திருடனை சேர்ந்து பிடித்த அருண்-முத்து, ரோகினி மீது சந்தேகப்படும் மனோஜ் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, அவளுக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்ளட்டும் என உங்கள் வாயால் சொல்லுங்கள் என்றார். கோபத்தில் முத்து, மீனாவை முறைத்தார். பின் முத்து, அவர்கள் குடும்ப விஷயத்தில் நான் எதுவும் சொல்ல முடியாது என்று சொன்னார். பின் சீதா, நான் எந்த தவறான முடிவும் எடுக்க மாட்டேன். தைரியமாக இருங்கள் மாமா என்று அறிவுரை சொன்னார். இன்னொரு பக்கம் விஜயா, பார்வதி இருவரும் நீத்துவை சந்தித்து பேசி இருந்தார்கள். அப்போது விஜயா, உனக்கு நான் ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து இருக்கிறேன்.
ரொம்ப அழகானவன் என்றெல்லாம் சொன்னார். உடனே நீத்து, எனக்கு ரவி மாதிரி பையன் இருந்தால் போதும் என்று ரொம்ப புகழ்ந்து பேசி இருந்தார். இது எல்லாம் கேட்டு விஜயாவிற்கு பயங்கர கோபம் வந்தது. பின் வீட்டிற்கு வந்த விஜயா, நீத்து சொன்ன விஷயத்தை எல்லாம் சுருதியிடம் சொன்னார். இன்னொரு பக்கம் மீனாவின் அம்மா, சத்யா இருவரும் முத்துவை சந்தித்து சீதாவின் கல்யாணம் விஷயமாக பேசி இருந்தார்கள். அப்போது முத்து, அவன் குணம் சரியில்லை. நான் நல்ல மாப்பிள்ளை பார்க்கிறேன் தயவுசெய்து இதைப் பற்றி பேசாதீர்கள் என்று தன்னுடைய மாமியாருக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார். பின் இதைப்பற்றி முத்து, மீனாவிடம் சொன்னார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் மீனா, மீண்டும் மீண்டும் சீதாவின் நிலைமையும், அவருடைய காதலையும் பற்றி எடுத்து சொல்லி புரிய வைத்தார். ஆனால், முத்து மாறவே இல்லை. சீதாவிற்கு அவள் பிடித்த மாதிரி ஒரு நல்ல மாப்பிள்ளை கொண்டு வருகிறேன் என்று சொன்னார். இதனால் மீனாவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை வேதனைப்பட்டார். இன்னொரு பக்கம் அருணின் அம்மா, முத்துவிடம் சொல்வதற்காக பரதநாட்டியம் கிளாஸ்க்கு போனார். அங்கு அருணின் அம்மா, அருண்- சீதா காதலிக்கும் விஷயத்தை பற்றி சொன்னவுடன் விஜயா கோபப்பட்டார். அதோடு மீனாவையும் முத்துவையும் ரொம்ப கேவலமாக பேசி இருந்தார்.
நேற்று எபிசோட்:
இதனால் அருணின் அம்மாவிற்கு கோபம் வந்து அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் பார்வதி, ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்டார். உடனே விஜயா, சீதாவிற்கு நல்ல வசதியான குடும்பம் கிடைத்தால் அவருடைய அம்மாவை கையில் பிடிக்க முடியாது. அதனால் தான் அப்படி பேசினேன் என்றார். அதற்குப்பின் மனோஜின் வாய் கட்டை எடுப்பதற்காக சாமியார் ஒருவரை வீட்டிற்கு விஜயா வரவைத்தார். அப்போது சாமியாரை பார்த்தவுடன் முத்து, பேய் ஓட்டுபவர் தான் வந்திருக்கிறார் என்று வீட்டில் கலவரம் செய்து கொண்டிருந்தார். கடைசியில் அவர் மனோஜின் வாய் கட்டை எடுக்க வந்தவர் என்று தெரிய வந்தது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வீட்டிற்கு வந்த சாமியார், மனோஜ் பேசுவதற்காக அவருடைய வாயில் சூடத்தை போட்டு விடுகிறார். இதனால் மனோஜ் வலி தாங்க முடியாமல் கத்துகிறார். பின் கலாட்டா கலவரம் செய்து ஒரு வழியாக மனோஜ் பேசி விடுகிறார். அதற்குபின் ரோகினிடம் மனோஜ், எதற்காக நான் சொல்லாததை என்னுடைய அம்மாவிடம் சொன்னாய் என்று கேட்கிறார். உடனே ரோகினி, நீ தான் எனக்காக சப்போர்ட் செய்ய மாட்டுகிறாய். அதனால் தான் நான் பேசுகிறேன். நாம் இருவரும் காதலித்து கல்யாணம் செய்து கொண்டோம் என்று வழக்கம்போல இருவரும் சண்டை போடுகிறார்கள். மறுநாள் காலையில் முத்து சவாரிக்கு வந்து கொண்டிருக்கும்போது ஒரு பெண்ணினுடைய செயினை திருடர்கள் திருடி விடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
முத்து- அருண் இருவருமே அந்த திருடனை பிடிக்க ஓடுகிறார்கள். அந்த திருடன் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து அந்த பெண்ணுடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுகிறார். பின் எப்படியோ அருண்-முத்து இருவருமே சேர்ந்து அந்த திருடனை பிடித்து விடுகிறார்கள். அருண், அந்த திருடனை போலீசில் கொடுத்ததால் அவரை எல்லோருமே பாராட்டுகிறார்கள். இந்த சந்தோஷத்தை அருண் தன்னுடைய அம்மாவிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார். உடனே அவருடைய அம்மா, மீனாவின் மாமியாரை சந்தித்து பேசினேன். ஆனால், அவர் என்னை ரொம்பவே அவமானப்படுத்திவிட்டார். உன்னை வேண்டாம் என்று சொன்ன குடும்பம் இனி உனக்கு வேண்டாம் என்று ரொம்ப எமோஷனலாக பேசுகிறார். இன்னொரு பக்கம் ரோகினி, தன்னுடைய பாய் பிரண்ட் உடன் பேசுவது போல் நடிக்கிறார். இதை எல்லாம் கேட்ட மனோஜ்க்கு சந்தேகம் வந்து ரோகினியிடம் விசாரிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.