக்கும் நபரை சந்திக்க போனார்கள். கோவிலில் சீதா, அருண் இருவருமே முத்து-மீனா வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் கோவிலில் முதலில் முத்து-அருண் இருவருமே யார் என்று தெரியாமல் சந்தித்துக் கொண்டார்கள். இதனால் கோபப்பட்டு இருவருமே முறைத்துக்கொண்டார்கள். பின் முத்து- மீனா இருவரும் சீதாவை பார்த்தார்கள். அப்போது சீதா, அருணை அறிமுகம் செய்கிறார். அருணை பார்த்தவுடன் மீனா-முத்து இருவருமே ஷாக் ஆனார்கள். அப்போது முத்துவிற்கு பயங்கர கோபம் வந்து மீனாவிடம் இந்த கல்யாணம் நடக்காது என்று அங்கிருந்து சொல்லிவிட்டு சென்று விட்டார். அருண், நான் இந்த வேலை சஸ்பெண்ட் ஆனதற்கு காரணம் உன் மாமா தான் என்று சொன்னார்.

நேற்று எபிசோட்:

பின் மீனாவின் அம்மாவை பார்க்க சென்ற முத்து, சீதா ஒருவரை காதலித்தார். அவன் நல்லவனே கிடையாது. அவனால் சீதாவை நன்றாக பார்த்துக்கொள்ள மாட்டான். நான் நல்ல பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று சொன்னார். மீனாவின் அம்மாவால் எதுவுமே பேச முடியவில்லை, அமைதியாக இருந்தார். அதற்குப்பின் வீட்டிற்கு மீனா, சீதா வந்தார்கள். அப்போது சீதா காதலிக்கும் விஷயம் தெரிந்ததால் மீனாவின் அம்மா கோபப்பட்டு அவரை அடித்தார். மீனா, நான் அவரிடம் எடுத்து சொல்லி புரிய வைக்கிறேன். தயவுசெய்து அமைதியாக இருங்கள் என்று தன் அம்மாவை சமாதானம் செய்தார். சீதாவிற்கு சப்போர்ட்டாக மீனா இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் ரோகினி, மனோஜிற்காக சாப்பாடு ஆர்டர் செய்து அனுப்பி வைக்கிறார். அதை பார்த்தவுடன் மனோஜ் நண்பர், உன் மீது இவ்வளவு பாசமாக இருக்கிறாய். ஏன் நீ இப்படி செய்கிறாய்? என் நண்பர் ஒருவர், அவர் மனைவியிடம் பேசவில்லை. அதனால் அவர் மனைவி வேறு ஒருவர் தொடர்பில் இருந்தார் என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் மனோஜ்க்கு பயம் வருகிறது. பின் வீட்டில் ரோகினி, இல்லாததை பார்த்து மனோஜ் பயப்படுகிறார். ஆனால், ரோகினி எங்கும் போகவில்லை. இருந்தாலும் மனோஜ் தன் நண்பன் சொன்னதை நினைத்து பார்க்கிறார். அதற்குப்பின் முத்துவிடம் மீனா, சீதாவின் காதல் விஷயமாக பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது முத்து, முடியாது. நான் வேறொரு பையனை பார்க்கிறேன். அவன் வேணாம் என்று வாக்குவாதம் செய்கிறார். இருவரும் இடையே வாக்குவாதம் நடக்கும்போது கோபத்தில் முத்து, மீனாவை அடிக்க வருகிறார். இதனால் மீனா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் ஸ்ருதி, புது ரெஸ்டாரன்ட் திறப்பதற்கான இடத்தை புரோக்கர் இடம் சொல்லி வைக்கிறார். ரவி இடமும் சொல்லி புரிய வைக்கிறார்.
ஆனால், ரவிக்கு புது ரெஸ்டாரண்ட் ஆரம்பிப்பதில் விருப்பமே இல்லை. பின் முத்து, ரவி, மனோஜ் மூவருமே மொட்டை மாடியில் சரக்கு சாப்பிட்டு தங்களுடைய மனைவிகளை பற்றி புலம்பி கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full