பயத்தில் இருக்கும் ரவி, ஸ்ருதி எடுத்த முடிவால் ஷாக்கான முத்து,மீனா - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் ஸ்ருதி- ரவி இருவரும் தங்களுடைய முதல் திருமண நாளை சிறப்பாக கொண்டாட பங்க்ஷன் ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். பின் தாத்தாவின் உறவினர், நீங்கள் அனுப்பிய நபர் தான் போனை தவற விட்டவர் என்று சொன்னவுடன் முத்துவிற்கு பயங்கர கோபம் வந்து மீனாவுடன் சொன்னார். ஆனால், மீனாவால் வித்யா தான் போனை திருடினார் என்று நம்பவே முடியவில்லை. மீனா, பங்சன் நேரத்தில் ப்ரச்சனை வேண்டாம் என்றும் சொல்லியும் முத்து ஏற்றுக்கொள்ளாமல் வித்யாவின் வீட்டிற்கு சென்றார்.
முத்துவை பார்த்தவுடன் வித்யா ஷாக் ஆகி இருந்தார். பின் முத்து, தன்னுடைய மொபைலை காண்பித்து விசாரித்தார். உஷாரான வித்யா, ஏதேதோ காரணங்களை சொல்லி சமாளித்தார். ஆனால், முத்துவும் விடாமல் உண்மையை வர வைக்க பேசி இருந்தார். வித்யா, தெளிவாக பொய் சொன்னார். இதனால ஏமாற்றத்துடன் வீட்டிற்கு வந்த முத்து, நடந்ததை மீனாவிடம் சொல்ல, ரோகினிக்கு ஒரே சந்தோஷம். பின் ரோகினி, தன்னுடைய தோழியை சந்தித்து நன்றி சொன்னார். அவருமே அவருக்கு ஆறுதல் சொன்ன உடன் இருவருக்கும் இடையே இருந்த சண்டை விலகி விட்டது.
சிறகடிக்க ஆசை:
மேலும், மனோஜ், ரோகினியை குச்சால் அடித்தார். வலி தாங்க முடியாமல் ரோகினி கதறினார். ஒரு கட்டத்தில் ரோகினி பேய் பிடித்தது போல் நடித்து, என்னுடைய அப்பாவின் ஆத்மா என் உடம்பிலிருந்து சென்றுவிட்டது. நான் குணமாகிவிட்டேன் என்று சொன்னவுடன் மனோஜ் நம்பி விட்டார். இன்னொரு பக்கம் ரவி, ரெஸ்டாரண்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய திருமணநாளுக்கு லீவு வேண்டும் என்று தன்னுடைய ஓனரிடம் கேட்ட உடன் அவரும் சம்மதித்தார். அந்த சமயம் பார்த்து ஓனர் கீழே விழுந்ததால் அவரை தூக்கி கொண்டு வெளியில் வந்தார்.
கடந்த வாரம் எபிசோட்:
இதை பார்த்த சுருதி பயங்கரமாக கோபப்பட்டு அங்கிருந்து சென்று விட்டார். ரவி, சுருதியை சமாதானம் செய்ய வீட்டிற்கு வந்தார் . ஆனால், சுருதி வீட்டிலேயே இல்லை. வீட்டில் உள்ள எல்லோருமே ஸ்ருதி எங்கே? என்று கேட்டதற்கு ரவி ஏதேதோ சொல்லி சமாளித்தார். இதை பார்த்து முத்துவிற்கு சந்தேகம் வந்து ரவியிடம் விசாரித்தார். ரவி எல்லா உண்மையும் சொல்லி விட்டார். உடனே முத்து-மீனா இருவரும் சுருதியை தேடி போனார்கள். மண்டபத்திற்கு வந்த அனைவரும் ஸ்ருதியை தான் விசாரித்தார்கள். ரவிக்கு என்ன சொல்வது என்று புரியாமல் சமாளித்தார். இதையெல்லாம் பார்த்த ஸ்ருதியின் அப்பா, அம்மாவிற்கு சந்தேகம் வந்தது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து-மீனா இருவரும் ஸ்ருதி எங்கே சென்றார்? என்று தெரியாமல் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் மண்டபத்தில் சுருதி வரவில்லை என்று ரவி கவலையில் இருக்கிறார். எல்லோரும் சுருதியை எங்கே? என்று கேட்க, ரவி திசை திருப்ப விஜயாவை நடனமாட வைக்கிறார். முதலில் விஜயாவின் மாணவர்கள் நடனமாடிருந்தார்கள். அதற்குப் பின் விஜயா நடனமாடினார். அவரை தொடர்ந்து விஜயாவுடன் பார்வதி, ஸ்ருதியின் அம்மா எல்லோருமே நடனமாடி இருந்தார்கள்.
சீரியல் ட்ராக்:
எல்லாருடைய கவனமும் மாறியது. ஆனால், சுருதியின் அப்பாவிற்கு மட்டும் ரவி மீது சந்தேகமாக இருந்தது. பின் இதைப்பற்றி அவர், ரவியை அழைத்து பேச, ஏதேதோ காரணம் சொல்லி ரவி சமாளித்தார். இருந்தாலுமே அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு வழியாக முத்து-மீனா இருவரும் சுருதி இருக்கும் இடத்திற்கு சென்று விடுகிறார்கள். அப்போது அவரிடம் விசாரிக்க சுருதி, இனிமேல் அவனுடன் வாழ முடியாது. நான் வக்கீலை பார்த்து விவாகரத்து கொடுக்கப் போகிறேன் என்று சொன்னவுடன் இருவருமே ஷாக் ஆகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.