பாட்டி வீட்டை விட்டு வர மறுக்கும் முத்து, வெறுப்பை காண்பிக்கும் விஜயா - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், கிரிஷ் இப்படி இருக்க காரணம் முத்து தான். இரண்டு பேரும் ரவுடி தான் ஆக போகிறார்கள் என்று ரொம்ப மோசமாகவும் ஏளனமாகவும் பேசி இருந்தார். இதை கேட்டு முத்துவிற்கு பயங்கர கோபம் வந்து மனோஜின் சட்டையை பிடித்து சண்டைக்கு போனார். அப்போது மனோஜ், நீயும் சீர்திருத்த பள்ளிக்கு போனவ தானே என்று சொல்லி விட்டார். இதனால் முத்து மனமடைந்து நின்றார். உடனே அண்ணாமலை கோபத்தில் மனோஜை அடித்து விட்டார். பின் வீட்டில் உள்ள எல்லோரையுமே திட்டி அனுப்பி விட்டார்.
மீனா, முத்து வாழ்க்கையில் நடந்ததை பற்றி விசாரித்தார். மீனா, உங்கள் வாழ்க்கையில் நடந்தது என்ன? என்று கேட்டார். அதற்கு முத்து, தன்னுடைய ஃபிளாஷ்பேக்கை சொன்னார். அப்போது முத்துவின் சிறு வயதில் விஜயா ஒரு ஜோசியரை சந்தித்து பேசினார். அப்போது ஜோசியர், முத்து உங்களுடன் இருந்தால் உங்கள் வீட்டில் யாராவது உயிருக்கு ஆபத்து வரும். அவர் ஆறு வருடம் உங்களை விட்டு பிரிந்து இருக்கணும். அப்படி இருந்தால் உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும் என்றார். இதை பற்றி விஜயா, அண்ணாமலை இடம் சொன்னார்.
சிறகடிக்க ஆசை:
இதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை என்றாலும் விஜயாவின் பயத்திற்காக ஒத்துக் கொண்டார்.
அதற்குப்பின் முத்துவை அழைத்துக் கொண்டு பாட்டியின் வீட்டிற்கு அண்ணாமலை, விஜயா வந்தார்கள். அப்போது நடந்ததை பாட்டியிடம் விஜயா சொன்னார். பாட்டியுமே ஒத்துக் கொண்டார். ஆனால், முத்து தன்னுடைய அம்மாவை விட்டு பிரியா விருப்பம் இல்லாமல் கதறி அழுதார். இருந்தாலும் ஜோசியர் சொன்னதற்காக அங்கிருந்து விஜயா கிளம்பி விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்துவை பார்க்க அண்ணாமலை தான் அடிக்கடி வருகிறார். ஆனால், ஜோசியர் சொன்னதால் விஜயா வரவே இல்லை. இதனால் முத்துவிற்கு தன் அம்மாவின் மீது கோபம் வருகிறது. முத்து தன்னுடன் விளையாடும் பசங்களுடன் சண்டை போடுவதை பார்த்து விஜயா வருத்தப்படுகிறார். அதற்கு பின் விஜயா, முத்துவை பற்றி கவலைப்படவே இல்லை. முத்துவும் தன் பாட்டி வீட்டில் சந்தோசமாக இருக்கிறார். பின் ஆறு வருடம் கழித்து முத்துவும் வளர்ந்து விடுகிறார். முத்துவை அழைத்து போக விஜயா, அண்ணாமலை இருவருமே பாட்டி வீட்டுக்கு வருகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது முத்து, நான் பாட்டியுடன் இருக்கிறேன் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். இருந்தாலுமே வலுக்கட்டாயமாக விஜயா, முத்துவை அழைத்துக் கொண்டு போகிறார். வீட்டில் மனோஜ் வேண்டும் என்று முத்துவை வெறுப்பேற்றி பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் கோபத்தில் முத்து தட்டை தூக்கி எறிந்து விடுகிறார். முத்துவிற்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. உடனே விஜயா, முத்துவிற்கு காலில் சூடு போட்டு விடுகிறார். வேதனையில் முத்து தன்னுடைய பாட்டிற்கு ஃபோன் செய்து அழுது புலம்புகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.