முத்துவுக்கு கிடைத்த புகழாரத்தை கண்டு வயிறு எரியும் மனோஜ்-விஜயா, விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

முத்துவுக்கு கிடைத்த புகழாரத்தை கண்டு வயிறு எரியும் மனோஜ்

By subhashini · 13/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சத்யா விடுதலை ஆனதால் சிந்தாமணி பயங்கரமாக கோபப்பட்டார். அதோடு ரேகாவை உண்மையாலுமே கடத்திவிடலாம் என்று சிந்தாமணி திட்டம் போட்டார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த சத்யாவிடம் சந்திரா, மீனா, சீதா மூவருமே ரேகாவை மறந்துவிட சொல்லி வற்புறுத்துகிறார்கள். சத்யா, ரேகாவை கல்யாணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். அப்போது வந்த முத்து, நீங்கள் இப்படி எல்லாம் கட்டாயப்படுத்தினால் ரேகா மருந்து குடித்து இறந்து விடுவாள். இவனும் ரேகா போன கவலையில் தற்கொலை செய்து கொள்வான். இதெல்லாம் தேவையா? என்று உண்மையை எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். அதனால் மீனாவும் சத்யாவின் காதலுக்கு சப்போர்ட் செய்தார்.

வீட்டிற்கு வந்த முத்து, மீனாவிடம் அண்ணாமலை விசாரித்தார். அப்போது முத்து, சத்யா-ரேகா இருவரும் காதலித்தார்கள். சத்யாவின் வாழ்க்கையை காலி செய்ய தான் சிந்தாமணி இப்படி செய்திருக்கிறார் என்றார். இதைக் கேட்டவுடன் விஜயா ரொம்பவே சந்தோஷப்பட்டார். நான் சொன்னது போலவே பலித்து விட்டது. அவளுடைய மகள் ஒன்றும் இல்லாதவனை தான் இழுத்துக் கொண்டு ஓடுவாள் என்று சொன்னேன், அது உண்மையாகிவிட்டது என்று சொல்லி மீனாவின் குடும்பத்தையும் தரக்குறைவாக பேசி இருந்தார். இதனால் கொந்தளித்த முத்து, வழக்கம்போல தன்னுடைய அம்மாவிடம் வாக்குவாதம் செய்தார்.

சிறகடிக்க ஆசை:

அதற்குப்பின் முத்து தன்னுடைய குடும்பத்திற்காக செய்த உதவிக்கு மீனா நன்றி சொன்னார். பின் முத்து- மீனா இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டார்கள். இன்னொரு பக்கம் ரோகினி சாப்பிடாமல் ரொம்பவே கவலையில் இருப்பதால் அவருடைய அம்மா வித்யாவை வீட்டிற்கு வர வைத்தார். ரோகினி, மனோஜ் அவருடைய அம்மா பேச்சை மட்டும் கேட்பதாக சொல்லி புலம்பினார். வித்யா, இதற்கு ஒரே முடிவு நீ மனோஜை விவாகரத்து செய்துவிடு. உன்னுடைய மகனுடன் சந்தோஷமாக வாழு என்றார். ரோகிணி, அதெல்லாம் முடியாது. நான் மனோஜுடன் தான் சேர்ந்து வாழ்வேன். என்ன நடந்தாலும் எனக்கு மனோஜ் வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்துவிடம் வேலை செய்யும் டிரைவர்கள் எல்லோருமே தங்கள் சம்பாதித்த பணத்தை கொடுத்து மாலையெல்லாம் போட்டு பாராட்டுகிறார்கள். முத்துவை எல்லா டிரைவர்களும் புகழ்ந்து பேசுவதை பார்த்து அண்ணாமலை ரொம்பவே சந்தோஷப்படுகிறார். ஆனால், மனோஜ் விஜயா இருவரும் வயிறு எரிகிறார்கள். பின் விஜயா, மனோஜிடம் நீ இவனை விட அதிகமாக சம்பாதிக்கணும். நீ நிறைய படித்திருக்கிறாய் நன்றாக யோசி. அவர்கள் முன்பு நீ நன்றாக வாழ்ந்து காட்டணும் என்றெல்லாம் சொல்கிறார். அதற்குப்பின் பார்வதி யூடியூபில் நிறைய சம்பாதிப்பதை கவனித்த விஜயா, தானும் புதிதாக youtube சேனல் ஓபன் செய்வதாக வீட்டில் எல்லோரிடமும் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

சுருதி எப்படி எல்லாம் யூடியூப் சேனல் தொடங்கனும். அதில் எப்படி சம்பாதிக்கணும்? என்றெல்லாம் ஐடியா கொடுக்கிறார். பின் விஜயா, தன்னுடைய நடன வீடியோக்களை போட்டு சேனல் தொடங்குவதாக சொல்கிறார். அதற்குப்பின் மனோஜ் கடையின் வியாபாரம் ரொம்பவே மோசமாக போகிறது. டீலர்கள் எல்லாம் பணத்தை கொடுத்து பொருளை வாங்க சொல்வதால் என்ன செய்வது என்று புரியாமல் மனோஜ் தவிக்கிறார். விஜயாவும் உன்னுடைய மூளையை யூஸ் பண்ணி ஏதாவது செய் என்றார். அதற்குப் பின் கடைக்கு வந்த மனோஜ், ரோகினிக்கு கோர்ட்டில் சொன்னபடி பணம் கொடுப்பதற்கு ஜீவாவை போன் செய்ய சொல்கிறார். ரோகினி, நான் வெளியில் இருக்கிறேன். மனோஜை வீட்டில் வந்து பணத்தை கொடுக்க சொல் என்று சொல்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full