கிரிஷை காப்பாற்ற முத்து போட்ட திட்டம், ரோகினி சொன்ன விஷயம் - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 23/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் க்ரிஷ், தன்னுடைய மார்க் சீட்டை மனோஜிடம் காண்பித்து கையெழுத்து போட சொன்னார். மனோஜ், நான் எதற்கு போடணும் என்றார். இதை கேட்ட விஜயா கோபப்பட்டு கிரிஷை திட்டி ஒழுங்கு மரியாதையாக இருந்துகொள் இல்லை என்றால் அவ்வளவுதான் என்றெல்லாம் மோசமாக பேசி இருந்தார். மீனா,முத்து, அண்ணாமலை எல்லோருமே சப்போர்ட் செய்தும் விஜயா கேட்கவில்லை. அதற்குப் பின்னர் ரூமில் ரோகினி பேய் வந்தது போல நடிப்பதால் மனோஜ் பயந்து கொண்டு ஓடி வந்து மார்க் கார்டில் கையெழுத்து போட்டு விட்டார். இதையெல்லாம் பார்த்து முத்துவுக்கு சந்தேகம் வந்தது.

ரோகினி-மனோஜ் இருவரும் கிரிஷை அழைத்து வருவதற்கு சென்றார்கள். இன்னொரு பக்கம் மேனேஜர், நான் உன் அம்மாவுடைய நண்பர், உன்னை அழைத்திட்டு வர சொன்னார் என்று ரோகினி புகைப்படத்தை காண்பித்தார். இதை நம்பி கிரிஷ், மேனேஜருடன் சென்று விட்டார். அதற்குப்பின் பள்ளி சென்று ரோகிணி பார்த்தார். ஆனால், கிரிஷ் அங்கு இல்லை. இதை வீட்டில் எல்லோரிடமும் மனோஜ், ரோகிணி சொன்னார்கள். முத்து-மீனா இருவரும் பதறுகிறார்கள். வழக்கம் போல விஜயா, அவன் போய் தொலையட்டும். எல்லோரும் வேலையை பாருங்கள் என்றார்.

சிறகடிக்க ஆசை:

முத்து, தனக்கு தெரிந்தவர்களுக்கெல்லாம் போன் செய்து கிரிஷை தேட சொன்னார். அதற்கு பின் மேனேஜரிடம் இருந்து போன் வந்தது. ரூமிற்கு சென்று ரோகினி பேசினார். அப்போது மேனேஜர், கிரிசை தேடி அலைகிறாயா? உன் மகனை நான் தான் கடத்திருக்கிறேன். 2 லட்சம் பணம் தந்தால்தான் விடுவேன் என்றார். இதனால் ரோகிணி ரொம்பவே பயந்து விட்டார். அதற்குப்பின் மீனா, இது சிந்தாமணி வேலையாக இருக்குமா? என்றார். உடனே விஜயா, அதெல்லாம் கிடையாது. நான் எதுவும் சொல்லவில்லை என்றார். அதற்குப்பின் மீனா, போலீசில் கம்பளைண்ட் கொடுக்கலாம் என்றார். ரோகினி, அதெல்லாம் வேண்டாம் என்று தடுத்து விட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனாவை தனியாக அழைத்து சென்ற ரோகினி,கிரிஷை மேனேஜர் தினேஷ் கடத்தின விஷயத்தை சொல்கிறார். பின் தன்னுடைய முழு விவரமும் தினேஷுக்கு தெரியும் என்ற உண்மையையெல்லாம் ரோகிணி சொல்கிறார். இதை கேட்ட மீனா, வீட்டில் எல்லோரிடமும் உண்மையை சொல் என்கிறார். ஆனால், ரோகினி முடியாது என்கிறார். மீனா, நீ மனோஜ் போன் நம்பரை கொடுத்து பணம் கேட்க சொல் என்று ஒரு ஐடியா சொல்கிறார். அதற்குப் பின் தினேஷ், மனோஜ்க்கு போன் செய்து கிரிஷை கடத்தின விஷயத்தை சொல்லி பணம் கேட்கிறார். உடனே முத்து, பணம் தருகிறேன். கிரிஷ் இருக்கும் இடத்தைப் பற்றி எல்லாம் கேட்க சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் மனோஜ், என்னால் பணம் தர முடியாது. நீ சொன்னதால்தான் சொன்னேன் என்கிறார். உடனே முத்து, பணத்தை கொடுப்பது போல் அவன் சொன்ன இடத்திற்கு சென்று அவனை பிடித்து விடலாம் என்றெல்லாம் ஐடியா சொல்கிறார். இதைக் கேட்டு ரோகினிக்கு, என்ன செய்வது என்று புரியவில்லை. அதற்கு பின் தினேஷ் சொன்ன இடத்திற்கு மனோஜ் வந்துவிடுகிறார். முத்து யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொண்டிருக்கிறார். பின் தினேஷ், அந்த பணத்தை எடுத்துக்கொண்டு போகும் போது முத்து அவனைப் பிடித்து விடுகிறார். இருந்தாலும் எப்படியோ தினேஷ் தப்பித்து விடுகிறார். முத்து அவர்களை துரத்திக் கொண்டே வரும்போது அருண் அங்கு வருகிறார். உடனே முத்து, நடந்ததை சொல்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full