சிந்தாமணியின் சதியை கண்டுபிடித்த முத்து, அருண் செய்த கேவலமான வேலை - சிறகடிக்க ஆசை

By subhashini · 6/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் லஞ்சம் வாங்கும் அதிகாரியிடம் செல்வம் பணம் கொடுத்து பூ கடை வைப்பதற்கு பேசி இருந்தார். அந்த அதிகாரியுமே, ஏற்கனவே இருந்த அம்மாவிற்கு அந்த கடை தரமாட்டோம். நீ நான் சொல்லும் பணத்தை தந்து விட்டால் அந்த கடையை தந்து விடுகிறோம் என்றெல்லாம் சொன்னார். இதை முத்து பார்த்துக் கொண்டார். இதைப்பற்றி முத்து உயர் அதிகாரியிடம் பேச வந்தார். ஆனால், அவர் முத்து சொல்வதைக் கேட்கவே இல்லை. அப்போதுதான் டாக்டர் பட்டம் கொடுக்கும் கோகிலா அந்த இடத்திற்கு வந்தார்.

அவருடைய கணவர் தான் அந்த உயர் அதிகாரி. பின் நடந்ததை எல்லாம் முத்து, கோகிலாவிடம் சொன்னார். பின் கோகிலா, தன்னுடைய கணவரிடம் முத்துவைப்பற்றி எடுத்து சொல்லி புரிய வைத்தார். அதற்கு உயர் அதிகாரி, நீங்கள் சொல்வது போல் நாளைக்கு விசாரிக்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் மீனா, கோவிலுக்கு வருபவர்கள் இடம் தாங்கள் வைத்திருக்கும் கடை, பொருள்களைப் பற்றி எந்த குறையும் இல்லை என்று சொல்லி, கையெழுத்தும் ரெக்கார்டும் வைத்துக் கொண்டார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி சொன்ன ஆட்கள் மீனாவின் வண்டியை எடுத்து சென்று விட்டார்கள்.

சிறகடிக்க ஆசை:

பின் கோவிலுக்கு வெளியே வந்த மீனா வண்டியை காணவில்லை என்று ரொம்பவே பதறி அழுதார். பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று மீனா புகார் கொடுக்கப் போனார். அப்போது அருணிடம் நடந்ததை மீனா சொன்னார். அதற்கு அருண், முத்துவை இதில் தோற்கடிக்கனும் என்றெல்லாம் நினைத்தார். இன்னொரு பக்கம் ஸ்ருதி, தன்னுடைய ஓட்டலுக்கு சமைப்பதற்காக செப்புக்கு தேர்வு நடத்திக் கொண்டிருந்தார். அதன் பின் வீட்டில் மனோஜ், தன்னுடைய ஷோரூமின் இன்னொரு பிரான்ச் ஆரம்பிப்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் மனோஜ், ரோகினி இருவருமே தங்களுடைய தெரிந்தவர்களின் மூலம் பார்ட்னராக சேர்த்து புது பிரான்ச் ஓபன் செய்வது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த மீனாவிடம் கடையை பற்றி அண்ணாமலை விசாரிக்கிறார். வழக்கம் போல மனோஜ்-விஜயா இருவரும் நக்கலாக பேசுகிறார்கள். அதற்குப்பின் மீனா, தன்னுடைய வண்டி காணாமல் போன விஷயத்தைப் பற்றி சொல்கிறார். முத்து, நான் கண்டுபிடிக்கிறேன் என்று அவருக்கு ஆறுதல் சொல்கிறார். மறுநாள் உயர் அதிகாரியை முத்து அழைத்து வருகிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது செல்வத்திடம், அதிகாரி லஞ்சம் வாங்குவதை பார்த்த உயர் அதிகாரி திட்டுகிறார். உடனே அந்த அதிகாரி, இதை எல்லாம் சிந்தாமணி தான் செய்ய சொன்னார் என்று சொல்கிறார். பின் உயர் அதிகாரி, அவரை திட்டி அனுப்பி விடுகிறார். உயர் அதிகாரி, உண்மையை கண்டுபிடித்ததால் முத்துவின் செயலை பாராட்டி வீட்டிற்கு அழைத்துப் போகிறார். பின் மீண்டும் கடையை நடத்துவதற்கு அனுமதி தருவதாக சொல்கிறார். அந்த சமயம் பார்த்து அருண் அந்த இடத்திற்கு வருகிறார். ஆனால், முத்து வீட்டிற்குள் இருப்பது அருணுக்கு தெரியாது. அப்போது அருண் சிபாரிசு கடிதம் தருவதால் அந்த உயர் அதிகாரி திட்டுகிறார். பின் முத்து, எனக்கும் அவருக்கும் ஆரம்பத்தில் இருந்து பிரச்சினை இருக்கு. அருண் தான் உதவி செய்தான் என்று சொல்லுங்க என்பதால், முத்துவின் குணத்தை அதிகாரி பாராட்டுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full