அண்ணாமலையை வீட்டிற்கு வர வைக்க முத்து எடுத்த சபதம், ரோகினி போடும் திட்டம் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, என்ன பிரச்சனை? என்றார். அதற்கு ரோகிணி, மனோஜ் கடன் தொல்லை என்றெல்லாம் பொய் சொல்லி சமாளித்து விட்டார். மறுநாள் காலையில் அண்ணாமலை தன்னுடைய நண்பர், வக்கீல் எல்லாம் வீட்டிற்கு வர வைத்து சொத்தை நான்கு பங்காக பிரிப்பது பற்றி பேசி இருந்தார். முத்து-மீனா, சுருதி- ரவி எல்லோருமே வேண்டாம் என்று தடுத்தார்கள். மனோஜ், யாரும் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம். சொத்தை பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.
முத்து- ரவி இருவரும் சொத்தை பிரிக்க வேண்டாம் என்றார்கள். மனோஜ் சொத்தை பிரிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். வக்கீல், இப்படி எல்லோருமே மாற்றி மாற்றி சொன்னால் சொத்தை பிரிக்க முடியாது. பிரச்சனை வரும் என்றார். கடைசியில் மனோஜ், சொத்தை பிரிக்க முடியாது என்றால் நான் கோர்ட்டின் மூலம் சந்தித்துக் கொள்கிறேன் என்று சொல்வதால் வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆனார்கள். கோபத்தில் முத்து, மனோஜை அடித்தார். இருவருக்கும் இடையே கலவரம் அதிகமாகிறது. ஒரு கட்டத்தில் அண்ணாமலை, முத்துவை அமைதியாக சொல்லிவிட்டு சொத்தை பிரிப்பதற்கு ஏற்பாடு செய்ய சொன்னார்.
சிறகடிக்க ஆசை:
மறுநாள் காலையில் வீட்டில் அண்ணாமலை இல்லை என்று எல்லோருமே தேடினார்கள். பின் அண்ணாமலை எழுதிய கடிதத்தை பார்த்த மீனா படித்தார். அதில், என்னை யாரும் தேட வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றிருந்தார். இதை பார்த்து விஜயா ரொம்பவே பதறிப் போய் மனோஜை திட்டி இருந்தார். முத்து, ரவி இருவரும் அண்ணாமலை தேடி போனார்கள். ஆனால், மனோஜ் மட்டும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அமைதியாக இருந்தார். ரோகிணி, எதற்காக சொத்தை பிரிக்க சொன்னாய் என்றார். கோபத்தில் மனோஜ், உன்னால் தான் இந்த பிரச்சனை என்று கோபப்பட்டு சண்டை போட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வீட்டில் உள்ள எல்லோருமே அண்ணாமலை காணவில்லை என்று ரொம்ப கவலையில் இருக்கிறார்கள். முத்து- மீனா இருவரும் அண்ணாமலை தேடி செல்கிறார்கள். அப்போது முத்து, அண்ணாமலையின் நண்பர் வீட்டிற்கு மீனாவை அழைத்துக் கொண்டு போகிறார். பின் முத்து, நான் வந்தால் அவர் உண்மையை சொல்ல மாட்டார். நீயே பேசு என்று மீனாவை அனுப்பி வைக்கிறார். அண்ணாமலை நண்பர், உண்மையை சொல்லாமல் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். இருந்தாலும் மீனாவிற்கு அண்ணாமலை நண்பர் மீது சந்தேகம் வருகிறது.
சீரியல் ட்ராக்:
பின் அண்ணாமலை நண்பர் சாப்பாடு எடுத்து கொண்டு போகும் போது பின்தொடர்ந்து முத்து வருகிறார்.
அண்ணாமலை, தன் நண்பருக்கு போன் செய்து சாப்பாடு வேண்டாம் என்கிறார். பாதி வழியிலேயே அண்ணாமலையின் நண்பர் திரும்பி வருகிறார். பின் முத்து, அவரை நிறுத்தி விசாரிக்கிறார் அப்போது முத்து,
என் அப்பா இருக்கும் இடம் உங்களுக்கு தெரியும் என்று எனக்கு தெரியும். அவர் வீட்டுக்கு வரவில்லை என்றால் கண்டிப்பாக நான் சாப்பிட மாட்டேன். அவர் வரும் வரை குடித்துக் கொண்டு மட்டும்தான் இருப்பேன் என்று சபதம் விட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் ரோகினி வீட்டில் நடந்ததை எல்லாம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். அதற்கு மகேஸ்வரி, உன் மாமியார் பிரச்சனை செய்யக்கூடாது என்றால் தூக்கம் மருந்து கொடுத்து விடு. அதற்குள் உன் மாமனார் வந்து விடுவார் என்று ஐடியா தருகிறார்.