ஒரு போட்டோவால் சிக்கி கொள்ளும் ரோகினி? கல்யாணி ரகசியத்தை அறிவாரா முத்து-சிறகடிக்க ஆசை

By subhashini · 17/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், குழந்தையாகவே மாறி புட்டியில் பால் குடிப்பது, தொட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். இதை பார்த்த வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆனார்கள். அண்ணாமலை, விஜயா இருவருமே, என்னடா இது? அசிங்கமா இருக்கு என்று கேட்டார்கள். ஆனால், மனோஜ் எதுவுமே சொல்லவில்லை. முத்து, இவனுக்கு பைத்தியம் தான் பிடித்திருக்கிறது. ஹாஸ்பிடலில் சேர்க்கணும் என்றார். உடனே ரோகினி நடந்ததை எல்லாம் சொன்னார். அதற்கு முத்து, ஒரு டாக்டர் இப்படி எல்லாம் சொல்லி இருப்பாரா? என்று யோசித்தார். ஆனால், மனோஜ் குழந்தை போலவே கத்தி அடம் பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தார்.

பின் முத்து, அந்த டாக்டருக்கு போன் செய்து விசாரித்தார். அப்போது டாக்டர், மனநலம் பாதிக்கப்பட்ட என்னுடைய அப்பாதான் இவரிடம் தவறாக சொல்லி இருக்கிறார் என்று உண்மையை சொன்னார். இதை வீட்டில் முத்து சொன்ன உடன் மனோஜ் அப்படியா? என்று பழையபடி மாறினார். முத்து, இவன் வடிகட்டுன முட்டாள் என்று சொல்வார்கள் என்றார். இதனால் விஜயா கடுப்பாகி முத்துவை திட்டினார். பின் முத்து, மனோஜ் வடிகட்டின முட்டாள் என நிரூபிக்கிறேன் என்று ஒரு டெஸ்ட் வைத்தார். அதில் மனோஜ், தோற்று விடுகிறார். முத்து, இவன் படித்து என்ன பலன் என்று கிண்டல் செய்தார்.

சிறகடிக்க ஆசை:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோயிலில் வித்யா-முருகன் கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. முத்து-மீனா இருவருமே தங்கள் வீட்டு கல்யாணம் போல் எல்லா வேலையும் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கிரிஸ் அப்பாவின் உறவினர் ஒருவர் வந்திருக்கிறார். அவரது ரோகிணியை பார்த்தவுடன் இது கல்யாணி தானே என்று சந்தேகப்பட்டு அவரிடம் பேச போகிறார். ஆனால், அதற்குள் ரோகினி சென்றுவிடுகிறார். பின் அந்த நபர் மீனாவிடம் விசாரிக்கிறார். இதை பார்த்த ரோகினி, மகேஸ்வரியை விட்டு மீனாவை அழைத்து வர சொல்கிறார். அதற்குள் மீனா சென்று விடுகிறார்.

இன்றைய எபிசோட்:

பின் அந்த உறவினர், நீ கல்யாணி தானே, எப்படி இருக்கிறாய்? என்றெல்லாம் விசாரிக்கிறார். உடனே ரோகிணி கோபப்பட்டு அவர்களைத் திட்டி அனுப்பி விடுகிறார். பின் நல்லபடியாக வித்யா- முருகன் திருமணம் நடந்து விடுகிறது. திருமணத்திற்கு ரோகினி பேச்சை மீறி அவருடைய அம்மா வந்து சென்றிருக்கிறார். இது யாருக்கும் தெரியவில்லை. பின் வீட்டிற்கு வந்த முத்து, வித்யா- முருகன் கல்யாணத்தில் எடுத்த புகைப்படங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு புகைப்படத்தில் கிரிஸ் பாட்டி இருப்பதை பார்த்து சாக் ஆகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

பின் முத்து-மீனா இருவரும் எதற்காக கிரிஸ் பாட்டி வந்தார்கள்? யாருக்கு உறவினர்? என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். முத்து, கிரிஸ் பாட்டி ஏதோ ஒரு ரகசியத்தை மறைத்து இருக்கிறார். சீக்கிரமே கண்டுபிடிக்கிறேன் என்று சொல்கிறான். இதை கேட்ட ரோகினி பயந்து கொண்டு தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து விசாரிக்கிறார். அவருமே ஏதோ காரணம் சொல்ல, ரோகினி திட்டி போனை வைத்து விடுகிறார். அதற்குப்பின் முத்து சவாரிக்கு வரும் வழியில் ஒரு பெண் மீது பைக் மோதிவிட்டு சென்றுவிடுகிறது. இதனால் முத்து அவர்களுக்கு உதவி செய்கிறார். ஆனால், அருண் அந்த பைக்காரனை பிடிக்க செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full