ரோகினியின் மாஸ்டர் பிளானிற்கு முத்து வைத்த ஆப்பு, சிந்தாமணி செய்த வேலை - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முருகன், தனக்கு தெரிந்த உறவினர் வீட்டுக்கு முத்துவை அழைத்து வந்தார். ஆனால், அவர்கள் கிரிஷ் அப்பாவின் உறவினர்கள் தான். ஆனால், இந்த விஷயம் முத்து- முருகனுக்கும் தெரியாது. பின் வித்யா அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது எல்லா உண்மையும் தெரிந்து கொண்டார். பின் வித்யா, நீ சீக்கிரமாகவே மாட்டிக்கொள்ளப் போகிறாய். முத்து சவாரி ஒட்டுவது க்ரிஷ் அப்பாவுடைய உறவினர்களை தான். எல்லா உண்மையும் தெரிந்து விடப் போகிறது என்றெல்லாம் சொல்வதால் ரோகிணி ரொம்பவே பயப்பட்டார்.
ரோகினி, முத்து அந்த சவாரியை எடுக்கவே கூடாது. எதாவது செய் என்றார். அதற்கு வித்யா, என்னால் எல்லாம் எதுவும் பேச முடியாது என்றார். ரோகிணி, விஜயாவிற்கு போன் செய்து லேடிஸ் கிளப்பிலிருந்து எனக்கு மூன்று டிக்கெட் கிடைத்திருக்கிறது. நாம் பாண்டிச்சேரி ட்ரிப் போகலாம் என்றார். அதற்கு விஜயா ஒத்துக்கொண்டார். இன்னொரு டிக்கெட்டில் சுருதியை நம்முடன் அழைத்து செல்லலாம் என்று விஜயா சொன்ன உடன் ரோகினி சம்மதித்தார். பின் ரோகினி, எந்த பெண்களுமே வீட்டில் கிடையாது. அதனால்
என் மாமனார் வீட்டில் தனியாகத்தான் இருப்பார்.
சிறகடிக்க ஆசை:
இதனால் முத்து சவாரிக்கு போகாமல் தன்னுடைய அப்பாவை பார்த்துக் கொள்வார் என்றார். பின் ட்ரிப்புக்கு கிளம்பி விட்டார்கள். பின் முத்து, நீங்கள் எப்படி வீட்டில் தனியாக இருப்பீர்கள் என்று தன்னுடைய தந்தைக்கு துணையாக இருக்கிறார். ரவியும் முத்துவுடன் இருக்கிறார். அதற்குப்பின் மனோஜ், வேலைக்கு போகாமல் வீட்டிலேயே தங்கி விட்டார். நான்கு ஆண்களுமே சேர்ந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ரோகினி தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து கிரிஷ் அப்பாவின் உறவினர்கள் பற்றி விசாரித்து வையுங்கள் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை வீட்டில் தனியாக இருப்பதால் முத்து, முருகன் சொன்ன சவாரிக்கு போக வேண்டாம் என்று முடிவு எடுத்து செல்வத்தை அனுப்பி வைக்கிறார். ஆனால் செல்வம், நாளை எனக்கு வேறு ஒரு சவாரி இருக்கிறது. இன்று ஒரு நாள் மட்டும் தான் போவேன் என்று சொல்வதால் முத்தவும் ஒத்துக் கொள்கிறார். இன்னொரு பக்கம் ரோகினி தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து சவாரிக்கு யார் சென்றிருக்கிறார்கள் என்று விசாரிக்க சொல்கிறார். அப்போது லட்சுமி, முத்துவின் நண்பர் செல்வம் தான் சென்றிருக்கிறார் என்று சொன்னவுடன் ரோகினி சந்தோசப்படுகிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் சத்யா, தான் வேலை செய்யும் முதலாளி, ரேகா மூவரும் சேர்ந்து ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தன்னுடைய பெண்ணை பார்ப்பதற்கு சிந்தாமணி ஹோட்டலுக்கு வருகிறார். அந்த சமயம் பார்த்து மீனா வெளியூர் சென்றதால் அந்த ஆர்டர் மீனா வேண்டாம் என்று சொல்வதால் அந்த ஆர்டரை சிந்தாமணியை செய்ய சொல்லி கேட்கிறார்கள். கோபத்தில் சிந்தாமணி, அவள் கேன்சல் செய்த ஆர்டரை என்னால் செய்ய முடியாது என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் ஆண்கள் சமைக்கிறார்கள். அந்த சமயம் வந்த அண்ணாமலையின் உறவினர்கள் வந்து விடுவதால் சமைத்த சாப்பாட்டை எல்லாம் அவர்களுக்கு கொடுத்து விடுகிறார்கள். இதை பார்த்து மனோஜ்க்கு பயங்கர கடுப்பாகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது