விஜயாவின் பிரச்சனையை தீர்த்து வைத்த முத்து, அசிங்கப்பட்ட மனோஜ், ரோகினி - சிறகடிக்க ஆசை

By subhashini · 28/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரதி பெற்றோர், எல்லாத்துக்கும் காரணம் இந்த விஜயா தான். வகுப்பை எடுப்பதை விட்டு தேவையில்லாத வேலை எல்லாம் செய்கிறார் என்று இன்னும் கோபப்பட்டு திட்டினார்கள். இதனால் முத்து, ரதியின் குடும்பத்தை சமாதானப்படுத்தி இந்த பிரச்சினையை நான் தீர்க்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார். விஜயாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். பின் அண்ணாமலை, இந்த பிரச்சனையை முத்துவால் தான் தீர்க்க முடியும். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே என்று சொன்னார். உடனே முத்து, என் உயிரை கொடுத்தாவது உங்களை நான் காப்பாற்றுவேன் என்று ரொம்ப எமோஷனலாக பேசினார்.

முத்து, க்ரிஷ் அவருடைய பாட்டியை பார்க்க போகணும் என்று சொல்கிறான். யார் அழைத்து செல்வது என்று கேட்டார். உடனே விஜயா, ரோகினியை பார்த்து இதை போற வழியில் எங்கேயாவது தொலைத்திட்டு வா. பிரச்சனை முடியும் என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதனால் அண்ணாமலை- முத்து இருவருமே கோபப்பட்டு விஜயாவை திட்டினார்கள். அதற்குப்பின் முத்துவிடம் மீனா, பார்வதி ஆண்டியிடம் நான் ரதியை காதலித்தவன் நம்பரை வாங்கித் தருகிறேன் என்று சொன்னார். இன்னொரு பக்கம் கிரிஷை அழைத்துக் கொண்டு ரோகினி தன்னுடைய அம்மாவை பார்க்க போனார். அங்கு கிரிஷ், எனக்கு அந்த வீடு ரொம்ப பிடித்திருக்கிறது.

சிறகடிக்க ஆசை:

அங்கு ஜாலியாக இருக்கிறது என்றெல்லாம் பேசி இருந்தார். அதற்கு ரோகினி, ஒவ்வொரு நாளும் இவனை நினைத்து பயமாக இருக்கிறது. மாட்டிக்கொள்வானா தெரியல? எப்படியாவது உன்னை வீட்டுக்கு அழைத்து போகணும் என்றெல்லாம் சொன்னார். அதற்குப்பின் விஜயாவை பார்ப்பதற்காக பார்வதி, சிந்தாமணி இருவருமே வந்தார்கள். அப்போது சிந்தாமணி, விஜயாவை பயமுறுத்தும் மாதிரியே பேசி இருந்தார். உடனே மீனா, என் கணவர் இருக்கும்போது யாரும் எதுவும் செய்ய முடியாது என்று சொன்னார். பின் சிந்தாமணி, முத்து- மீனா இருவரையுமே ஏளனமாக பேச, ஸ்ருதி சப்போர்ட் செய்தார். பின் சிந்தாமணி சென்ற பிறகு ஸ்ருதியின் அம்மா, விஜயாவிடம் நலம் விசாரித்தார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோடில் ஸ்ருதியின் அம்மா, இங்கிருந்தால் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். கேரளாவில் எங்களுக்கு சொந்தமான போட்ஹவுஸ் இருக்கிறது. அங்கு சென்று விடுங்கள் என்று சொன்னார். உடனே ரவி, அதெல்லாம் தேவையில்லை. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னார். இன்னொரு பக்கம் ஷோரூமில் மனோஜ் எல்லோரிடமே எரிந்து விழுந்து கொண்டிருந்தார். இதை பார்த்த ரோகினி, அத்தைக்கு இருக்கும் பிரச்சனையை நாம் தீர்த்து வைக்கலாம். இதனால் அத்தை மனசு மாறி நம் இருவரையும் ஏற்றுக்கொள்வார் என்றெல்லாம் சொல்ல, மனோஜூம் சரி என்றார். இன்னொரு பக்கம் மீனா, தீபன் இடம் பேசி வர வைத்தார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் ரதியின் வீட்டிற்கு சென்ற மனோஜ், இந்த குழந்தையை கலைத்துவிட்டு. ரதிக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கலாம் என்று ஏடாகூடமாக பேசினார். இதைக் கேட்ட ரதி குடும்பத்தினர் மனோஜை அடித்து கட்டிப்போட்டு வைத்தார்கள். என்ன செய்வதென்றே புரியாமல் ரோகினி அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் மீனா சொன்ன இடத்திற்கு வந்த தீபன், முத்துவை அடி வெளுத்து வாங்கினார். அப்போது தீபன், நான் ரதியை உண்மையாக காதலிக்கிறேன். ஆனால், என்னுடைய வீட்டில் தான் ஒத்துக் கொள்ளவில்லை என்று சொன்னார். இதனால் முத்து, உன்னுடைய அப்பா- அம்மாவை ரதி வீட்டிற்கு வரச்சொல்லி நான் சொல்வதைப் போல் செய் என்று சொன்னார்.

https://www.youtube.com/watch?v=mOs4UHxiMYE

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையின் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் முத்து-மீனா இருவருமே ரதியின் வீட்டிற்கு சென்று ரதி - தீபன் இருக்குடும்பத்தினரையும் பேச வைக்கிறார்கள். ஆனால், இருவருமே பயங்கரமாக சண்டை போடுகிறார்கள். ஒரு கட்டத்தில் கோவப்பட்ட முத்து, பேசி முடிவெடுக்கலாம் தேவையில்லாமல் சண்டை போட வேண்டாம் என்று சொல்கிறார். பின் தீபன்- ரதி இரு குடும்பமே பேசி இருவருக்குமே திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்கள். அதற்குப்பின் ரதியின் பெற்றோர்கள், முத்துவிற்கு நன்றி சொல்லி மனோஜ் செய்த வேலையை சொல்கிறார்கள். பின் ரூமில் மனோஜை கட்டிப்போட்டு இருப்பதை பார்த்து முத்து கழட்டி விடுகிறார். பின் மனோஜ், ரோகிணி சொன்னதால்தான் நான் இங்கு வந்தேன். தயவுசெய்து வெளியில் சொல்லாதே என்றார். அதற்கு முத்து, இதை சொன்னால் எனக்கு தான் அசிங்கம் என்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full