ரோகினியின் சூழ்ச்சியால் முத்துவிடம் மாட்டிக்கொண்ட தினேஷ், அடுத்து என்ன? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 19/3/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், கிரிஷை அடிக்க போனார். அப்போது வந்த ரோகினி அழுது டிராமா எல்லாம் செய்து நடிக்கிறார். இதையெல்லாம் பார்த்த கஸ்டமர் மனோஜை திட்டிவிட்டு பொருட்களை வாங்காமல் அங்கிருந்து சென்றார்கள். இதனால் மனோஜ் ரொம்பவே கஷ்டப்பட்டார். பின் வீட்டிற்கு வந்த மனோஜ் நடந்தது எல்லாம் விஜயாவிடம் சொல்லி வருத்தப்பட்டார். அண்ணாமலை, மனோஜை தான் திட்டினார். அதற்குப்பின் சுருதி- ரவி இருவரும் சிந்தாமணி பற்றி கேட்டார்கள். விஜயா, சிந்தாமணி சொன்னதை சொல்கிறார். ஸ்ருதி கோபப்பட்டார்.

மீனா, கிரிஷ் உடன் பேசிக் கொண்டிருந்தார். அதை பார்த்த விஜயா கோபப்பட்டார். பின் வீட்டிற்கு வந்து விஜயா, மீனா- கிருஷ் பேசுவதை சொல்லி கொந்தளித்துக் கொண்டிருந்தார். முத்து, மீனா- கிருஷ் பேசுவது பிரச்சனை இல்லை. மனோஜ் தன்னுடைய விவாகரத்து விஷயத்தில் சரியாக இருக்கணும். அவனுக்கு சொல்லி புரிய வையுங்கள். முதலில் அவனை குழம்பம் இல்லாமல் தெளிவாக பேச சொல்லுங்கள் என்று கிண்டல் அடித்தார். அதற்குப்பின் மேனேஜர் தினேஷ், ரோகினியை சந்தித்து மிரட்டுகிறார். ரோகிணி, தன் குடும்பத்திற்கு உண்மை தெரிந்தது என்று சொல்லாமல் நடித்தார்.

சிறகடிக்க ஆசை:

தினேஷ், நீ பணம் கொடுக்கவில்லை என்றால் நான் முத்துவிடமே சொல்லுவேன் என்று மிரட்டுகிறார். ரோகினி, என்னிடம் பணம் இல்லை. ஆனால் யாரிடமும் சொல்லாதீர்கள். முத்துயிடம் சொல்ல வேண்டாம் என்றெல்லாம் நடித்தார். கோபத்தில் தினேஷ் முத்துவிடம் சொல்வதற்காக கிளம்பினார். அதற்குப்பின் மனோஜ் பார்த்த பெண் சந்தியா வீட்டிற்கு வந்திருந்தார். அவர் எல்லோரையும் அண்ணா என்று கூப்பிட்டார். மனோஜ் உள்ளுக்குள்ளே வேதனை தாங்க முடியாமல் குமறுகிறார். வீட்டில் எல்லோரிடமும் கலகலப்பாக சந்தியா பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்துவிற்கு தவணை முறையில் வேனை அந்த மனநலம் பாதிக்கப்பட்டவரின் பெற்றோர்கள் வாங்கி தருகிறார்கள். இதனால் முத்து-மீனா இருவரும் சந்தோஷப்படுகிறார்கள். அதற்குப்பின் மேனேஜர் தினேஷ், முத்துவை சந்தித்து ரோகிணி பற்றிய எல்லா உண்மையும் சொல்கிறார். இதைக் கேட்டு முத்துவிற்கு சிரிப்புதான் வருகிறது. பின் தினேஷ், இவ்வளவு பெரிய விஷயத்தை சொன்னதற்கு எனக்கு பார்த்து கவனியுங்கள் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

உடனே முத்து நண்பர்கள் தினேஷை ஒரு ரூமிற்கு அழைத்து செல்கிறார்கள். அங்கு முத்துவும் அவருடைய நண்பர்களும் தினேஷை வெளுத்து கட்டுகிறார்கள். அதற்குப்பின் விஜயா, மனோஜ் இருவரும் வக்கீலை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது வக்கீல், நீங்கள் மனோஜ்க்கு இரண்டாவது திருமணம் ஏற்பாடு செய்தல் உங்களை போலீஸ் தான் கைது செய்வார்கள். தேவையில்லாமல் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று சொல்கிறார். இதைக் கேட்டு முத்து சிரிக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full