ரோகினி மீது சந்தேகப்படும் முத்து, வேதனையில் தவிக்கும் மீனா - பரபரப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சாமியார், நீ குற்ற உணர்ச்சியில் இருக்கிறாய். எதைப் பற்றியும் கவலைப்படாதே. இதை நான் வெளியில் சொல்லவில்லை என்றார். பின் முத்து, ஒன்றும் இல்லை என்று கையி கயிறு கட்டி விட்டார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி தன்னுடைய மகளுக்கு திருமணம் பற்றி பேசுவதற்காக சாமியாரை பார்க்க வந்தார். அதற்கு அந்த சாமியார், உன் மகளாகவே திருமணம் செய்து கொள்வாள். இதனால் நீ போலீஸ் ஸ்டேஷன் செல்ல கூட சந்தர்ப்பம் இருக்கிறது என்றார். கடைசியில் மீனா, ரோகிணியை பற்றிய எல்லா உண்மையும் சொல்லினார். இதைக் கேட்டு முத்து ஷாக் ஆனார்.
முத்து, ரோகினி பற்றிய உண்மை எல்லாம் வீட்டில் சொன்னார். இதை கேட்ட அண்ணாமலைக்கு நெஞ்சு வலி வருகிறது. அதோடு ஆத்திரம் தாங்க முடியாமல் முத்து, ரோகினி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார். படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து ரோகினி இறந்து விட்டார். பின் போலீஸ் முத்துவை கைது செய்தார்கள். ஆனால், இதெல்லாம் மீனாவின் கனவு. உண்மை சொன்னால் இதுதான் நடக்கும் என்று மீனா நினைத்து வருத்தப்பட்டு அழுதார். இதை பார்த்த ரோகினி, தயவுசெய்து மறந்துவிடுங்கள். வீட்டில் சொல்லாதீர்கள் என்றெல்லாம் நடிக்கிறார். கோபத்தில் மீனா, என்னால் உன்னை மாதிரி நடிக்க முடியாது. நான் என்னுடைய அம்மா வீட்டிற்கு போகிறேன் என்றார்.
சிறகடிக்க ஆசை:
இன்னொரு பக்கம் முருகன், வித்யா இடையே அனிமோன் பஞ்சாயத்து நடப்பதால் முத்து. தீர்த்து வைத்தார் பின் முருகன் நிறைய குடித்து இருந்தால் அந்த பாட்டிலை பிடிங்கி சரக்கை முத்து குடித்து விட்டார். பின் வீட்டுக்கு வந்த முத்து நடந்தது எல்லாம் சொன்னார். இதுதான் சந்தர்ப்பம் என்றும் மீனா, முத்துவிடம் சண்டை போட்டார். மீனா, முத்துவை குடிகாரன் என்றெல்லாம் சொல்லி இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமானது. ஓரு கட்டத்தில் முத்து, குடிக்க போகிறேன் என்றார். குடித்தால் நான் வீட்டில் இருக்க மாட்டேன் என்று மீனா சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி பற்றிய உண்மையை வெளியே சொல்ல முடியாமல் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் மீனா, முத்துவுடன் சண்டை போட்டுவிட்டு தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்று விடுகிறார். முத்துவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ரோகிணி உள்ளுக்குள் சந்தோஷப்படுகிறார். விஜயாவுமே போய் தொலையட்டும் என்று நிம்மதியாக இருக்கிறார். ஆனால், அண்ணாமலை வருத்தப்படுகிறார். பின் மீனாவிடம் அவருடைய அம்மா, நடந்ததை பற்றி விசாரிக்கிறார். மீனா எதுவும் சொல்லாமல் வேதனையிலேயே இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் ரோகினி, வீட்டு வேலை செய்ய மீனா வேண்டும் என்று மீண்டும் வந்து விடுவாரோ? என்று பயத்திலேயே எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்கிறார். இதை பார்த்து முத்துவிற்கு சந்தேகம் வந்து மீனா வரக்கூடாது என்று வேலை செய்வது போல இருக்கிறது என்று உண்மையை சொல்லி விடுகிறார். வழக்கம் போல விஜயா, மனோஜ் இருவருமே ரோகினிக்கு சப்போர்ட் செய்து முத்துவை திட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் சத்யாவிடம் ரேகா அவரைப்பற்றி விசாரிக்கிறார். அந்த சமயம் பார்த்து முத்து போன் செய்து சத்யாவை கூப்பிடுகிறார். முத்து நடந்தது எல்லாம் சொல்கிறார். உடனே சத்யா, எல்லாம் மாறிவிடும் நீங்கள் கவலைப்படாதீர்கள். அக்கா சீக்கிரம் வந்து விடுவாள் என்று ஆறுதல் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது