மீனா சொன்ன விஷயம், முத்துவிற்கு கிடைத்த அங்கீகாரம் - சிறகடிக்க ஆசை

மீனா சொன்ன விஷயம், முத்துவிற்கு கிடைத்த அங்கீகாரம்

By subhashini · 22/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரேகா, என்னை யாரும் கடத்தவில்லை. நானாக விருப்பப்பட்டு தான் வந்தேன். அதையும் மீறி போலீசில் புகார் கொடுத்திருந்த கொடுத்தால் நான் என்னுடைய அப்பா அம்மாவிற்கு எதிராகவே சாட்சி சொல்வேன் என்றார். இதை கேட்டவுடன் போலிஸ் எதுவும் பேசாமல் அங்கு இருந்து சென்றார்கள். சிந்தாமணி, தன்மகள் தனக்கு எதிராக திரும்பியது நினைத்து கொந்தளிக்கிறார். இன்னொரு பக்கம் விஜயா, மனோஜ் இருவரும் வக்கீலை சந்தித்து விவாகரத்து விஷயமாக பேசி இருந்தார்கள். அப்போது ரோகினி சொன்ன விஷயத்தை எல்லாம் மனோஜ் சொன்னார். ரோகினிக்கு போன் செய்த வக்கீல், விவாகரத்துக்கு சம்மதமா? அவர்கள் பணத்தை தந்துவிடுவார்கள் என்றார்.

ரோகினி, பணத்தை கொடுத்து விட்டால் நான் டைவர்ஸ் கொடுத்து விடுவேன் என்றார். வக்கீலும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். பின் வக்கீல், மனோஜிடம் பணத்தை ரெடி பண்ண சொன்னார். மனோஜ், நான் எங்கே போவேன் என்றார். வக்கீல், உன் தம்பியே 38 லட்சம் ரெடி பண்ணி வீட்டை அமைக்கும் போது நீ ரெடி பண்ண மாட்டாயா? எப்படியாவது பணத்தை ரெடி பண்ணி இந்த கேஸை முடித்து விடலாம் என்றார். அதற்குப்பின் மீனாவின் அம்மா சந்திரா போன் செய்து, வீட்டிற்கு வெளியே இரண்டு பேர் சுற்றிக் கொண்டிருந்தார்கள். எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது என்றார்.

சிறகடிக்க ஆசை:

மீனா, தன்னுடைய அம்மாவிற்கு தைரியப்படுத்தினார். முத்து-மீனா இருவருமே சேர்ந்து சந்திராவை பார்வதியின் வீட்டில் கொஞ்ச நாட்களுக்கு தங்க வைக்கலாம் என்று முடிவெடுத்தார்கள். மறுநாள் காலையில் சீக்கிரமாகவே மீனா, பார்வதியின் வீட்டிற்கு சென்று நடந்ததை எல்லாம் சொல்லி தன்னுடைய அம்மாவை தங்க வைப்பதற்கு அனுமதி கேட்டார். பார்வதி, சத்யா-ரேகா கல்யாணம் நடக்கும் வரை உன் அம்மா என் வீட்டிலேயே தங்கி கொள்ளட்டும். எந்த பிரச்சனையும் இல்லை என்றார். அதற்குப்பின் மீனா கிளம்பி போனார். இன்னொரு பக்கம் முத்து, மீனாவிற்கு போன் செய்தார். ஆனால், போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது. அண்ணாமலை, சந்திரா எல்லாருமே போன் செய்தார்கள். ஆனால், மீனா போனை எடுக்கவில்லை. இதனால் பயந்து கொண்டு முத்து எல்லா இடங்களிலும் தேடினார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, எங்கு தேடியும் மீனா கிடைக்கவில்லை என்றவுடன் சிந்தாமணியின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு சிந்தாமணி தன்னுடைய அடியாட்களுக்கு பணம் கொடுக்கிறார். இதை கவனித்த முத்து, மீனாவை என்ன செய்தாய்? எதற்காக கடத்தினாய்? என்றெல்லாம் மிரட்டுகிறார். சிந்தாமணியும் அவருடைய கணவரும் எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை. நீ போலீஸ் ஸ்டேஷனில் போய் கம்பளைண்ட் கொடு என்று தெனாவட்டாக பதில் சொல்கிறார்கள். பின் வேதனையுடன் வீட்டிற்கு வந்த முத்து, மீனாவின் வண்டி இருப்பதை பார்த்து சந்தோசப்படுகிறார். பின் மீனாவை பார்த்தவுடன் முத்து எமோஷனலாக பேசுகிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது மீனா, என்னுடன் வேலை செய்பவரின் மகளுக்கு பிரசவ வலி வந்து விட்டது. அதனால் தான் என்னால உங்களிடம் தகவல் சொல்ல முடியவில்லை என்கிறார். அதற்குப்பின் டூரிஸ்ட் அசோசியேஷனிலிருந்து சிலர் முத்துவை சந்திக்க வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். முத்துவின் குணங்களையும் அவர் செய்து வரும் நல்ல விஷயங்களை எல்லாம் தெரிந்து கொண்டு தங்களுடைய அசோசியேஷனில் உறுப்பினராக சேர்த்துக் கொள்வதாக சொல்லி இருக்கிறார்கள். இதை கேட்டு வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள். அதோடு அவர்கள் முத்துவை ரொம்பவே பெருமையாக புகழ்ந்து பேசுகிறார்கள். இதைக் கேட்டு விஜயாவுக்கு கடுப்பாகிறது. அண்ணாமலை ரொம்பவே பெருமைப்படுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full