கிரிஷை சிறார் பள்ளிக்கு போவதை தடுத்தாரா முத்து? வசமாக சிக்கி கொண்ட மனோஜ் - சிறகடிக்க ஆசை

By subhashini · 18/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, நான் பாட்டியுடன் இருக்கிறேன் வரமாட்டேன் என்று அடம் பிடித்தார். இருந்தாலுமே வலுக்கட்டாயமாக விஜயா, முத்துவை அழைத்துக் கொண்டு போனார். வீட்டில் மனோஜ் வேண்டும் என்று முத்துவை வெறுப்பேற்றி பேசிக் கொண்டிருந்தார். இதனால் கோபத்தில் முத்து தட்டை தூக்கி எறிந்து விட்டார். முத்துவிற்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. உடனே விஜயா, முத்துவிற்கு காலில் சூடு போட்டு விட்டார். வேதனையில் முத்து தன்னுடைய பாட்டிற்கு ஃபோன் செய்து அழுது புலம்பினார்.

மனோஜ் ஒவ்வொரு பிரச்சனையையும் செய்துவிட்டு அதை முத்துமேல் பழி போட்டு விட்டார். இதனால் கோபத்தில் விஜயா, என்ன என்று கூட விசாரிக்காமல் முத்துவை தான் அடித்தார். பின் மனோஜ் வீட்டில் மட்டுமில்லாமல் பள்ளியிலுமே படிக்கும் மாணவர்களுடன் பிரச்சனை செய்துவிட்டு முத்து மீது பழி போட்டு விட்டார். பின் பள்ளியில் தன்னைவிட அதிகமாக மதிப்பெண் எடுத்த மாணவனை மனோஜ் கல் எடுத்து அடிக்க போனார். அந்த சமயம் பார்த்து ஹெட்மாஸ்டர் தலையில் விழுந்ததால் மனோஜ் ஓடி விட்டார். முத்து தான் இதை செய்தான் என்று எல்லோரிடமும் மனோஜ் வீண் பழி சுமத்தி விட்டார். இதனால் கோபத்தில் விஜயாவுமே முத்துவை தான் அடித்தார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் முத்துவை சிர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பப் போவதாக பள்ளிக்கூடத்தில் சென்னார்கள். பின் வீட்டில் நடந்ததை விஜயா, அண்ணாமலையிடம் சொன்னார். முத்து, தன்மீது எந்த தவறும் இல்லை என்று சொல்லியுமே விஜயா நம்பவில்லை. அந்த சமயம் பார்த்து சீர்திருத்த பள்ளியில் இருந்து முத்துவை அழைத்துப் போக வந்தார்கள். அண்ணாமலை கெஞ்சி கேட்டுமே அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. அப்போது விஜயா, அவனை அழைத்துப் போகட்டும் விடுங்கள் என்று சொல்வதால் முத்து உடைந்து போய்விட்டார். இதையெல்லாம் முத்து, மீனாவிடம் சொல்லி ரொம்ப எமோஷனலாக கதறி அழுதார். மறுநாள் காலையில் பள்ளிக்கு அடிபட்ட அந்த சிறுவனின் அப்பா கிரிஷிடம் கேள்வி கேட்க வந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கிரிஷிக்கு அந்த சிறுவனின் அப்பா சில டெஸ்ட் வைக்கிறார். அதில் கிரிஷுமே வெற்றி பெற்று விடுகிறார். அந்த சிறுவன் அப்பா, கிரிஷ் தெரியாமல் தான் தவறு செய்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டேன். கிரிஷை சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்த மாட்டேன் மன்னித்துவிடுகிறேன் என்று சொல்கிறார். இதனால் முத்து-மீனா இருவருமே ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். அந்த சிறுவனும் கிரிஷும் நல்ல நண்பர்கள் ஆகிவிடுகிறார்கள். பின் ஸ்கூளில் நடந்ததை முத்து, அண்ணாமலையிடம் போன் பண்ணி சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதை எல்லாம் கேட்ட விஜயா வழக்கம் போல முத்துவை திட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் ஸ்கூளில் நடந்ததை மகேஸ்வரி, ரோகினி இடம் சொல்கிறார். அதற்கு வித்யா, முத்து- மீனாவிடமே கிரிஷ் வளரட்டும் என்கிறார். இதனால் கோபப்பட்டு ரோகினி, வித்யாவை திட்டுகிறார். அதற்கு பின் தன் அம்மாவிடம் போன் செய்து ஒரு புது ட்ராமாவை போடுகிறார் ரோகினி. இன்னொரு பக்கம் ராணி, மனோஜின் ஷோரூமுக்கு வந்து நல்லவள் போல பேசுகிறார். மனோஜூம் ராணியை தன் வலையில் சிக்க வைப்பதாக நினைத்து அவள் சொல்வதற்கெல்லாம் சரி என்கிறார். கடைசியில் ராணி வலையில் மனோஜ் வசமாக மாட்டி கொண்டார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full