ரேகாவை காப்பாற்ற களத்தில் இறங்கிய முத்து, சிந்தாமணி என்ன செய்ய போகிறார்? சிறகடிக்க ஆசை

ரேகாவை காப்பாற்ற களத்தில் இறங்கிய முத்து

By subhashini · 16/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சுருதி, எப்படி எல்லாம் யூடியூப் சேனல் தொடங்கனும் என்றெல்லாம் ஐடியா கொடுத்தார். பின் விஜயா, தன்னுடைய நடன வீடியோக்களை போட்டு சேனல் தொடங்குவதாக சொல்கிறார். அதற்குப்பின் மனோஜ் கடையின் வியாபாரம் ரொம்பவே மோசமாக போகிறது. டீலர்கள் எல்லாம் பணத்தை கொடுத்து பொருளை வாங்க சொல்வதால் என்ன செய்வது என்று புரியாமல் மனோஜ் தவித்தார். விஜயாவும் உன்னுடைய மூளையை யூஸ் பண்ணி ஏதாவது செய் என்றார். அதற்குப் பின் கடைக்கு வந்த மனோஜ், ரோகினிக்கு கோர்ட்டில் சொன்னபடி பணம் கொடுப்பதற்கு ஜீவாவை போன் செய்ய சொன்னார். ரோகினி, நான் வெளியில் இருக்கிறேன். மனோஜை வீட்டில் வந்து பணத்தை கொடுக்க சொல் என்றார்.

மனோஜ், ரோகினியின் வீட்டிற்கு சென்றிருந்தார். மனோஜை பார்த்தவுடன் ரோகினி ரொம்பவே சந்தோஷப்பட்டு நலம் விசாரித்து அவருக்கு சாப்பாடு எல்லாம் கொண்டு வந்து தந்தார். மனோஜும் எதுவும் பேசாமல் சாப்பிட்டார். அப்போது ரோகிணி, நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன். என்னையும் புரிந்து கொள். நாம் இருவரும் சேர்ந்து வாழலாம் என்றார். மனோஜ், அதெல்லாம் நடக்காது. நான் உன்னுடைய பணத்தை 5 லட்சத்தை திருப்பி தந்து விடுகிறேன். நீ எனக்கு விவாகரத்து நோட்டீஸ் கையெழுத்து போட வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். கடைசியில் ரோகினி, நீ பணத்தை கொண்டு வா நான் நோட்டீசில் கையெழுத்து போட்டு விடுகிறேன்.

சிறகடிக்க ஆசை:

ஒருவேளை நீ உன்னுடன் சேர்ந்து வாழ நினைத்தால் என்னுடைய வீட்டிற்கு வந்துவிடு என்றெல்லாம் சொன்னார். மனோஜ் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் நீத்து, சுருதி திருமணம் செய்து கொள்ள நினைத்த நபருடன் பேசிக் கொண்டிருந்தார். நீத்து, சுருதியை பழிவாங்க வேண்டும். எனக்கு ரவி கிடைக்க வேண்டும். அதற்கு நீங்கள் தான் உதவி செய்ய செய்யணும் என்றார். அந்த நபருமே கண்டிப்பாக நான் சுருதியை சும்மா விடமாட்டேன். நீ ரவியை கல்யாணம் செய்து கொள். சுருதியை நான் கவனித்துக் கொள்கிறேன் என்றெல்லாம் வில்லத்தனமாக திட்டம் போட்டார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி சொன்ன விஷயத்தை எல்லாம் மனோஜ், விஜயாவிடம் சொல்கிறார். ஆரம்பத்தில் விஜயா, ரோகினி வீட்டுக்கு சென்றதற்கு கோபப்பட்டாலும், விவாகரத்திற்கு கையெழுத்து போடும் விஷயம் அறிந்தவுடன் சந்தோஷப்படுகிறார். அதோடு 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டிருக்கிறார் என்று மனோஜ் சொன்னவுடன் விஜயா கோபப்படுகிறார். விஜயா பணமெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்கிறார். மனோஜ், அவ்வளவு பணத்திற்கு நான் எங்கே போவது என்று நாடகம் போடுகிறான். முத்து- ரவி இருவரும் உன்னுடைய பிரச்சனைக்கான பணத்தை நீதான் ஏற்பாடு செய்யணும். இந்த வீட்டை மீட்க்கும்போது நாங்கள் பணம் கேட்டதற்கு முடியாது தானே என்று சொன்னாய் என்றார்கள்.

சீரியல் ட்ராக்:

அண்ணாமலை, முத்துவிற்கு சப்போர்ட் செய்கிறார். விஜயா, மனோஜ் இருவரும் என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சத்யாவிற்கு ஃபோன் செய்த ரேகா, தன்னை அடைத்து வைத்திருக்கும் விஷயத்தை பற்றி சொல்கிறார். சத்யா இதைப் பற்றி முத்துவிடம் சொல்கிறார். ரேகாவிடம் முத்து, நீ உடம்பு சரியில்லாதது போல மயங்கி விழு. உன்னை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருவார்கள். அங்கு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார். முத்து சொன்னதை போலவே ரேகாவும் நடிக்கிறார். சிந்தாமணியின் கணவர் ஹாஸ்பிடலில் சேர்க்கிறார். இதை அறிந்த சிந்தாமணி, இதெல்லாம் முத்துவுடைய பிளான். ரேகா நம் கையை விட்டு போனால் ஒன்னும் செய்ய முடியாது என்று கொந்தளிக்கிறார். இன்னொரு பக்கம் முத்து, சத்யா இருவருமே ஆம்புலன்ஸ் மூலமாக ரேகாவை அழைத்து வருவதாக திட்டம் போடுகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full