மறைத்து வைத்த பல நாள் ரகசியம், முத்துவின் பிளாஷ்பேக்கில் நடந்தது என்ன? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, தனக்கு தெரிந்த வக்கீல் இடம் பேசி இருந்தார். ஆனால், வக்கீலுமே இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது என்றார். ரோகினிக்கு ஒண்ணுமே புரியவில்லை. இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவருமே அந்த சிறுவனின் அப்பாவை சந்தித்து பேசி இருந்தார்கள். அதற்கு அந்த சிறுவன் அப்பா, கிரிஷை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று கண்டிப்பாக இருந்தார். உடனே முத்து அவருடைய காலில் விழுந்து கெஞ்சி கதறினார். இருந்தாலுமே அந்த சிறுவனின் அப்பா மனம் இறங்கவில்லை.
கிரிஷ் வாழ்க்கைக்காக முத்து-மீனா இருவருமே அந்த சிறுவனின் வீட்டு வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த சிறுவனின் அப்பா கண்டு கொள்ளவே இல்லை. இருந்தாலுமே முத்து-மீனா இருவருமே அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்தார்கள். கடைசியில் அந்த சிறுவனின் அப்பா, முத்துவை உள்ளே அழைத்து பேச, முத்து, மன்னிப்பு கேட்டு கெஞ்சினார். உடனே அந்த சிறுவனின் அப்பா, நான் கிரிஷ்க்கு சில டெஸ்ட் வைப்பேன். அதற்கு பிறகு தான் நான் இந்த கேசை வாபஸ் வாங்கலாமா? என்று முடிவு செய்வேன் என்றார். அதற்குப்பின் மகேஸ்வரி வீட்டிற்கு முத்து-மீனா போனார்கள்.
சிறகடிக்க ஆசை:
இந்நிலையில் இன்று எபிசொட்டில் முத்து, க்ரிஷிடம் அந்த சிறுவனின் அப்பா பேசணும் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு பிறகு தான் அவர் முடிவெடுப்பாராம் என்கிறார். இதை ஒளிந்து நின்று கேட்ட ரோகிணி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். அதற்குப்பின் முத்து-மீனா இருவரும் வீட்டுக்கு கிளம்பி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் மனோஜ், கிரிஷ் செய்த வேலையை பற்றி வீட்டில் உள்ள எல்லோரிடமே சொல்கிறார். ரோகினி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது மனோஜ், கிரிஷ் இப்படி இருக்க காரணம் முத்து தான். இரண்டு பேரும் ரவுடி தான் ஆக போகிறார்கள் என்று ரொம்ப மோசமாகவும் ஏளனமாகவும் பேசுகிறார். இதை கேட்டு முத்துவிற்கு பயங்கர கோபம் வந்து மனோஜின் சட்டையை பிடித்து சண்டைக்கு போகிறார். அப்போது மனோஜ், நீயும் சீர்திருத்த பள்ளிக்கு போனவ தானே என்று சொல்லி விடுகிறார். இதனால் முத்து மனமடைந்து நிற்கிறார். உடனே அண்ணாமலை கோபத்தில் மனோஜை அடித்து விடுகிறார். பின் வீட்டில் உள்ள எல்லோரையுமே திட்டி அனுப்பி விடுகிறார். மீனா, முத்து வாழ்க்கையில் நடந்ததை பற்றி விசாரிக்கிறார்.
https://www.youtube.com/watch?v=ZB7GcAGMH3o
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் கிரிஷை பிரச்சனைகளில் இருந்து மீட்டெடுக்க முத்து- மீனா இருவரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பல வருடமாக மறைத்து வைத்த முத்துவின் ரகசியம் வெளிவருகிறது. விஜயா ஒரு ஜோசியரை பார்த்து பேசுகிறார். அப்போ அந்த ஜோசியர், முத்து உங்களுடன் இருந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்று சொல்கிறார். இதனால் விஜயா, முத்துவை தன்னுடைய பாட்டி வீட்டில் விட்டு செல்கிறார்.