கிரிஷின் வாழ்க்கைகாக போராடும் முத்து-மீனா, ரோகினி என்ன செய்ய போகிறார்? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, கிரிஷை சீதாவின் ஹாஸ்பிடலுக்கு கவுன்சிலிங்க்கு அழைத்து போகலாம் என்றார். அதற்கு முத்துவுமே சம்மதித்தார். இதையெல்லாம் கேட்டு ரோகினி அதிர்ச்சியானார். மறுநாள் காலையில் கிரிஷை அழைத்துக் கொண்டு முத்து- மீனா இருவரும் சீதா ஹாஸ்பிடல் போனார்கள். அந்த இடத்திற்கு சரியாக ரோகினி வந்தார். அப்போது சீதா, இவர் தலைவலி விஷயமாக டாக்டரை பார்க்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
அதற்குப்பின் கிரிஷை தனியாக அழைத்து சென்று ரோகினி, என்னை பற்றி எந்த விவரமும் சொல்லக்கூடாது என்றார். அதற்குப்பின் கிரிஷை செக் செய்த டாக்டர், கிரிஷுக்கு ஒன்றுமில்லை. அவருடைய அம்மா இல்லாத ஏக்கம் தான். மற்றபடி அவர் நன்றாக இருக்கிறார் என்றார். இன்னொரு பக்கம் கிரிஷ், ஒரு பையனை அடித்ததால் அந்த பையனுடைய பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்திருந்தார்கள். இதனால் போலீஸ் கிரிசை விசாரிப்பதற்காக ஸ்கூல் வந்திருந்தார்கள். அப்போது ஆசிரியர், மகேஸ்வரிக்கு போன் செய்து நடந்த விவரத்தை சொன்னார். இதை கேட்டு ரோகினி ஷாக் ஆனார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் கிரிஸ் செய்த வேலையால் அந்த சிறுவனுடைய பெற்றோர் கிரிஷை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று புகார் அளித்ததார். இதனால் போலீஸ், கிரிஷை கைது செய்ய பள்ளிக்கூடத்திற்கு வந்திருந்தார்கள். இதை அறிந்த ரோகினி என்ன செய்வது என்று புரியாமல் பதறினார். பின் ஸ்கூலுக்கு வந்த முத்துவிடம் போலீஸ் விவரத்தை சொன்னவுடன் மீனா ஷாக் ஆனார். உடனே முத்து போலீஸிடம் கெஞ்சி கூத்தாடினார். அதற்கு போலீஸ், அந்த சிறுவனின் அப்பா ரொம்ப பெரிய வீடு. அவர் கேஸ் வாபஸ் வாங்கினால் நாங்கள் விட்டுவிடுகிறோம் என்று சொன்னார்.
நேற்று எபிசோட்:
பின் மகேஸ்வரி, கிரிஸ் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டார். பின் ரோகினி, தனக்கு தெரிந்த வக்கீல் இடம் பேசி இருந்தார். ஆனால், வக்கீலுமே இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது என்றார். ரோகினிக்கு ஒண்ணுமே புரியவில்லை. இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவருமே அந்த சிறுவனின் அப்பாவை சந்தித்து பேசி இருந்தார்கள். அதற்கு அந்த சிறுவன் அப்பா, கிரிஷை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று கண்டிப்பாக இருந்தார். உடனே முத்து அவருடைய காலில் விழுந்து கெஞ்சி கதறினார். இருந்தாலுமே அந்த சிறுவனின் அப்பா மனம் இறங்கவில்லை.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கிரிஷ் வாழ்க்கைக்காக முத்து-மீனா இருவருமே அந்த சிறுவனின் வீட்டு வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த சிறுவனின் அப்பா கண்டு கொள்ளவே இல்லை. இருந்தாலுமே முத்து-மீனா இருவருமே அந்த இடத்தை விட்டு நகராமல் இருக்கிறார்கள். கடைசியில் அந்த சிறுவனின் அப்பா, முத்துவை உள்ளே அழைத்து பேசுகிறார். அப்போது முத்து, மன்னிப்பு கேட்டு கெஞ்சுகிறார். உடனே அந்த சிறுவனின் அப்பா, நான் கிரிஷ்க்கு சில டெஸ்ட் வைப்பேன். அதற்கு பிறகு தான் நான் இந்த கேசை வாபஸ் வாங்கலாமா? என்று முடிவு செய்வேன் என்கிறார். அதற்குப்பின் மகேஸ்வரி இடம் போன் செய்து மீனா நடந்ததை சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.