கிரிஷின் ரகசியத்தை அறிந்த முத்து, பதட்டத்தின் உச்சத்தில் ரோகினி, அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை

By subhashini · 10/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சத்யா, தான் வேலை செய்யும் முதலாளி, ரேகா மூவரும் சேர்ந்து ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது தன்னுடைய பெண்ணை பார்ப்பதற்கு சிந்தாமணி ஹோட்டலுக்கு வந்தார். மீனா வேண்டாம் என்று சொன்ன அந்த ஆர்டரை சிந்தாமணியிடம் செய்ய சொல்லி கேட்டார்கள். கோபத்தில் சிந்தாமணி, அவள் கேன்சல் செய்த ஆர்டரை என்னால் செய்ய முடியாது என்றார். இன்னொரு பக்கம் ஆண்கள் சமைத்தார்கள். அந்த சமயம் வந்த அண்ணாமலையின் உறவினர்கள் வந்து விடுவதால் சமைத்த சாப்பாட்டை எல்லாம் அவர்களுக்கு கொடுத்து விட்டார்கள். இதை பார்த்து மனோஜ்க்கு பயங்கர கடுப்பானது.

முத்து, அண்ணாமலையை உட்கார வைத்து நாங்கள் மூன்று பேரும் செய்கிறோம் என்றார். மனோஜ், என்னால் வேலை செய்ய முடியாது என்று வாக்குவாதம் செய்தார். இதனால் முத்து- மனோஜ் இடையே சண்டை நடக்கிறது. இதை பார்த்து ரவி, நானே எல்லா வேலையும் செய்து கொள்கிறேன் என்றார். அதற்கு முத்து, நான் உனக்கு உதவி செய்கிறேன் என்றார். வேறு வழி இல்லாமல் மனோஜ் வேலை செய்ய ஒத்துக்கொண்ர். அதற்குப்பின் மனோஜ், முத்து, ரவி வீட்டின் மொத்த வேலையும் முடித்து விடுகிறார்கள். பின் வீட்டு வேலை செய்ததால் உடம்பு அசதியாக இருப்பதால் சரக்கு அடிக்கலாம் என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள்.

சிறகடிக்க ஆசை:

இன்னொரு பக்கம் கிரிஷ் பெரியப்பா, பெரியம்மா இருவருமே லக்ஷ்மிக்கு ஃபோன் செய்து கிரிஷை பார்க்க வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால் லட்சுமி முடியாது என்று போனை வைத்து விட்டார். இன்னொரு பக்கம் மொட்டை மாடியில் முத்து, மனோஜ், ரவி மூன்று பேருமே சரக்கு அடித்துக் கொண்டு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த அண்ணாமலை, குடும்பத்தை பற்றியும் மனைவியின் முக்கியத்துவத்தை பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் கிரிஷை பார்ப்பதற்கு லட்சுமி ஒத்துக் கொள்வதால் கிரிஷ் பெரியப்பா, பெரியம்மா இருவருமே சந்தோஷப்படுகிறார்கள். அதற்குப்பின் முத்து, சவாரிக்கு வந்துவிடுகிறார். முத்து, கிரிஷ் பெரியப்பா, பெரியம்மா இருவரையும் அழைத்துக் கொண்டு செல்கிறார். அப்போது அவர்கள், தாங்கள் செய்த பாவத்திற்கு தான் இப்படி குழந்தை இல்லாமல் கஷ்டப்படுகிறோம் என்றெல்லாம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். அதற்கு முத்து ஆறுதல் சொல்கிறார். பின் ஒரு கோயிலுக்கு போக சொல்வதால் முத்துவுமே அங்கு போகிறார். அந்த இடத்திற்கு லட்சுமியும் கிரிஷும் வந்திருக்கிறார்கள். அதைப் பார்த்து முத்துவிற்கு ஷாக்காக இருக்கிறது.

சீரியல் ட்ராக்:

முத்துவை பார்த்தவுடன் லட்சுமி அங்கிருந்து வேகவேகமாக கிரிஷை அழைத்துக் கொண்டு செல்கிறார். அப்போது கிரிஷ் பெரியப்பா, பெரியம்மா இருவருமே இவர் தான் என் தம்பி பையன். நாங்கள் இவருடைய மனைவியை தான் வீட்டை விட்டு துரத்தி விட்டோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், ரோகினி தான் என்பதை சொல்லவில்லை. பின் இதை பற்றி சொல்ல முத்து வீட்டிற்கு வருகிறார். ட்ரிப்பில் இருந்து ரோகினி, சுருதி எல்லோருமே வந்துவிடுகிறார்கள். அப்போது போனில் மீனாவிடம் கோவிலில் நடந்ததை எல்லாம் முத்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்டு ரோகினிக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் தன் அம்மாவிற்கு ஃபோன் செய்து ரோகினி விசாரிக்கிறார். அவர் அம்மா உண்மையை சொல்வதால் ரோகிணி திட்டிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full