ரோகினியை பிரச்சனையில் மாட்டிவிட்ட கிரிஷ், உண்மை அறிந்தாரா முத்து - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ராணி லேகியத்தை கொண்டு வந்து ரோகினிடம் கொடுத்தார். ரோகினி, மனோஜ் தன்னிடம் சந்தோசமாக பேசி பழகுவது போல் கனவு கண்டார். அதற்குப்பின் முத்து, கிரிஷை அழைத்து வந்தார். அதை பார்த்தவுடன் ரோகிணி பதறிப் போனார். முத்து வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்தார். இதனால் ரோகினி, தன்னை பற்றி உண்மை தெரிந்து விட்டதா என்று ரொம்பவே பயந்து நின்றார். அப்போது முத்து, கிரிஸ் பாட்டிற்கு அடிபட்டு இருக்கு. நான் அவரை ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டு கிரிஷை அழைத்து வந்தேன். பத்து நாட்களுக்கு கிரிஸ் இங்கே தான் இருப்பார் என்று சொன்னார்.
இதனால் விஜயா பயங்கரமாக கோவப்பட்டு திட்டினார். ரோகினி எதுவும் பேச முடியவில்லை. வீட்டில் உள்ள எல்லோருமே கிரிஷ் தங்குவதற்கு சம்மதம் சொன்னார்கள். விஜயா மட்டும் ரொம்ப மோசமாக கிரிசையும் அவருடைய குடும்பத்தையும் பற்றியும் பேசினார். கடைசியில் அங்கேயே கிரிஷ் தங்கினார். அதற்குப்பின் ரோகினி தன்னுடைய அம்மாவை பார்ப்பதற்காக ஹாஸ்பிடல் போனார். அங்கு ரோகினி, தன் அம்மாவைப் பற்றி விசாரிக்காமல் திட்டி கொண்டு இருந்தார். இதனால் கோபப்பட்டு அவருடைய அம்மா, ரோகினியை திட்டினார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் ரோகினி, கிரிஷ் உன்னையும் பார்த்துக் கொள்வதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். முத்துவிடம் நான் சொல்வது போலவே சொல் என்றார். அதற்கு ரோகினி அம்மாவும் சம்மதித்தார். பின் கிரிஷ், யாரிடமும் சொல்லாமல் ரோகினி ரூமுக்கு சென்று விட்டார். அப்போது ரோகினி, நான் தான் உன் அம்மா என்று யாரிடமும் சொல்லாதே என்று சொன்னார். அதற்கு பின்பு மீனா தேடி வர, கிரிஷ் ஏதோ சொல்லி சமாளித்து விட்டார். மறுநாள் காலையில் கிரிஷ் பள்ளிக்கு லீவ் லெட்டர் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.
நேற்று எபிசோட்:
உடனே விஜயா, முத்து-மீனா இருவரும் படிக்காததை பற்றி கிண்டல் கேலி செய்தார். பின் ரோகினி, கடிதம் எழுதி தந்தார். ஆனால், பழக்க தோஷத்தில் ரோகினி தன் பெயர் எழுதி விட, மனோஜ் அதை பார்த்து கேள்வி கேட்டார். உடனே ரோகினி ஏதோ சமாளித்து விட்டார். இன்னொரு பக்கம் விஜயா, பரதநாட்டிய வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது காதல் ஜோடியில் அந்த பெண் மயங்கி கீழே விழுந்தார். பின் விஜயா, மருத்துவரை வரவைத்து செக் பண்ண, டாக்டர் இந்த பெண் கர்ப்பமாக இருக்கிறார். நீங்கள் பாட்டியாகப் போகிறீர்கள் என்று சொன்னார். இதை கேட்டு விஜயா மயங்கி விழுந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மயக்கம் தெளிந்த விஜயா, அந்தப் பொண்ணு இப்படி செய்வாள் என்று நான் நினைத்து பார்க்கவே இல்லை ரொம்ப என்று புலம்புகிறார். இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவருமே கிரிஷை அழைத்துக் கொண்டு ரோகினியின் அம்மாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு ரோகினி அம்மா, இனி கிரிஷ் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். ஆனால், முத்து-மீனா இருவருமே கேட்கவில்லை. நீங்கள் குணமடையும் வரை கிரிஷை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் ரோகிணி ஒளிந்து நிண்டு கேட்டுக்கொள்கிறார். இன்னொரு பக்கம் புதிய ரெஸ்டாரன்ட் திறப்பதை பற்றி ரவி-ஸ்ருதி இடையே வாக்குவாதம் நடக்கிறது.
சீரியல் ட்ராக்:
ரவி, கடைசிவரை தன்னுடைய சொந்த முயற்சியில் தான் ரெஸ்டாரண்ட் தொடங்குவதில் உறுதியாக இருக்கிறார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். கிரிஷ் யாருக்கும் தெரியாமல் ரோகிணியின் ரூமிக்க போகிறார். அப்போது ரோகினி, நீ இங்கே வராதே, வெளியே போ என்று கிரிஷை அடிக்கிறார். அந்த சமயம் வந்த மீனா, எதற்காக கிரிஷை அடித்தீர்கள் என்று ரோகினிடம் சண்டை போடுகிறார். பின் முத்துவுமே வந்துவிடுகிறார். அப்போது முத்து, ரோகினி அடித்தாரா என்று கேட்டதற்கு, கிரிஷ் இல்லை என்று பொய் சொல்லி சமாளிக்கிறார். அதற்குப்பின் வித்யாவிற்கு ஃபோன் செய்த ரோகினி, கிரிஷ் கொஞ்ச நாள் உன்னுடைய வீட்டில் இருக்கட்டும் என்று கேட்க, வித்யா என்னால் முடியாது. நீ உண்மையை சொல்லு தேவையில்லாத பிரச்சனையில் மாட்டிக்கொள்ளாதே என்று அறிவுரை சொல்கிறார் இத்துடன் சீரியல் முடிகிறது.