ரோகினிக்கு எதிராக ஆதாரங்களை திரட்டும் முத்து, ஸ்ருதியிடம் ரவி போட்ட கண்டிஷன் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ்க்கு போன் செய்த ஒரு நபர், உங்கள் மனைவி ரோகினி பார்க்கில் யாரோ ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தார் என்று ஏத்தி விட்டார். இதனால் மனோஜிற்கு பயங்கர கோபம் வந்தது. அந்த நபர் ரோகினி சொன்னதைப் போலவே செய்துவிட்டார். மனோஜ் பார்க்கிற்கு சென்று ரோகிணி செய்யும் வேலையை கையும் களவுமாக பிடிக்க நினைத்தார். இன்னொரு பக்கம் சீதா, தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது சீதாவின் கையில் அடிபட்டு இருப்பதை மீனா விசாரித்தார். பின் ஒரு கட்டத்தில் வேதனை தாங்க முடியாமல் சீதா அழுதார்.
சீதா, அருண் கோபத்தில் என்னை அடித்துவிட்டார். எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு அடித்தார். மாமா பெயரை சொன்னால் அவருக்கு கோபம் அதிகமாகி என்ன செய்கிறேன் என்று தெரியாமல் நடந்து கொள்கிறார் என்றார். பின் சீதாவிற்கு மீனா ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பினார். இன்னொரு பக்கம் ரோகினியை பார்ப்பதற்கு பார்க்கிங்க்கு மனோஜ் வந்திருந்தார். பின் ரோகினி வைத்த ஆட்கள் மனோஜை சுத்தி வளைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டு அடிக்கப் போனார்கள். அந்த சமயம் வந்த ரோகினி, அவர் என்னுடைய கணவர். அடிக்காதீர்கள் என்றார்.
சிறகடிக்க ஆசை:
பின் பார்க்கில் இருந்தவர்கள், சொந்த பொண்டாட்டியை சைட் அடிக்கிறாயா? என்று திட்டினார். மனோஜ், அவர் என்னுடைய மனைவி தான் என்று சொல்லிவிட்டார். இதையெல்லாம் ஒரு ஆதாரமாக ரோகினி சேகரித்து வைத்துக் கொண்டார். இன்னொரு பக்கம் அருணின் வீட்டிற்கு சென்ற மீனா, உங்களுக்கும் என் கணவருக்கும் நிறைய பிரச்சனை இருக்கிறது. இது எதார்த்தமாக நடந்த விபத்திற்கு என் கணவர் காரணம் இல்ல. சீதாவுடன் சந்தோஷமாக வாழுங்கள் என்றெல்லாம் அட்வைஸ் பண்ணுகிறார். அதற்குப்பின் அண்ணாமலை, இந்த விவாகரத்து சீக்கிரமாக கிடைக்காது. வேறு ஏதாவது ஏற்பாடுகள் செய்கிறோம் என்றார். முத்து- மீனா இருவரும் ரோகிணி ரொம்ப புத்திசாலி. எது வேண்டுமானாலும் செய்வார் என்றார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் முத்து-மீனா இருவரும் வித்யா, முருகனை சந்தித்து ரோகினி விவாகரத்து விஷயமாக பேசுகிறார்கள். வித்யா, நான் கோர்ட்டில் சாட்சி சொல்ல தயார் என்கிறார். அதற்குப்பின் மலேசியா மாமாவாக நடிக்க வந்த மணியை சந்தித்து முத்து-மீனா பேசுகிறார்கள். மணி உண்மையை சொல்ல வருகிறேன் என்று ஒத்துக்கொள்கிறார். இன்னொரு பக்கம் விஜயா, பார்வதியை சந்தித்து கோர்ட்டில் ரோகினி பற்றி பொய் சொல்ல சொல்கிறார். பார்வதி முடியாது என்கிறார். சிந்தாமணியிடம் விஜயா உதவி கேட்கிறார். சிந்தாமணியும் என்னால் முடியாது என்று சொல்லி வருகிறார்.
சீரியல் ட்ராக்:
அதோடு சிந்தாமணி, விஜயா பேசும் விஷயத்தை எல்லாம் ரோகிணிக்கு போன் செய்து கேட்க வைக்கிறார் இதை அறிந்த ரோகினி உஷாராகி விடுகிறார். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் ஹோட்டலுக்கு சென்ற ரவி மன்னிப்பு கேட்டுவிட்டு வேலை செய்ய ஒத்துக்கொள்கிறார். அது மட்டும் இல்லாமல் நீத்துவுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை உன் அப்பாவிடம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று கண்டிஷன் சொல்கிறார். கோபத்தில் ஸ்ருதி, எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்கிறார். ரவி, நீ அதை செய்தால் நான் வேலைக்கு வருகிறேன் என்கிறார். உடனே ஸ்ருதி, உனக்கும் நீத்துவுக்கும் சம்மந்தமில்லை என்று சோசியல் மீடியாவில் பேசி வீடியோ போடு என்கிறார்.