வீடு கட்ட முத்து போட்ட பிளான், மனோஜ் செய்த வேலையால் கொண்டாடும் விஜயா-விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் கடைக்கு பேங்கில் வந்த ஒருவர், உங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கிரெடிட் ஆகி இருக்கிறது என்ற சொன்னவுடன் மனோஜ் சந்தோஷத்தில் ரோகினி பேச்சை கூட கேட்காமல் கையெழுத்து போட்டு கொடுத்தார். பின் ரோகினி தன்னுடைய தோழியுடன் ஹாஸ்பிடலுக்கு சென்று தனக்கு குழந்தை பிறக்குமா? என்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு இருந்தார். இதை பார்த்த சீதா, மீனாவிடம் சொல்ல, அவர் ரோகினி கர்ப்பமாக இருக்கிறார் என்று நினைத்து கொண்டு ஸ்வீட் செய்து கொடுத்து ரோகினி கர்ப்பம் என்று சொல்லி இருந்தார்.
உடனே வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டு இருந்தார்கள். ஆனால், ரோகினி அதிர்ச்சியாகி, நான் கர்ப்பமாகவே இல்லை என்று கோபமாக பேசி இருந்தார். அதன் பின் ரவி, தான் வேலை செய்யும் இடத்தில் திருமணம் ஆன ஜோடிகளுக்கு போட்டி நடப்பதாக சொல்லி இருந்தார். எல்லா ஜோடிகளும் போட்டியில் கலந்து இருந்தார்கள். ஒவ்வொருவருமே தங்களைப் பற்றி அறிமுகம் செய்து இருந்தார்கள். பின் ஒவ்வொரு பெண்களும் தங்களுடைய தனித்திறமையை காண்பித்தார்கள். அந்த வகையில் மீனா, கண்ணை கட்டிக்கொண்டு வேகமாக பூ கட்டி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
அதற்குப் பின் ஒவ்வொரு ஜோடியையும் மேடையில் அமர வைத்து தங்கள் மனதில் தோன்றும் விஷயத்தை பேச சொன்னார்கள். அப்போது மீனா- முத்து பேசியதை கேட்டு அரங்கமே கைதட்டி இருந்தது. அதற்குப் பின் ஒவ்வொருவரின் சம்பளத்தை பற்றி கேட்க மனோஜ் திமிராக பேசி இருந்தார். சுருதி-ரவி, முத்து- மீனா இருவருமே தங்களுடைய சம்பளத்தையும், அதற்கு செலவு செய்யும் விதத்தையும் பற்றி கூறியதைக் கேட்டு நடுவர்களே கிளாப் செய்திருந்தார்கள். மூன்றாவது சுற்றில், சந்தோசமாக வாழ்வதற்கு என்ன தேவை என்ற சொன்னவுடன் ஒவ்வொரு ஜோடியும் தனித்தனியாக டிஸ்கஸ் செய்தார்கள்.
சீரியல் கதை:
அப்போது மனோஜ் வழக்கம் போல் குருட்டுத்தனமாக யோசித்து ரோகினி இடம் சொல்வதை நடுவர்கள் கேட்டு இருந்தார்கள். இறுதியில் வெற்றியாளர் குறித்து சொல்லும் போது, நாங்கள் தானே என்று மனோஜ் ஆணவமாக பேசியதால், அவர் ரோஹினியிடம் ரகசியமாக பேசி இருந்த ஃபுட்டேஜை நடுவர்கள் போட்டு காண்பித்தவுடன் அவருக்கு முகமே இல்லை. கடைசியில் மீனா- முத்து தான் வெற்றி பெற்றார்கள் என்று அறிவித்தார்கள். வீட்டில் ஸ்ருதி- ரோகினி ஜோடிக்கு வெற்றி இல்லை என்றவுடன் விஜயாவருத்தப்பட்டார்.
நேற்று எபிசோட்:
அந்த சமயம் முத்து- மீனா மாலையும், மேல தாளத்துடன் வந்தவுடன் அவருக்கு முகமே மாறிவிட்டது.
நேற்று எபிசோடில், முத்து மேல தாளத்தில் பயங்கரமாக நடனமாடி இருந்தார். இதை பார்த்து மனோஜ், விஜயாவிற்கு பயங்கர கோபம் வந்தது. பின் தாங்கள் வெற்றி பெற்ற பணத்தை அப்பாவிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கி அங்கு நடந்ததை சொல்லி இருந்தார்கள் முத்து-மீனா. அப்போது கணவன், மனைவிக்கிடையே சண்டை வரவில்லை என்றால் இருவரும் ஏதோ மறைக்கிறார்கள் என்று நடுவர் சொன்னதாக முத்து சொன்னதை கேட்டு விஜயாவிற்கு ரோகினி மேல் சந்தேகம் வருகிறது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், ஒவ்வொரு ஜோடியும் போட்டியில் நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்போது மீனா -முத்து வந்த பணத்தை வைத்து வீடு கட்டுவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். மறுநாள் மேஸ்திரியை கூட்டிட்டு வந்து எவ்வளவு பணமாகும், என்னென்ன பண்ணலாம் என்று முத்து பிளான் போடுகிறார்கள். வீடு கட்ட 4 லட்சம் ஆகும், கையில் வைத்துக் கொண்டுதான் கட்ட வேண்டும் என்று சொன்னவுடன் இருவரின் முகமும் மாறிவிடுகிறது. இறுதியில் மனோஜ் தன்னுடைய மனைவிக்கு தாலி கொடி, துணி எல்லாம் வாங்கி வந்து கொடுத்தார். இதை பார்த்து விஜயா சந்தோசப்பட முத்து கிண்டல் செய்கிறார்.இத்துடன் சீரியல் முடிகிறது.