மனோஜுக்கு கண் பார்வை வந்ததா? சோகத்தில் கதறும் மொத்த குடும்பம் - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீதாவிடம் அருண் தன்னுடைய காதலை வெளிப்படுத்த, சீதா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார். அருண், பொறுமையாக யோசித்து முடிவு சொல்லுங்கள் என்று அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் மனோஜ் ஷோரூமில் மலேசியா மாமா தலையில் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு பொருட்களை எல்லாம் வாங்க வந்தார். இதை பார்த்தவுடன் ரோகினி பயந்து கொண்டு திட்டி இருந்தார். அந்த சமயம் பார்த்து முத்து, அண்ணாமலை கடைக்கு வந்தார்கள். மலேசியா மாமா ஹெல்மெட் போட்டு கொண்டார்.
மலேசியா மாமா தலையில் ஹெல்மெட் போட்டதால் எப்படியோ முத்துவிடம் இருந்து தப்பித்து விட்டார். இன்னொரு பக்கம் மனோஜ் போனில் பேசிக் கொண்டு வரும்போது தன்னை ஏமாற்றிய கதிரை பார்த்து விட்டார். உடனே அவரை துரத்தும் மனோஜ், வரும் வழியில் இருக்கும் ஆட்கள் எல்லாம் தள்ளி, அடித்து விட்டு போனார். இதனால் அவர்களும் மனோஜை துரத்திக் கொண்டே வந்தார்கள். ஒரு கட்டத்தில்
மனோஜ் அந்த ஆட்களுக்கு பயந்து ஓடி வரும் போது எதிர்பாராத விதமாக வண்டியின் மீது மோதி விட்டார். அதில் அவருடைய கண்களில் கண்ணாடி துண்டுகள் இறங்கி விட்டது.
சிறகடிக்க ஆசை:
பின் ரோகினி, மனோஜ்க்கு ஆக்ஸிடெண்ட் ஆன விஷயத்தை சொன்னவுடன் விஜயா பயங்கரமாக கதறி அழுதார். பின் குடும்பமே பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு போனார்கள். அப்போது டாக்டர், ஆபரேஷன் முடிந்தது. கண் கட்டை திறந்த பிறகு தான் என்ன என்று சொல்ல முடியும் என்றார். இதனால் ரோகினி, விஜயா இருவரும் வேதனையில் அழுது கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து மனோஜை துரத்தி வந்த நபர்கள் முத்துவிடம் பணத்தை கேட்க, பின் நடந்ததை விசாரித்த முத்து, எல்லோருக்கும் பணத்தை கொடுத்து அனுப்பி விட்டார். யாரை துரத்துவதற்காக மனோஜ் ஓடி வந்தான் என்று முத்து-மீனா இருவருமே யோசித்தார்கள்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் டாக்டர், மனோஜ்க்கு இன்னும் சில டெஸ்ட் எடுக்க வேண்டி இருக்கு. அது முடிந்தவுடன் தான் ரிசல்ட் சொல்ல முடியும் என்று என்றவுடன் ரோகினி இன்னும் ரொம்ப வேதனைப்பட்டார். அதற்குப்பின் எல்லோரும் மனோஜை பார்க்க போனார்கள். மனோஜ் ரொம்ப எமோஷனலாக பேச, எல்லோருமே அவருக்கு ஆறுதல் சொன்னார்கள். அந்த சமயம் பார்த்து போலீஸ், மனோஜை பார்க்க வந்தது. அப்போது மனோஜ், நான் கதிரை துரத்தி போனேன். அப்போதுதான் எதிர்பாராமல் எல்லோர் மேலும் மோதிட்டேன் என்று சொன்னார்
சீரியல் ட்ராக்:
பின் டிராபிக் போலீஸ் இடம் முத்து மன்னிப்பு கேட்டு அனுப்பி வைத்தார். அதற்குப்பின் மனோஜ், எனக்கு இனிமேல் பார்வை வராதா? என்னால் யாரையும் பார்க்க முடியாதா? என்று எமோஷனலாக பேச, ரோகினி அவருக்கு ஆறுதல் சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் 75 ஆயிரம் ரூபாய் பில் கட்ட சொன்னார்கள். என்ன செய்வதென்று புரியாமல் முத்து -மீனா இருவருமே தவித்தார்கள். யாரிடமும் அதைப்பற்றி சொல்லாமல் இருவருமே பணத்தை ரெடி பண்ண பார்த்தார்கள். மறுநாள் காலையில் ஹாஸ்பிடலுக்கு போவதற்காக விஜயா, மீனாவை கூப்பிட, அவர் வீட்டில் இல்லை. வழக்கம் போல் மீனாவை திட்டிக் கொண்டிருந்தார் விஜயா.
https://www.youtube.com/watch?v=WSWb1Ri9fsk
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மனோஜின் கண்கட்டை திறக்கப் போகிறார்கள். அதனால் விஜயா நான் வருகிறேன் என்று சொல்கிறார். அதற்கு நர்ஸ், அவர் மனைவியை தான் வர சொன்னேன் என்று சொல்கிறார். ரோகினியும் மனோஜின் அருகில் நின்று அவருக்கு ஆறுதல் சொல்கிறார். கண் கட்டு திறந்தபின் மனோஜை பார்க்க சொல்கிறார்கள். ஆனால், அவரால் பார்க்க முடியவில்லை. கண்கூசுகிறது என்கிறார். இதைக் கேட்டவுடன் ரோகினி அழுது கொண்டே வெளியே வந்து விடுகிறார்.