மனோஜ் செய்யும் அட்ராசிட்டி, அருணை காப்பாற்றிய முத்து - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 27/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, நீ ரொம்ப திறமைசாலி மனோஜ். ஆனால், ரோகினி மாதிரி பொய் சொல்லி யாரையும் ஏமாற்றக்கூடாது என்று சொல்லி கொடு என்றார். பின் மனோஜ் பேச்சை கேட்டு தெருவில் இருக்கும் நாய் வெறிபிடித்து குறைத்தது. உடனே கோபத்தில் மனோஜ் அந்த நாயை கல்லால் அடித்தார். பின் நாயின் உரிமையாளர் முத்து வீட்டில் ப்ரச்சனை செய்தார்கள். பின் மனோஜ், பணம் கொடுத்து அந்த நபரை அனுப்பி விட்டார். க்ரிஷ் படிக்கும் பள்ளியில் எல்லா மாணவர்களுடைய பெற்றோர்களுமே தங்களுடைய பிள்ளைகளுக்கு பாசமாக சாப்பாடு ஊட்டி விட்டு கவனித்துக் கொண்டார்கள்.

இதை பார்த்து கிரிஷ்க்கு ஏக்கமாக இருந்தது. பின் தன் அம்மாவிற்கு போன் செய்து கிரிஷ் பேசினார். கோபத்தில் ரோகினி திட்டி போனை வைத்து விட்டார். அதே பள்ளிக்கூடத்தின் விழாவிற்கு டெக்கரேஷன் செய்ய மீனா வந்திருந்தார். மீனாவின் ஆர்டரை கெடுக்க சிந்தாமணியும் வந்தார். பின் மீனா தனக்கு தெரிந்தவரிடம் என்னை விட அவர்கள் குறைவாக தான் ஆர்டர் எடுப்பார்கள் என்றார். இதனால் மீனா புத்திசாலித்தனமாக ஆர்டருக்கான செலவை கம்மியாக சொல்வதால் சிந்தாமணியும் அதைவிட குறைவாக சொல்லிவிட்டார். இதனால் சிந்தாமணிக்கு நஷ்டம் ஏற்பட்டது.

சிறகடிக்க ஆசை:

அதற்குப்பின் மீனாவை பார்த்த கிரிஷ் கத்திக் கொண்டே வந்தார். இன்னொரு பக்கம் மனோஜ் ஸ்பீச் கொடுக்க தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது க்ரிஷ் படிக்கும் ஸ்கூலுக்கு தான் மனோஜ் செல்கிறார் என்ற விஷயத்தை அறிந்து கொண்ட ரோகினி ஷாக் ஆனார். இன்னொரு பக்கம் விஜயா மரக்கன்றுகளை நடுவதை பற்றி எல்லாம் பேசிய வீடியோ போட்டுக் கொண்டிருந்தார். இதை எல்லாம் பார்த்து முத்துவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்குப்பின் மனோஜ் காரில் சென்று கொண்டு இருக்கும் போது போன் செய்த ரோகினி, எனக்கு உடம்பு முடியவில்லை, என்னவோ செய்கிறது என்று ஏதேதோ காரணங்களை சொல்வதால் மனோஜ் பதறி கொண்டு வீட்டிற்கு கிளம்பப் பார்த்தார்.

நேற்று எபிசோட்:

ரோகினி உடம்பு முடியவில்லை என்று சொன்னதால் மனோஜ் பள்ளிக்கூடத்திற்கு போகாமல் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டு வாசலில் நாய், மனோஜை பார்த்து குறைக்கிறது. கோபத்தில் மனோஜ் அந்த நாயை அடிக்கும் போது அந்த நாய் மனோஜின் காலை கடித்து விட்டது. பின் வலி தாங்க முடியாமல் மனோஜ் கத்தினார். அந்த நாயின் உரிமையாளர், மனோஜை வீட்டில் கொண்டு வந்து விட்டு நடந்ததை சொன்னார். வீட்டில் உள்ள எல்லோருமே வழக்கம் போல மனோஜை கேலி செய்து பேசி இருந்தார்கள். அப்போது மனோஜை செக் செய்த டாக்டர், அந்த நாய் உயிருடன் இருக்க வேண்டும். கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் பயமுறுத்துவிட்டு சென்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ் ஒவ்வொரு செயலையும் நாய் மாதிரியே செய்து கொண்டிருக்கிறார். இதனால் விஜயா ரொம்பவே பயப்படுகிறார். அந்த சமயம் பார்த்து நாயை காணவில்லை என்று உரிமையாளர் புலம்பி கொண்டிருந்தால் மனோஜ், நாய் செத்துவிட்டது என்று நினைத்து கொண்டு நானும் செத்து விடுவேன், எனக்கு என்னென்னவோ ஆகிறது என்றெல்லாம் அலப்பறை செய்து கொண்டிருக்கிறார். உடனே முத்து, உனக்கு ஒன்றும் ஆகாது. நான் பார்த்துக்கொள்கிறேன். நீ தேவையில்லாததை எல்லாம் யோசிக்காதே அவருக்கு அறிவுரை சொல்கிறார். அதற்கு பின் ரோகினி, கிரிஷை பார்க்கப் போகிறார்.

சீரியல் ட்ராக்:

அந்த இடத்தில் மீனா, தன்னுடைய தம்பி இடம் பேசிக் கொண்டிருக்கிறார். கிரிஷை பார்த்த மீனா, கத்திக்கொண்டே வருகிறார். உடனே ரோகினி, கிரிசை வேகமாக காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் டிராபிக் ரூல்ஸ் மீறி சில பேர் வண்டி ஓட்டி வந்ததால் அருண் அவர்களை பின்தொடர்ந்து சென்று சண்டை போடுகிறார். அந்த வழியாக வந்த முத்து, அருணை காப்பாற்றி அந்த நபர்களை அடித்து விரட்டுகிறார். இதனால் அருணுக்கு தலையில் அடிபடுகிறது. ஆனால், முத்து தனக்கு உதவி செய்ததற்கு நன்றி கூட சொல்லாமல் அந்த இடத்தை விட்டு அருண் சென்று விடுகிறார். கடைசியில் ரோகினி, கிரிஷ் இடையே வாக்குவாதம் நடக்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full