ரவி-ஸ்ருதி சொன்ன வார்த்தை, போட்டியில் அசிங்கப்பட்ட முத்து-மீனா- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 12/8/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் முத்து-மினா இருவரும் கிரிஷை தத்து எடுக்க நினைத்து வீட்டில் அனைவரிடமும் சொல்ல, விஜயா மற்றும் மனோஜ் கேவலமாக கிரிஷ் அம்மாவை பேசி இருந்தார்கள். இதையெல்லாம் ரோகிணி வெளியே நின்று கேட்டு வருத்தப்பட்டு இருந்தார். கடைசியில் முத்து, கிரிஷை தத்து எடுப்பேன் என்று உறுதியாக நின்றார். பின் ரோகினி, தனது அம்மாவிடம் நடந்த உண்மையையெல்லாம் சொல்லி முத்து போன் செய்தால் எடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இன்னொரு பக்கம் சீதா, டிகிரி பாஸ் பண்ணி விட்டேன் என்று முத்து-மீனாவிடம் சொல்லி சந்தோசப்பட்டார். பின் கடைக்கு பேங்கில் வந்த ஒருவர், உங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கிரெடிட் கார்டு வந்து இருக்கிறது என்ற சொன்னவுடன் மனோஜ் சந்தோஷத்தில் ரோகினி பேச்சை கூட கேட்காமல் கையெழுத்து போட்டு கொடுத்தார். மேலும், ரோகினி தன்னுடைய தோழியுடன் ஹாஸ்பிடலுக்கு சென்று தனக்கு குழந்தை பிறக்குமா? என்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு இருந்தார். அந்த சமயம் பார்த்து சீதா வேலைக்காக அதே ஹாஸ்பிடலில் வந்திருந்தார்.

சிறகடிக்க ஆசை:

பின் வேலை கிடைத்த சந்தோஷத்தை மீனாவிடம் போன் செய்து சொல்லும்போது, ரோகினியை மருத்துவமனையில் பார்த்த விஷயத்தை சீதா சொல்லி இருந்தார். இதனால் ரோகினி கர்ப்பமாக இருக்கிறார் என்று நினைத்து கொண்டு மீனா ஸ்வீட் செய்து எல்லோருக்கும் கொடுக்க, விஜயா- மனோஜ் கிண்டலடித்து பேசி இருந்தார்கள். அதற்கு மீனா, ரோகினி கர்ப்பம் என்று சொல்ல, வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், ரோகினி அதிர்ச்சியாகி, நான் கர்ப்பமாகவே இல்லை. யாரைக் கேட்டு நீங்களே இந்த மாதிரி முடிவெடுத்து சொன்னீர்கள்? என்று கோபமாக பேசி இருந்தார்.

சீரியல் கதை:

பின் ரோகினி, ரூமில் நாம் இருவரும் ஹாஸ்பிடல் போய் ஒரு முறை செக் பண்ணிக்கலாம் என்று கேட்க, மனோஜ், நான் சரியாகத்தான் இருக்கிறேன் என்று சொல்ல இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. பின் இந்த விவகாரம் விஜயாவிற்கு தெரிந்து ரோகினியை பயங்கரமாக திட்டி இருந்தார். அதன் பின் ரவி, தான் வேலை செய்யும் இடத்தில் திருமணம் ஆன ஜோடிகளுக்கு போட்டி நடப்பதாக சொல்ல, வழக்கம்போல் மனோஜ், நாங்கள் தான் ஜெயிப்போம் என்று திமிராக பேசி இருந்தார்.

இன்று எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோடில், எல்லா ஜோடிகளும் போட்டியில் கலந்து கொள்வது பற்றி மும்மரமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரோகினி, எதற்கு நாம் இந்த போட்டியில் கலந்து கொள்ளணும், வேண்டாம் என்று சொன்னவுடன் 1 லட்ச ரூபாய் கிடைக்குது, பணம் கிடைத்தவுடன் நாம் டூர் போகலாம் என்று மனோஜ் சொன்னவுடன் ரோகினி மனம் மாறி விடுகிறார். இன்னொரு பக்கம் முத்து, மீனா போட்டியில் என்னென்ன கேட்பார்கள் என்று ரவி- ஸ்ருதி இடம் கேட்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அப்போது, நீங்கள் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். அடுத்த நாள் போட்டி நடைபெறுகிறது. ஒவ்வொருவருமே தங்களைப் பற்றி அறிமுகம் செய்யும் போது கைதட்டுகிறார்கள். ஆனால், முத்து- மீனா பேசும்போது மட்டும் கை தட்டவில்லை. இதனால் இருவருக்குமே கஷ்டமாகி விடுகிறது. பின் ஒவ்வொரு பெண்களும் தங்களுடைய தனித்திறமையை காண்பிக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full