விஜயாவின் பித்தலாட்ட வேலையை அறிந்து முத்து கொடுத்த தக்லைப் - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், ராணியிடம் அன்பாக பேசியது எல்லாம் வீடியோ எடுத்து விட்டார். அப்போது வந்த ராஜா, உண்மையிலேயே எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. நீ என் மனைவியிடம் அன்பாக பேசியது ஆதாரமாக இருந்தது. இதை வைத்து உன்னை என்ன செய்யப் போகிறேன் பார் என்றெல்லாம் சொன்னார். இதைக் கேட்டு மனோஜ் ஷாக் ஆகி நின்றார். இன்னொரு பக்கம் விஜயா, கிரிஷ் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பாமல் தானே தடுத்து நிறுத்தியது போல தன்னுடைய யோகா கிளாஸில் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதை பார்த்து கடுப்பான மீனா, ஆமாம் என்னுடைய அத்தை தான் கிரிஷை காப்பாற்றினார் என்று விஜயா செய்த வேலையை மறைமுகமாக சுட்டிக் காட்டி இருந்தார். பின் மீனாவை தனியாக அழைத்து சென்று திட்டி அனுப்பி விட்டார். இதுதான் சந்தர்ப்பம் என்று சிந்தாமணி, மீனாவை பற்றி தப்பு தப்பாக விஜயாவிடம் போட்டுக் கொடுத்தார். பின் கிரிசை அழைத்து செல்வதற்கு அவருடைய பாட்டி லட்சுமி, மீனாவின் அம்மா வீட்டிற்கு வந்திருந்தார். இதை அறிந்து சென்ற முத்து-மீனாவை லட்சுமி திட்டி விட்டார். கடைசியில் லட்சுமி, கிரிஷை அழைத்து செல்கிறேன் என்றார். இதைக் கேட்ட மீனா ஷாக் ஆனார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் கிரிஷ் பாட் டி, முத்து ஒரு ரவுடி. அவனிடம் கிரிஷ் இருந்தால் குணம் மாறிவிடும் என்றெல்லாம் ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதைக் கேட்டு முத்து ரொம்பவே உடைந்து போனார். கோபத்தில் மீனா, கிரிஷ் பாட்டியை திட்டிக் கொண்டிருந்தார். கடைசியில் லக்ஷ்மி, கிரிஷை அழைத்துக் கொண்டு வித்யாவின் வீட்டுக்கு வந்து விட்டார். அங்கு முத்து-மீனாவை திட்டியதை நினைத்து லட்சுமி ரொம்பவே அழுது புலம்பி கொண்டிருந்தார். ஆனால், ரோகிணி அதை பற்றி பெரிதாக கண்டு கொள்ளவில்லை. வழக்கம்போல முத்து- மீனா இருவரை பற்றி திட்டி கொண்டு இருந்தார்.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் வீட்டில் முத்து-மீனா இருவரும் கிரிஷ் பாட்டி வந்து சென்றதைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதனால் மனோஜ், முத்துவை குறை சொன்னார். அதற்குப்பின் மனோஜ், கடையில் ராணி செய்த வேலையை பற்றி சொன்னார். ரவி- முத்து எல்லோருமே திட்டினார்கள். அதற்கு மனோஜ், என்னுடைய பிரச்சினை பார்த்துக் கொள்ள தெரியும் என்றார். அதற்கு பின் முத்து, தன் நண்பர்களிடம் பேசி கொண்டு இருந்தார். அப்போது முத்து நண்பர் அப்பா ஆன செய்தியை சொல்லி சந்தோசப்பட்டார்.
https://www.youtube.com/watch?v=jcsm2_Syi7c
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் விஜயா, டாக்டர் பட்டத்திற்காக செய்யும் வேலைகள் எல்லாம் முத்து அறிந்து கொள்கிறார். தவறான வழியில் விஜயா டாக்டர் பட்டத்தை வாங்குவதை தடுக்க வேண்டும் என்று மீனாவிடம் சொல்கிறார். அதற்குப்பின் விஜயாவிற்கு டாக்டர் பட்டமும் கொடுக்கிறார்கள். அப்போது வந்த முத்து, விஜயா செய்த வேலைகள் எல்லாம் வீடியோவாக காண்பிக்கிறார். உடனே அந்த டாக்டர் பட்டம் கொடுப்பவர், விஜயாவை திட்டி விட்டு செல்கிறார். அதனால் விஜயா பயங்கர கோபத்தில் கொந்தளிக்கிறார்.