சத்யாவை தேர்வு எழுத விடாமல் கடத்திய சிட்டி, தேடி அலையும் முத்து - அருண், அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்ட வேண்டாம். நான் அத்தை சொல்வது தான் கேட்பேன் என்று சொன்னார். கடைசியில் விஜயா, ரோகினி ஷோரூம் போகக்கூடாது, பார்லர் வேலையை பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார். அதற்கு பின் சீதாவை வீட்டிற்கு அருண் அழைத்து வந்தார். அந்த இடத்தில் தான் முத்து தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இது தெரியாமல் சீதா- அருண் இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். கடைசியில் அருண் கிளம்பும்போது முத்து பார்த்து விட்டார். பின் சீதாவிடம் இங்கு என்ன செய்கிறாய்? என்று கேட்பதற்கு பிரண்ட் வீட்டில் விட வந்தார் என்று ஏதேதோ சொல்லி சமாளித்தார்.
மீனா, தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்று இருந்தார். அப்போது சீதாவிடம் மீனா, நீ யாருடன் பைக்கில் வந்தாய்? உன்னுடைய பிரண்டா? என்றெல்லாம் விசாரித்தார். சீதாவும் முடிந்தவரை சமாளிக்க, பின் அவர், அவர் என்னை காதலிக்கிறார். நானும் அவரை காதலிக்கிறேன். ஆனால், இன்னும் அவரிடம் நான் சம்மதம் சொல்லவில்லை. அவரைப் பற்றி தெரிந்து கொண்டு வீட்டில் எல்லோரிடமும் பேசிவிட்டு சொல்லலாம் என்று இருக்கிறேன் என்று சொன்னவுடன் மீனா சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் வீட்டில் ரோகினி, தன்னுடைய பார்லர் ஆர்டரை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.
சிறகடிக்க ஆசை:
அப்போது விஜயா, ரோகினி இடம் விசாரித்துவிட்டு அவருடைய கிரெடிட் கார்டை வாங்கி வைத்து விட்டார். ரோகினியால் எதுவும் பேச முடியவில்லை. அதற்குப்பின் வீட்டிற்கு வந்த மனோஜிடம் ரோகினி இடம் பேசினாயா? கடைக்கு வந்தாளா? என்றெல்லாம் விசாரித்தார். பின் ரோகினி உங்கள் அம்மா, என்னுடைய கிரிடிட் கார்ட் வாங்கி விட்டார் என்று சொன்னதற்கு, மனோஜ் எதுவுமே பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. அதற்குப்பின் ஸ்ருதி, மீனா, முத்து, ரவி ஆகிய 4 பேருமே ரோகினி விஷயத்தை பற்றி பேசி இருந்தார்கள். அப்போது மாடிக்கு மனோஜை வரவைத்து விஜயா செய்த விஷத்தை பற்றி பேசி இருந்தார்கள். ஆனால், மனோஜ் அதை கண்டு கொள்ளவே இல்லை. அவர்களுக்கு எதிராக தான் பேசி இருந்தார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் முத்து-ரவி சொல்ல வருவதை மனோஜ் கேட்கவே இல்லை. அவர்கள் மீது தான் கோபப்பட்டு சென்றார். மறுநாள் காலையில் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது முத்து, மீனா ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டு வா, என் அம்மாவிடம் கொடு என்று சொன்னவுடன் அண்ணாமலைக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது முத்து, ரோகினி விஷயத்தை சொன்னார். அதற்கு அண்ணாமலை, எதற்காக இப்படி செய்தாய்? என்று விஜயாவை கேட்டார். உடனே ரோகினி, அத்தைக்கு எப்போது விருப்பமோ அப்போ கொடுக்கட்டும்.
சீரியல் ட்ராக்:
இந்த விஷயத்தில் யாரும் தலையிட்டு குளிர் காயவேண்டாம் என்று சொல்லிவிடுவதால் யாராலும் எதுவும் பேச முடியவில்லை. அதற்குப் பெயர் மீனா தன் தோழிகளுடன் ஸ்கூட்டி வந்து கொண்டிருந்தார்.
மூன்று பேர் வருவதால் டிராபிக் போலீஸ் அருண், பைன் போட்டார். உடனே மீனாவை பார்த்ததும் அருண், நீ அந்த ரவுடி பொண்டாட்டி தானே என்று கேட்டதற்கு மீனா கோபப்பட்டார். பின் பயனை கட்டிவிட்டு கிளம்பி விட்டார். அதற்குப்பின் வேலை முடித்து விட்டு அருண், சீதாவை அழைத்து வர பார்க்கிறார். சீதாவே அங்கு வந்து விட்டார். அப்போது அவர், என் அக்காவிற்கு நம் விஷயம் தெரிந்து விட்டது என்று சொன்னவுடன் அருண் ரொம்ப சந்தோஷப்பட்டார்.
https://www.youtube.com/watch?v=S2ss8m1Ykn8
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் சீதா, சத்யாவை காணவில்லை என்று முத்துவிற்கு போன் செய்து சொல்கிறார். தன்னுடைய நண்பன் செல்வத்திடம் முத்து, சத்யா காணாமல் போன விஷயத்தை சொல்லி எல்லா இடத்திலும் தேடி அலைகிறார். தேர்வு எழுத விடக்கூடாது என்று தான் சிட்டி, சத்தியாவை கடத்தி வைத்திருக்கிறார். பின் சீதா தன்னுடைய காதலன் அருணுக்கு போன் செய்து சத்யா காணாமல் போன விஷயத்தை சொன்னவுடன் அவரும் போலீஸ் உதவியுடன் சத்யாவை கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இனி அடுத்து என்ன? என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.