விஜயாவின் சூழ்ச்சியை அறிந்த மீனா, ஆவேசத்தில் முத்து செய்தது - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் சிந்தாமணி, மீனாவுக்கு கிடைத்த ஆர்டரை கிடைக்க விடாமல் தடுக்க விஜயாவை உஷ்பேத்தி விட்டார். பின் வீட்டிற்கு வந்த முத்துமிடம் விஜயா, மீனாவை பற்றி குறை சொல்லி சண்டை போட்டார். ஆனால், முத்து அதைப்பற்றி பெரிதாகவே கண்டு கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் சீதா, அந்த ட்ராபிக் போலீஸின் அம்மாவை நன்றாக கவனித்துக் கொண்டார். இதை பார்த்தவுடன் அவருடைய அம்மாவிற்கும், போலீசுக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அந்த டிராபிக் போலீஸ்க்கு, சீதா மீது ஒரு நல்ல அபிப்ராயம் இருக்கிறது.
இன்னொரு பக்கம் மீனா, வீட்டில் உள்ள வேலைகளை முடித்துவிட்டு ஆர்டருக்காக செல்ல பார்த்தார். அந்த சமயம் பார்த்து விஜயாவிற்கு போன் செய்த சிந்தாமணி, மீனா ஆர்டரை முடிக்க விடாமல் வீட்டிலேயே வையுங்கள். அவள் மண்டபத்திற்கு வரக்கூடாது என்று சொன்னவுடன் விஜயாவும் வீட்டில் உள்ள எல்லோரையும் அனுப்பி விட்டு, மீனாவை வெளியில் அனுப்பாமல் இருப்பதற்கு புது டிராமா போட்டார். நேற்று எபிசோட்டில் விஜயா, மீனாவை வெளியே போக விடாமல் ஒவ்வொரு வேலையாக வைத்துக் கொள்ள வைத்துக் கொண்டே இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
மீனாவிற்கும் என்ன சொல்வது என்று புரியாமல் தவித்தார். இன்னொரு பக்கம் முத்து, நேரம் ஆகிவிட்டது மண்டபத்திற்கு வா என்று மீனாவிடம் சொன்னார். உடனே மீனா, வீடியோ கால் மூலம் எப்படி எல்லாம் டெக்கரேஷன் செய்வது என்று சொல்லி தந்தார். ஒவ்வொரு இடத்திற்கும் என்ன வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க, அதற்கு ஏற்ப மண்டபத்தில் இருப்பவர்களும் செய்தார்கள். அப்படியே விஜயா சொல்லும் வேலையையும் மீனா செய்து கொண்டிருந்தார்.
நேற்று எபிசோட்:
ஒரு வழியாக வீடியோ கால் மூலமாகவே மீனா டெக்கரேஷன் ஒர்க்கை சூப்பராக செய்து முடித்தார். இதை பார்த்த சிந்தாமணிக்கு பயங்கர கோபம் வந்தது. பின் அவர் விஜயாவிற்கு கால் செய்து, மீனா ஆர்டரை முடித்து விட்டார் என்று சொன்னவுடன் விஜயா ஷாக்காகி, நான் மீனாவை வெளியே அனுப்பவில்லையே? எப்படி செய்து முடித்தால் என்று கேட்டார். அதற்கு சிந்தாமணி, உங்களை விட மீனா தந்திரக்காரி. உங்களிடம் ஒரு வேலையை சொன்னது வேஸ்ட் என்று திட்டி விட்டு வைத்து விட்டார். இவர்கள் இருவரும் பேசியதை வெளியே நின்று மீனா கேட்டு விட்டார்.
இன்றைய எபிசோட்:
இன்னொரு பக்கம் ஸ்ருதி, ரவி ஹோட்டலில் வேலை சேர்ந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் மீனா, நல்லபடியாக ஆர்டரை செய்து முடித்ததால் முத்து மாலையுடன் வீட்டிற்கு வருகிறார். மீனாவிற்கு மாலை போட்டுவிட்டு வாழ்த்துக்கள் சொல்கிறார். பின் வீட்டில் உள்ள எல்லோருக்குமே உண்மை அறிந்து மீனாவிற்கு வாழ்த்துக்கள் சொல்கிறார்கள். அப்போது முத்து, அம்மாவிற்கு உடம்பு முடியவில்லை என்றாலுமே மீனா செய்தார். வீட்டில் இருந்தே மீனா ஆர்டர் முடித்தது பெரிய விஷயம் என்று அவரை ரொம்ப பாராட்டி பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
இதையெல்லாம் பார்த்து விஜயா- ரோகினி- மனோஜ் மூவருக்குமே காண்டாகிறது. அதற்குப்பின் மீனா, விஜயா செய்த வேலையை பற்றி சொல்கிறார். இதனால் முத்துவிற்கு பயங்கர கோபம் வந்து, அம்மா உடம்பு முடியாது போல் நடித்து இருக்கிறார். மீனா வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. சிந்தாமணி உடன் சேர்ந்து தேவையில்லாத வேலை செய்கிறார் என்றெல்லாம் சொன்னவுடன் அண்ணாமலை, விஜயாவை திட்டுகிறார். ஆனால், விஜயா எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார். அதற்குப்பின் முத்து, மீனாவின் பெயரில் அக்கவுண்ட் ஓபன் பண்ணுகிறார். இதனால் மீனா சந்தோசப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.