சிந்தாமணியின் சூழ்ச்சியை அறிந்த முத்து, ரோகினி சுயரூபம் வெளிவருமா? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சுருதி, தன்னுடைய ஹோட்டலுக்கு தேவையான பொருட்களை வாங்க மனோஜ் கடைக்கு போனார். அங்கு குறைந்த விலையில் பொருட்களை ஸ்ருதி கேட்டார். மனோஜ்- ரோகினி இருவருமே குறைந்த விலையில் கொடுப்பதால் புலம்பி கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து ரோகினிக்கு போன் செய்த ஸ்ருதி அம்மா, தான் கொடுத்த பணத்தை கேட்டார். ரோகினி, இப்போது என்னிடம் பணம் இல்லை என்று சமாளித்தார். இதனால் ஸ்ருதி அம்மா திட்டி விட்டு பணத்தை சீக்கிரம் கொடுக்க சொன்னார்.
லஞ்சம் வாங்கும் அதிகாரியிடம் செல்வம் பணம் கொடுத்து பூ கடை வைப்பதற்கு பேசி இருந்தார். அந்த அதிகாரியுமே, ஏற்கனவே இருந்த அம்மாவிற்கு அந்த கடை தரமாட்டோம். நீ நான் சொல்லும் பணத்தை தந்து விட்டால் அந்த கடையை தந்து விடுகிறோம் என்றெல்லாம் சொன்னார். இதை முத்து பார்த்துக் கொண்டார். இதைப்பற்றி முத்து உயர் அதிகாரியிடம் பேச வந்தார். ஆனால், அவர் முத்து சொல்வதைக் கேட்கவே இல்லை. அப்போதுதான் டாக்டர் பட்டம் கொடுக்கும் கோகிலா அந்த இடத்திற்கு வந்தார்.
சிறகடிக்க ஆசை:
அவருடைய கணவர் தான் அந்த உயர் அதிகாரி. பின் நடந்ததை எல்லாம் முத்து, கோகிலாவிடம் சொன்னார். பின் கோகிலா, தன்னுடைய கணவரிடம் முத்துவைப்பற்றி எடுத்து சொல்லி புரிய வைத்தார். அதற்கு உயர் அதிகாரி, நீங்கள் சொல்வது போல் நாளைக்கு விசாரிக்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் மீனா, கோவிலுக்கு வருபவர்கள் இடம் தாங்கள் வைத்திருக்கும் கடை, பொருள்களைப் பற்றி எந்த குறையும் இல்லை என்று சொல்லி, கையெழுத்தும் ரெக்கார்டும் வைத்துக் கொண்டார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி சொன்ன ஆட்கள் மீனாவின் வண்டியை எடுத்து சென்று விட்டார்கள்.
சீரியல் ட்ராக்:
பின் கோவிலுக்கு வெளியே வந்த மீனா வண்டியை காணவில்லை என்று ரொம்பவே பதறி அழுதார். பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று மீனா புகார் கொடுக்கப் போனார். அப்போது அருணிடம் நடந்ததை மீனா சொன்னார். அதற்கு அருண், முத்துவை இதில் தோற்கடிக்கனும் என்றெல்லாம் நினைத்தார். இன்னொரு பக்கம் ஸ்ருதி, தன்னுடைய ஓட்டலுக்கு சமைப்பதற்காக செப்புக்கு தேர்வு நடத்திக் கொண்டிருந்தார். அதன் பின் வீட்டில் மனோஜ், தன்னுடைய ஷோரூமின் இன்னொரு பிரான்ச் ஆரம்பிப்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
https://www.youtube.com/watch?v=ImvkFlrTvUA
சீரியல் ப்ரோமோ:
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மீனா, என்னுடைய வண்டி தொலைந்து விட்டது. யார் எடுத்துச் சென்றார்கள் தெரியவில்லை என வருத்தத்துடன் சொல்கிறார். பின் முத்து, சந்தேகப்பட்டு ஒரு கடையில் இருக்கும் ஆட்களை எல்லாம் அடித்து வண்டியை பற்றி விசாரிக்கிறார். அப்போது அங்கு இருந்த நபர், சிந்தாமணி தான் வண்டியை தூக்க சொன்னார் என்ற விஷயத்தை சொல்கிறார். அதற்கு பின் சிந்தாமணியை பார்த்த முத்து, என் மனைவியின் மீனாவின் வண்டியை தூக்க சொன்னது நீதானே என்று கேட்கிறார்.