முத்துவை தாக்கும் சிந்தாமணி ஆட்கள், அண்ணாமலை வீட்டில் நடந்த கலவரம் - சிறகடிக்க ஆசை
முத்துவை தாக்கும் சிந்தாமணி ஆட்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகிணி, யாரிடம் இப்படி பொய் பேச கற்றுக் கொண்டாய்? எதற்காக இப்படி செய்கிறாய் என்று கேட்டார். கிரிஷ், உன்னிடம் தான் நான் கற்றுக் கொண்டேன். நீ தான் என்னை பொய் பேச சொன்னாய். என்னிடம் எல்லாரிடமும் நீ கோபப்படுகிறாய் என்று ரோகிணி தவறை சுட்டிக்காட்டுகிறார். எதுவும் பேசாமல் அங்கிருந்து அழுது கொண்டே ரோகினி வெளியே வந்து விட்டார். பின் தன் மகனின் வாழ்க்கை தன்னாலே கெட்டுப் போனது நினைத்து ரோகினி வருத்தப்பட்டார். அது மட்டும் இல்லாமல் தன் மகனை நல்ல வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்றெல்லாம் ரோகினி நினைத்தார்.
இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவரும் சத்யா- ரேகா இருவருக்கும் திருமணம் செய்வது பற்றி வீட்டில் பேசி இருந்தார்கள். விஜயா, சீக்கிரமாகவே திருமணம் ஏற்பாடு செய். அந்த சிந்தாமணி முகத்தில் கறியை பூச வேண்டும் என்றார். பின் தாம்பூல தட்டோடு சிந்தாமணியின் வீட்டிற்கு சென்று ரேகா-சத்யா திருமணத்தை பற்றி முத்து-மீனா பேசி இருந்தார்கள். இதனால் கொந்தளித்த சிந்தாமணி, என்னை மீறி நீ எப்படி திருமணத்தை நடத்துகிறாய்? என்று சவால் விட்டார். முத்து, கண்டிப்பாக இந்த திருமணம் நடக்கும் என்று பதிலுக்கு சவால் விட்டு வந்தார்.
சிறகடிக்க ஆசை:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜின் கடைக்கு மனநலம் பாதிக்கப்பட்ட கனகாவும் அவருடைய அம்மாவும் மீண்டும் வந்திருக்கிறார்கள். அப்போது கனகா ரொம்பவே மனோஜூடன் ஜாலியாக பேசுகிறார். கனகாவின் அம்மா, என்னுடைய மகள் யாருடனும் இவ்வளவு சந்தோசமாக இருந்ததில்லை. உங்களுடைய பெயரை தான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறாள். நீங்கள் என் மகளை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். எங்களுக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது. எல்லாவற்றிற்கும் நீங்கள் தான் அதிபதி. திருமணத்திற்கு பிறகு என் மகளுடைய மனநிலை மாறும் என்று சொல்கிறார்கள். நீங்கள் யோசித்து நல்ல முடிவு சொல்லுங்கள் என்கிறார்.
இன்றைய எபிசோட்:
இதைக் கேட்டு ஷாக்கான மனோஜ், பணம் சொத்து கிடைக்கப் போகிறது என்று பதில் சொல்ல முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். பின் சிந்தாமணியின் ஆட்கள் முத்துவின் வீட்டிற்குள் புகுந்து முத்துவை அடிக்கிறார்கள். முத்துவும் முடிந்தவரை தடுக்கிறார். இருந்தாலும் கலவரம் வெடிக்கிறது. பின் சிந்தாமணியும் அவருடைய கணவரும் வீட்டிற்குள் வருகிறார்கள். முத்து, ஒழுங்கு மரியாதையாக உன்னுடைய ஆட்களை அழைத்துக் கொண்டு சென்று விடு என்கிறார்.
சீரியல் ட்ராக்:
சிந்தாமணி, என் மகளை என்னிடம் ஒப்படைக்கும் வரை இப்படித்தான் பிரச்சனை செய்வேன் என்கிறார். முத்து, அவர்களுக்கு கல்யாணம் செய்து வைப்பேன் என்று சவால் விடுகிறார். பின் வீட்டில் கலவரம் வெடிப்பதால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் அண்ணாமலை வீட்டிற்கு வந்து விட்டார்கள். அவர்கள், சிந்தாமணியை தட்டி கேட்கிறார்கள். சிந்தாமணியும் தெனாவட்டாக பதில் சொல்கிறார். அக்கம் பக்கத்தில் எல்லோருமே மிரட்டியதால் சிந்தாமணி அங்கிருந்து சென்று விடுகிறார்.