கிரிஷை கண்டுபிடித்த முத்து, பிரச்சனையில் சிக்கி தவிக்கும் ரோகினி - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சீதா, தயவு செய்து என்னிடம் எதுவும் பேசாதீர்கள். உங்களால் நான் என்னுடைய அக்கா மாமாவை தப்பா நினைத்து விட்டேன் என்று கோபப்பட்டு சண்டை போட்டார். மீனாவுமே தன்னுடைய பங்கிற்கு அருணை திட்டி இருந்தார். எதுவுமே பேச முடியாமல் அருண் அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் சீதா- மீனா இருவருமே பேசிக் கொண்டார்கள். இன்னொரு பக்கம் கிரிஷ் தன்னுடைய அம்மாவை நினைத்து வேதனையில் இருந்தார். அப்போது அவருடன் படிக்கும் மாணவன், கிரிஷை வெறுப்பேற்றும் வகையில் பேச, கோபப்பட்டு கிரிஷ் அந்த பையனை அடித்து விட்டார்.
இதனால் பள்ளி ஆசிரியர், கிரிஷை போலீசில் பிடித்துக் கொடுப்பதாக மிரட்டி இருந்தார். அதனால் கிரிஷ் பயந்து வேண்டாம் என்று கத்தினார். அந்த சமயம் பார்த்து பள்ளிக்கு மீனா வருகிறார். ஆனால், கிரிஷை மீனா பார்க்கவில்லை. இன்னொரு பக்கம் அருண், சீதாவை சமாதானம் செய்வதற்காக காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். சீதாவும் மனம் இறங்கி அருணை மன்னித்தார். இருந்தாலுமே அருண் மனதிற்குள் முத்துவை பழிவாங்கும் எண்ணத்தில் தான் இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியர் மிரட்டியதால் கிரிஷ் ரொம்பவே பயந்து விட்டார். இதனால் யாருக்கும் தெரியாமல் பள்ளிக்கூடத்தில் இருந்து கிரிஷ் ஓடி விட்டார். இதை அறிந்த ஆசிரியர், கிரிஷின் கார்டியனுக்கு போன் செய்து தகவல் சொன்னார். மகேஸ்வரி, ரோகினிக்கு போன் செய்து நடந்ததை சொன்னார். இதனால் ரோகிணி ரொம்பவே பயந்து விட்டார். பின் ரோகினி, கிரிஷை தேடி சென்றார். இன்னொரு பக்கம் முத்து சவாரியில் ஒரு நபரை இறக்கிவிட்டு நின்று கொண்டிருந்தார்.
நேற்று எபிசோட்:
அந்த சமயம் பார்த்து வந்த கிரிஷ், முத்து கார் என்று தெரியாமல் அவருடைய கார் டிக்கியில் எரி ஒளிந்து கொண்டார். இதை அறியாமல் முத்துவும் காரை எடுத்துக் கொண்டு சென்றார். பின் முத்து வரும் வழியில் மீனாவையும் அழைத்துக் கொண்டு வந்தார். அப்போது அண்ணாமலையின் நண்பர் ரோட்டில் இருப்பதை பார்த்த முத்து, அவர்களையும் வீட்டில் கொண்டு போய் விட்டு உதவி செய்தார். அதற்குப்பின் மீனாவின் அம்மா வீட்டிற்கு முத்து கிளம்பினார். இன்னும் அந்த சமயத்தில் ரோகினி, மீனாவிற்கு போன் செய்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் ரோகினி, கிரிஷ் பார்த்த மாதிரி இருக்கிறது என்று உண்மை தெரிந்து கொள்வதற்காகத்தான் மீனாவிடம் போன் செய்கிறார். மீனா, முத்துவிடம் கிரிஷ் இல்லை என்று தெரிந்தவுடன் ரோகினி வருத்தப்படுகிறார். அதற்குப்பின் கிரிஷை கண்டுபிடிக்க ரொம்பவே கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவருமே மீனாவின் வீட்டிற்கு சென்று விடுகிறார்கள். அப்போது முத்து, கார் டிக்கியை திறக்கும்போது கிரிஷ் இருப்பதை பார்த்து ஷாக் ஆகிறார். பின் கிரிஷ் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புகிறார்.
சீரியல் ட்ராக்:
கிரிஷ், கண் விழித்து இது உங்களுடைய கார் என்று எனக்கு தெரியாது. ஸ்கூலில் என்னை போலீசில் பிடித்துக் கொடுப்பேன் என்று மிரட்டினார்கள் என நடந்ததை சொல்கிறார். பின் முத்து, பாட்டியை ஊருக்கு அனுப்பிவிட்டு கிரிஷ் உடைய அம்மா இவனை ஹாஸ்டலில் சேர்த்து விட்டு எங்கேயே சென்று விட்டார் என்கிறார். அதற்கு அப்புறம் மீனா வீட்டில் எல்லோரும் க்ரிஷ் அம்மா பற்றி விசாரிக்கிறார்கள். ஆனால், கிரிஷ் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.