பிரச்சனையில் சிக்கிய சீதாவிற்கு உதவி செய்த முத்து, மீண்டும் மண்ணை கவ்விய அருண் - சிறகடிக்க ஆசை

By subhashini · 25/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சீதா, அருணிடம் உன் புருஷன் மன்னிப்பு கேட்கணும் என்றார். அதற்கு மீனா, என் கணவர் சம்மதித்தாலும் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். என் கணவர் மீது எந்த தவறும் இல்லை என்றார். அதற்குப்பின் முத்துவின் செயலை பாராட்டி விருது கொடுப்பதாக சிலர் வீட்டிற்கு வந்து இருந்தார்கள். முத்து, நான் எந்த விருதுக்காகவும் உதவி செய்யவில்லை என்று அவர்களை அனுப்பி விட்டார். அதற்குப்பின் மீனா, சீதா சொன்னதை எல்லாம் சொன்னார். அதற்கு முத்து, மன்னிப்பு கேட்பதால் ஒன்னும் நான் குறைந்து போக மாட்டேன் என்றார்.

பார்வதி, யோகா கிளாஸ்சுக்கு வரும் சிவன் இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சிவன், கதை கொடுத்து பார்வதியிடம் படிக்க சொன்னார். அந்த சமயம் வந்த மீனா, இந்த கதை நன்றாக இருக்கிறது. நீங்கள் படிக்கும் போது இதை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் போடுங்கள் என்று ஐடியாக்களை சொன்னார். அந்த சமயம் வந்த விஜயா வழக்கம் போல் மீனாவையும் பார்வதியும் கண்டித்து திட்டினார். அதற்குப் பார்வதி, உனக்கு குடும்பம், மகன்கள், மருமகள் எல்லோரும் இருந்தார்கள். எனக்கு யாரும் இல்லை. சிவன் உடன் நண்பராகத்தான் பழகுகிறேன் என்றார்.

சிறகடிக்க ஆசை:

இன்னொரு பக்கம் தன் ரெண்டு மகள்களின் நிலைமையை நினைத்து மீனாவின் அம்மா உடம்பு சரியில்லாமல் போனது. பின் அவரை ஹாஸ்பிடலில் சேர்த்தார்கள். அதற்குப்பின் டாக்டர், மீனாவின் அம்மா ஓய்வு எடுக்க வேண்டும் என்றார். அப்போது மீனா, நான் ஒரு வாரம் நம் வீட்டிலேயே தங்கி உன்னை கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் வேலைக்கு போக வேண்டாம் என்றெல்லாம் சொன்னார். உடனே சீதா, நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து விடுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். பின் மீனா-சீதா இருவரும் சண்டை போட்டார்கள். முத்து, சீதா வீட்டிற்கு அத்தை போகட்டும் என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் சீதா தான் பணத்தை திருடினார் என்று ஹாஸ்பிடல் இன்சார்ஜ் திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது வந்து அருண், சீதா மீது எந்த தவறும் இல்லை என்று தன்னுடைய உயரதிகாரியிடம் சிபாரிசு லெட்டர் வாங்கிட்டு வந்து கொடுக்கிறார். இருந்தாலுமே அந்த ஹாஸ்பிடல் ஓனர், சீதா இங்கு வேலை செய்ய முடியாது. எங்கேயுமே வேலை செய்ய முடியாத மாதிரி செய்து விடுவேன் என்றெல்லாம் மிரட்டுகிறார். அந்த சமயம் வந்த முத்து, சீதா மீது எந்த தவறும் இல்லை. திருடர்களை பிடித்து பணத்தை கொண்டு வந்த விட்டோம் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதை பார்த்து சீதா எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். பின் சீதாவின் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபித்தவுடன் முத்து அங்கிருந்து செல்கிறார். இதையெல்லாம் பார்த்து அருணுக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் வீட்டுக்கு வந்த முத்து நடந்தது எல்லாம் அண்ணாமலை இடம் சொல்கிறார். அதற்குப்பின்
முத்து- சத்யா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது முத்து, கஷ்டப்பட்டு இருப்பவர்களிடம் அநியாயவட்டி போட்டு பணத்தை வாங்குவது ரொம்ப தவறு. அதனால்தான் அந்த ஆட்டோ டிரைவர் ஆள் வைத்து பணம் திருடினார். தயவு செய்து இந்த தொழில் வேண்டாம். இந்த பாவம் உன்னை சும்மா விடாது என்றெல்லாம் அறிவுரை சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full