முத்து செய்த வேலையால் டிராபிக் போலீஸ் அருணுக்கு நடந்த விபரீதம், அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் மீனா- முத்து இருவருமே பவானி வேலை செய்த இடத்தில் விசாரித்தார்கள். பின் இருவருமே பவானியின் வீட்டில் அவருடைய பெற்றோர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்தார்கள். அப்போது பவானி வீட்டில் பேச மலேசியா மாமா வந்தார். ஆனால், அவர் உள்ளே வராமல் சென்று விட்டார். அதற்குப்பின் முத்து-மீனா, பவானியின் காதலன் வீட்டிற்கு சென்று நிலைமையை சொல்லி புரிய வைத்தார்கள். நல்லபடியாக பவானியின் காதலுக்கு இரண்டு வீட்டாருமே சம்மதித்து விட்டார்கள்.
பின் சிந்தாமணி, விஜயாவை பார்க்க வந்திருந்தார். அப்போது அவர், உங்கள் மருமகளை கைக்குள் வைக்க தெரியவில்லை. உங்களுக்கு திறமை இல்லை என்றெல்லாம் விஜயாவை உஸ்பேத்தி விடும் அளவிற்கு பேசி இருந்தார். இதனால் கொந்தளித்த விஜயா, எப்படியாவது மீனா பூக்கடையை போடா விடாமல் தடுக்கணும் என்று ஆவேசப்பட்டார். இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவருமே பவானியை அவருடைய வீட்டிற்கு அழைத்து போனார்கள். முத்து-மீனா சென்ற பிறகு மலேசியா மாமா, மாப்பிள்ளை வீட்டு சார்பாக வந்து பவானி வீட்டில் பேசி இருந்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் மனோஜிக்கு போன் செய்த சந்தோஷி, மலேசியாவில் ஆர்டர் விஷயமாக உங்கள் மாமனாரிடம் விசாரித்து சொல்லுங்கள் என்று கேட்டார். ஆனால், மனோஜ் ஏதோ காரணங்களை சொல்லி சமாளித்துவிட்டார். பின் மனோஜ், இதைப் பற்றி ரோகினி இடம் சொல்ல, அவர் என்ன சொல்வது என்று புரியாமல் தவித்தார். உங்கள் மாமாவிடம் சொல்லி சந்தோஷிக்கு உதவி செய்ய சொல்லு என்று மனோஜ் கேட்க, ரோகினி பார்த்து கொள்ளலாம் என்று ட்ராக்கை மாற்றி விட்டார். இன்னொரு பக்கம் ஸ்ருதி, ரவி வேலை செய்யும் ஹோட்டலில் வைட்டராக வேலை செய்து கொண்டிருந்தார். ஆனால், அவரால் அந்த வேலையை சமாளிக்க முடியவில்லை.
நேற்று எபிசோட்:
பின் டிராபிக் போலீஸ் அருண் விதியை மீறி நோ பார்க்கிங்கில் பைக்கை நிறுத்தி இருந்தார். இதை பார்த்த முத்து, அவருடைய வண்டிக்கு பூட்டு போட்டு விட்டார். அதற்கு பின் வந்த அருண், வண்டியை எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டார். உடனே முத்து, சாவி என்னிடம் இருக்கிறது என்று சொன்னவுடன் இருவருக்கும் சண்டை வந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அருணுக்கு எதிராக முத்துவுக்கு ஆதரவாக பேசியவுடன் அவரால் எதுவுமே பேச முடியாமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து வீட்டிற்கு வந்த பவானி அப்பா, பவானிக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டது.
இன்றைய எபிசோட்:
மீனா, முத்து இல்லை என்றால் இந்த திருமணம் நடக்காது. நீங்கள் எல்லோரும் குடும்பத்துடன் வந்து திருமணத்தை நடத்தி கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். இதையெல்லாம் பார்த்து விஜயாவிற்கு கோபம் தான் வருகிறது. வழக்கம்போல் அவர் நக்கலாக பேசுகிறார். இன்னொரு பக்கம் முத்து, ட்ராபிக் போலீஸ் அருண் செய்த வேலையை வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் போட்டு இருக்கிறார். இதனால் எஸ் ஐ, அருணை வரவைத்து வார்னிங் கொடுத்து மூன்று நாள் சஸ்பெண்ட் பண்ணுகிறார். இதனால் அருணுக்கு பயங்கர கோபம் வருகிறது.
சீரியல் ட்ராக்:
பின் அவர், இந்த வேலையை மட்டும் செய்தது யார் என்று தெரிந்தால் சும்மா விடமாட்டேன் என்று பொங்குகிறார். ஆனால், முத்து மீது அருண் சந்தேகப்படுகிறார். இன்னொரு பக்கம் வித்யா, தன்னுடைய காதலுக்காக மீனா விடம் ஐடியா கேட்கிறார் .இதையெல்லாம் பார்த்து ரோகினிக்கு பயங்கர கோபம் வருகிறது. அதற்குப் பின் சீதா, அருண் வீட்டிற்கு சென்று அவருடைய அம்மாவை பற்றி நலம் விசாரிக்கிறார். ஆனால், ஏதோ மன கஷ்டத்தில் அருண் இருக்கிறார் என்று அவர் அம்மா சொல்ல, சீதா விசாரிக்கிறார். ஆனால், அருண் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.