வீட்டை மீட்க கடினமாக உழைக்கும் முத்து-மீனா, மனோஜை வெளுத்து வாங்கும் விஜயா - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சத்யா, ரேகா இருவரும் முத்துவை சந்தித்து பேசி இருந்தார்கள். அப்போது சத்யா, வீட்டில் பயங்கர பிரச்சினையாக இருக்கிறது என்றார். முத்து, எதுவாக இருந்தாலும் பார்த்து தான் ஆகணும் என்று சமாதானம் செய்தார். பின் முத்து, வரும் வழியில் மீனாவை கத்தியால் குத்திய நபரை பார்த்து விட்டார். பின் முத்து, அந்த நபரை அடித்து வெளுத்து வாங்கி உண்மையை கேட்டார். அந்த நபருமே சிந்தாமணி சொல்லி தான் செய்ய சொன்னேன் என்று உண்மையை ஒற்றுக்கொண்டார். அதற்குப்பின் முத்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து விட்டார். சிந்தாமணியை போலீஸ் கைது செய்தார்கள்.
பைனான்சியர், எனக்கு 48 லட்சம் ரூபாயை செட்டில் செய்ய வேண்டும். இல்லை என்றால் போலீசை வர வைப்பேன் என்றார். முத்து முடியாது என்று பிரச்சனை எல்லாம் செய்தார். அண்ணாமலை, நான் கையெழுத்து போடவில்லை என்றார். ஆனால், பைனான்சியர் கேட்கவே இல்லை. அந்த பணத்திற்கு உங்கள் மகன் முத்து பொறுப்பேற்க வேண்டும். நீங்கள் கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும். மூன்று மாதம் தான் டைம் இல்லை என்றால் இந்த வீட்டை நான் எடுத்துக் கொள்வேன் என்றார். அண்ணாமலையால் எதுவுமே பேச முடியவில்லை.
சிறகடிக்க ஆசை:
விஜயா அமைதியாக இருந்தார். எல்லோரும் கையெழுத்து போட்டு கொடுத்தார்கள். அண்ணாமலை, விஜயாவின் கன்னத்திலேயே ஓங்கி அறைந்தார். நீ இவ்வளவு பெரிய துரோகத்தை செய்வாய் என்று நான் நினைக்கவே இல்லை. இந்த வீட்டை மீட்க போவது முத்து-மீனா தான். ஆனால், மனோஜ்க்கு இந்த வீட்டில் இருந்து ஒரு சல்லி பைசா கூட கிடையாது என்றார். இதனால் மனோஜ்க்கு கோவம் தான் வருகிறது. அதற்குப்பின் அண்ணாமலை ரொம்பவே வருத்தத்தில் இருந்தார். விஜயா பேச வருகிறார். அண்ணாமலை எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினார். முத்து-மீனா இருவரும் வீட்டை எப்படி மீட்பது என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, இரண்டு பேருமே கஷ்டப்பட்டு சம்பாதித்தால் இந்த பிரச்சனையை முடிந்தவரை முடிக்க பார்க்கலாம் என்று சொல்கிறார். மீனாவும் என்னனலாம் செய்யலாம் என்று ஒரு பேப்பரில் எழுதி வைக்கிறார். பின் இருவரும் தங்களுடைய வீட்டை மீட்டெடுக்க போராடுகிறார்கள்.
இருவரும் சீக்கிரமாகவே வேலைக்கு கிளம்பி செல்கிறார்கள். இருவரும் ரொம்பவே கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். மீனாவிடம் வேலை செய்பவர்கள் அரசாங்கம் நடத்தும் ஒரு பெரிய பொருட்காட்சிக்கு பூ கொடுக்கும் ஆர்டர் கிடைத்திருக்கிறது.
சீரியல் ட்ராக்:
அதன் மூலம் நிறைய லாபம் கிடைக்கும் என்று சொன்னார். மீனாவுமே சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் நிறைய வாடகையை எடுத்துக்கொண்டு முத்து செல்கிறார். இன்னொரு பக்கம் விஜயா, வீட்டை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது மனோஜ், பிரியாணி வாங்கி வந்து தன்னுடைய அம்மாவை சாப்பிட கூப்பிட்டார். கோபத்தில் விஜயா, வீடு என்ன ஆகுமோ என்று தெரியவில்லை. உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பில்லையா என்று மனோஜை அடி விழுது வாங்குகிறார்.