ரேகாவை கெட்ச் போட்டு தூக்கிய முத்து, சிக்கி கொண்டாரா மீனா? சிறகடிக்க ஆசை

ரேகாவை கெட்ச் போட்டு தூக்கிய முத்து

By subhashini · 17/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி, ஒருவேளை நீ உன்னுடன் சேர்ந்து வாழ நினைத்தால் என்னுடைய வீட்டிற்கு வந்துவிடு என்றெல்லாம் சொன்னார். மனோஜ் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் நீத்து, சுருதி திருமணம் செய்து கொள்ள நினைத்த நபருடன் பேசிக் கொண்டிருந்தார். நீத்து, சுருதியை பழிவாங்க வேண்டும். எனக்கு ரவி கிடைக்க வேண்டும். அதற்கு நீங்கள் தான் உதவி செய்ய செய்யணும் என்றார். அந்த நபருமே கண்டிப்பாக நான் சுருதியை சும்மா விடமாட்டேன். நீ ரவியை கல்யாணம் செய்து கொள். சுருதியை நான் கவனித்துக் கொள்கிறேன் என்றெல்லாம் வில்லத்தனமாக திட்டம் போட்டார்கள்.

ரோகினி சொன்ன விஷயத்தை எல்லாம் மனோஜ், விஜயாவிடம் சொன்னார். ஆரம்பத்தில் விஜயா, ரோகினி வீட்டுக்கு சென்றதற்கு கோபப்பட்டாலும், விவாகரத்திற்கு கையெழுத்து போடும் விஷயம் அறிந்தவுடன் சந்தோஷப்பட்டார். அதோடு 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டிருக்கிறார் என்று மனோஜ் சொன்னவுடன் விஜயா கோபப்பட்டார். விஜயா பணமெல்லாம் கொடுக்க முடியாது என்றார். மனோஜ், அவ்வளவு பணத்திற்கு நான் எங்கே போவது என்று நாடகம் போடுகிறான். முத்து- ரவி இருவரும் உன்னுடைய பிரச்சனைக்கான பணத்தை நீதான் ஏற்பாடு செய்யணும். இந்த வீட்டை மீட்க்கும்போது நாங்கள் பணம் கேட்டதற்கு முடியாது தானே என்று சொன்னாய் என்றார்கள்.

சிறகடிக்க ஆசை:

அண்ணாமலை, முத்துவிற்கு சப்போர்ட் செய்தார். விஜயா, மனோஜ் இருவரும் என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தார்கள். இன்னொரு பக்கம் சத்யாவிற்கு ஃபோன் செய்த ரேகா, தன்னை அடைத்து வைத்திருக்கும் விஷயத்தை பற்றி சொன்னார். சத்யா இதைப் பற்றி முத்துவிடம் சொன்னார். முத்து, நீ உடம்பு சரியில்லாதது போல மயங்கி விழு. உன்னை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருவார்கள். அங்கு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார். முத்து சொன்னதை போலவே ரேகாவும் நடிக்க, சிந்தாமணியின் கணவர் ஹாஸ்பிடலில் சேர்த்தார். இதை அறிந்த சிந்தாமணி, இதெல்லாம் முத்துவுடைய பிளான். ரேகா நம் கையை விட்டு போனால் ஒன்னும் செய்ய முடியாது என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா டாக்டர் வேடத்திலும், முத்து- சத்யா- செல்வம் மூவருமே கம்பவுண்டர் கெட்டப்பிலும் ஹாஸ்பிடலுக்கு செல்கிறார்கள். ரேகாவின் ரூமுக்கு வெளியே பயங்கரமாக பாதுகாப்பிற்க்கு ஆட்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் மீறி முத்து, மீனா, சத்யா உள்ளே செல்கிறார்கள். ரேகாவை அழைத்துக் கொண்டு வெளியே வரும்போது பல தடைகள் வருகிறது. இருந்தாலும் அதை எல்லாம் எதிர்த்து முத்து, ரேகாவை ஆம்புலன்சில் அழைத்துக்கொண்டு செல்கிறார். அப்போது வந்த ரேகாவின் அப்பா தன் மகளை காணவில்லை என்று பதறுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதோடு அடியாட்களை எல்லாம் முத்து மயக்க மருந்து கொடுத்து மயங்கி கீழே விழ வைத்திருக்கிறார். அதை பார்த்து ரேகாவின் அப்பா பயங்கரமாக கோபப்படுகிறார். ரேகா, சத்யா இருவரையும் முத்து தன்னுடைய பாட்டியின் வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார். பாட்டியிடம் முத்து, ரேகா -சத்யாவின் காதலைப் பற்றியும் அதனால் வந்த பிரச்சனை எல்லாம் சொல்கிறார். பாட்டி, அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். தைரியமாக இருங்கள் என்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full