குழந்தையாக மாறி மனோஜ் செய்யும் அட்ராசிட்டி, உண்மையை நிரூபித்த முத்து - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, ரோகிணியை ரொம்ப இழிவாக பேசினார். இதைக் கேட்ட ரோகிணி, நானும் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறேன். மனோஜ் இந்த நிலைமைக்கு இருப்பதற்கு காரணம் நான் தான் என்றெல்லாம் விஜயாவையே எதிர்த்து பேசி இருந்தார். இதனால் கோபத்தில் கொந்தளித்த விஜயா ருத்ர தாண்டவம் ஆடி ரோகினியை திட்டினார். ஆனால், ஒரு வார்த்தை கூட மனோஜ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். சீதாவை பார்க்க வந்த அருண், நான் வேண்டும் என்று எதுவும் செய்யவில்லை.
எனக்கு உங்க மாமாவை பிடிக்கவில்லை என்றார். பின் சீதா, நீங்கள் எதுவாக இருந்தாலும் என்னிடம் உண்மையை சொல்லணும் என்று இருவருமே சமாதானம் ஆகி விட்டார்கள். பின் அருண் பாத்ரூமில் இருக்கும் போது முத்து-மீனா இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது முத்து, உன்னுடைய புருஷன் அரை மெண்டல், திமிர் பிடித்தவன் தான். இருந்தாலும் நீ வீட்டை விட்டு வருவதா? எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் சொன்னார். இதையெல்லாம் கேட்ட அருண் கோபப்பட்டார். பின் அருண் வீட்டிற்கு வந்திருப்பதை பார்த்த முத்து வாயடைத்து போனார்.
சிறகடிக்க ஆசை:
இன்னொரு பக்கம் ஷோரூமில் குழந்தை ரொம்பவே சேட்டை செய்து கொண்டிருந்தது. இதனால் மனோஜ் அந்த குழந்தையை அடித்து விட்டார். உடனே அந்த குழந்தையின் பெற்றோர் மனோஜை திட்டி, உனக்கு குழந்தையே பிறக்காது என்றார்கள். இதனால் மனோஜ் தன்னுடைய நண்பரை அழைத்துக் கொண்டு குழந்தை மருத்துவரிடம் கவுன்சிலிங் வந்திருந்தார். அப்போது அவர், நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் குழந்தையாக மாறனும் என்றார். ஆனால், உண்மையில் அவர் டாக்டரே கிடையாது. பின் மனோஜ், வீட்டில் தொட்டில் கட்டி குழந்தை போலவே விளையாடினார். இதை பார்த்த ரோகினிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ், குழந்தையாகவே மாறி புட்டியில் பால் குடிப்பது, தொட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். இதை பார்த்த வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆனார்கள். அண்ணாமலை, விஜயா இருவருமே, என்னடா இது? அசிங்கமா இருக்கு என்று கேட்டார்கள். ஆனால், மனோஜ் எதுவுமே சொல்லவில்லை. முத்து, இவனுக்கு பைத்தியம் தான் பிடித்திருக்கிறது. ஹாஸ்பிடலில் சேர்க்கணும் என்றார். உடனே ரோகினி நடந்ததை எல்லாம் சொன்னார். அதற்கு முத்து, ஒரு டாக்டர் இப்படி எல்லாம் சொல்லி இருப்பாரா? என்று யோசித்தார். ஆனால், மனோஜ் குழந்தை போலவே கத்தி அடம் பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தார்.
சீரியல் ட்ராக்:
பின் முத்து, அந்த டாக்டருக்கு போன் செய்து விசாரிக்கிறார். அப்போது டாக்டர், மனநலம் பாதிக்கப்பட்ட என்னுடைய அப்பாதான் இவரிடம் தவறாக சொல்லி இருக்கிறார் என்று உண்மையை சொல்கிறார். இதை வீட்டில் முத்து சொன்ன உடன் மனோஜ் அப்படியா? என்று பழையபடி மாறுகிறார். முத்து, இவன் வடிகட்டுன முட்டாள் என்று சொல்வார்கள் என்றார். இதனால் விஜயா கடுப்பாகி முத்துவை திட்டுகிறார். பின் முத்து, மனோஜ் வடிகட்டின முட்டாள் என நிரூபிக்கிறேன் என்று ஒரு டெஸ்ட் வைக்கிறார். அதில் மனோஜ், தோற்று விடுகிறார். முத்து, இவன் படித்து என்ன பலன் என்று கிண்டல் செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.